Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க...
931 பேரை கொன்று குவித்து உலகின் கொடூரமான சீரியல் கில்லராக திகழந்த இந்தியன்!
உலகின் மிகக் கொடூரமான சீரியல் கில்லர் என்றாலே அவன் எங்கோ அமெரிக்காவின் கலிபோர்னியா அல்லது டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவனாக இருப்பான். துப்பாக்கி, கையெறி குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்திருப்பான் என நாம் நினைப்போம்.
நூற்றுக்கணக்கில் கொலை செய்த உலகின் டாப் 10 ரண கொடூரமான சீரியல் கில்லர்ஸ்!!
ஆனால், அவன் டெல்லி - ஜபல்பூர் வழியில் வாழ்ந்தவன், வெறும் கர்சீப்பை கொண்டு 931 உயிர்களை கொன்று குவித்தவன் என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பி தான் ஆகவேண்டும். ஓர் இந்தியன் தான் உலகிலேயே மிகவும் அச்சுறுத்தலான, கொடூரமான சீரியல் கில்லராக இருந்துள்ளான்...

தக் பெஹ்ராம்
Thug என்ற வார்த்தைக்கு பெரும்பாலானோருக்கு என்ன பொருள் என்று தெரியாது. Thug என்றால் குண்டர் அல்லது கொள்ளைக்காரன் என்று பொருள். இது ஆங்கிலே சொல்லே அல்ல, இந்தி சொல்லான தக் "Thag"ல் இருந்து மருவிய சொல்.

தக் பெஹ்ராம்
18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தக் பெஹ்ராம் என்ற கொள்ளையர்களின் தலைவனின் பெயரில் இருந்து தான் இந்த சொல் வந்தது என சிலர் கூறுகின்றனர்.

931 உயிர்கள்
தக் பெஹ்ராம் எனும் இவன் மனித குணம் படைத்தவேனே அல்ல, மிருக குணம் கொண்டவன். இவன் 931 உயிர்களை கொன்று குவித்த சீரியல் கில்லர்.

மதம் பிடித்த மிருகங்கள்
தக் பெஹ்ராம் மற்றும் இவனது கூட்டம் பல கொலைகளை பணத்திற்காகவோ, பொருளுக்காகவோ இன்றி மதத்தின் பேரில் நடந்தவை எனவும் கூறப்படுகிறது.

பயம்
டெல்லி, ஜபல்பூர், குவாலியர் போன்ற பகுதிகளின் வழியாக வணிகம் செய்ய பயணிப்பவர்கள் உயிரின் மீது பயம் கொண்டு தக் பெஹ்ராம் இருக்கும் வழியை தவிர்த்து வேறு வழியில் பயணிக்க ஆரம்பித்தனர்.

மஞ்சள் கர்சீப்
ஒரு மெடல் பாதிக்கப்பட்ட மஞ்சள் கர்சீப்பை பயன்படுத்தி, கழுத்தை நெரித்துக் கொல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

மாயம்
1800-களின் தொடக்கத்தில் திடீரென சுற்றுலா பயணிகள், வீரர்கள், நாடோடிகள் உட்பட பலர் மாயமாகினர். இது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. போலீஸ் குழம்பி போய் காணப்பட்டது. 1809-ல் கேப்டன் வில்லியம் ச்லீமேன் தான் இந்த மர்மத்தை கண்டுபிடிக்க வந்தார்.

பெஹ்ராம் கூட்டம்
பெஹ்ராம் மற்றும் அவனது 200 க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. டெல்லி - ஜபல்பூர் வழியில் நிறைய பொறிகள் வைத்து பெஹ்ராம் கூட்டத்தை பிடிக்க இவர்கள் திட்டமிட்டனர்.

திடுக்கிடும் தகவல்
ச்லீமேன் மற்றும் அவரது படை பெஹ்ராம் மற்றும் அவனது கூட்டத்தை சேர்ந்தவர்களை பிடிக்க பெரும் முயற்சி எடுத்தனர். ஏறத்தாழ பத்து வருடங்கள் கழித்து அவர்கள் பெஹ்ராமின் கூட்டத்தை கைது செய்தனர்.

திடுக்கிடும் தகவல்
அப்போது தான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்தது. பெஹ்ராம் கூட்டத்தினர், வணிகர்களை போலவே பயணித்து அவர்களை கடத்தி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

திடுக்கிடும் தகவல்
ராமோசி "Ramosi" எனும் பாஷையை பயன்படுத்தி இவர்களுக்குள் உரையாடிக் கொண்டு, அவர்களை நேரம் வரும் போது மஞ்சள் கர்சீப்பை கொண்டு கழுத்தை நெரித்து கொன்று, அருகில் இருக்கும் கிணறுகளில் புதைத்துவிட்டு சென்றுவிடுவோம் என்று பெஹ்ராம் கூட்டாளிகள் கூறினார்.

முடிவு
தக் பெஹ்ரம் அவனது 74-வது வயதில் 1840-ல் தான் கைது செய்யப்பட்டான். இவன் இவனது வாழ்நாளில் 931 கொலைகளை செய்துள்ளான். இவனை தூக்கில் இட்டு கொன்றனர். பெஹ்ராம் செய்த கொலைகளுக்கு குறைந்தது இவனுக்கு 65 தூக்கு தண்டனையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

காளி
தக் பெஹ்ராம் காளியை தொடர்ந்து வணங்கி வந்த பெரும் பக்தனாக இருந்துள்ளான். அப்பாவி மக்களை, மதத்தின் பெயரில் கொன்று குவித்த தக் பெஹ்ராம், இந்த செயல் காளியை மகிழ்விக்கும் எனவும் கருதி வந்துள்ளன்.



Click it and Unblock the Notifications











