Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
உங்க மணிக்கட்டு வரிகள் உங்களை பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா?
கை ரேகை ஜோதிடம் பார்க்கும் போது பெரும்பாலும் ஜோதிடர்கள் உள்ளங்கைகளில் அமைந்திருக்கும் வரிகளை கண்டு தான் ஒருவரது வாழ்க்கையின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்க் காலத்தை பற்றி குறிப்பிட்டு கூறுவார்கள். மற்றும் இந்த கை ரேகை ஜோதிடத்தின் மூலம், ஒருவரது ஆரோக்கியம், வாழ்க்கை, ஆயுள், தொழில் ரீதியான தகவல்கள் மற்றும் உறவுகள் குறித்தும் கூறப்படுகிறது.
10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்!
ஆனால், உள்ளங்கை ரேகைகள் மட்டுமின்றி கை மணிக்கட்டு பகுதியில் அமைந்திருக்கும் வரிகளை வைத்தும் கூட ஒருவரின் வாழ்க்கை, ஆயுள், ஆரோக்கியம், தொழில் போன்றவை பற்றி கூற முடியும் என கூறுகிறார்கள். அது எப்படி மற்றும் உங்கள் மணிக்கட்டு வரிகள் உங்கள் வாழ்க்கையை பற்றி என்ன கூறுகிறது என இனிக் காணலாம்...

ரேகை / வரிகள்
பொதுவாக கைகளில் குறுக்கும், நெடுக்குமாக அமைந்திருக்கும் கை ரேகைகள் வைத்து தான் ஜோதிடம் கூறப்படும். ஆனால், நமது கை மணிக்கட்டில் இருக்கும் வரிகளை வைத்தும் கூட ஆரோக்கியம், உறவுகள் மற்றும் வாழ்க்கையை பற்றி கூறலாம். உள்ளங்கை மற்றும் கையை இணைக்கும் மணிக்கட்டிலும் கூட ஓரிரு வரிகள் ரேகை போன்று அமைந்திருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இதை ஆங்கிலத்தில் Bracelet Lines / Rascette lines என்று கூறுகிறார்கள்.

மணிக்கட்டு இரகசியங்கள்
இதை மெட்டாபிசிக்ஸ் (metaphysics) என்றும் கூறுகிறார்கள். இந்த மணிக்கட்டு வரிகளை வைத்து நமது ஆயுளை கூட கூறமுடியும் என்கிறார்கள்.

எண்ணிக்கை
உங்கள் கை மணிக்கட்டு ரேகை வரிகள் எவ்வளவு இருக்கின்றன என முதலில் எண்ணுங்கள். ஒரே ஒரு வரி தான் இருக்கிறது எனில், அவரது ஆயுள் 25- 35 எனவும், இரண்டு வரிகள் இருக்கிறது எனில் 45 - 57 எனவும், மூன்று வரிகளுக்கு மேல் இருந்தால் 85 வயது ஆயுள் எனவும் குறிப்பிட்டுக் கூறுகிறார்கள். பொதுவாக அனைவருக்கும் இரண்டு முதல் மூன்று வரிகளும், அரிதாக சிலருக்கு ஒன்று அல்லது நான்கு வரிகளும் இருக்கும்.

முதல் வரி
முதல் வரி மிக தெளிவாகவும் பிரிவு இல்லாமல் இருந்தால், நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உடற்திறனுடனும் இருப்பீர்கள். ஒருவேளை முதல் வரி பிரிவுடன் இருந்தால் அந்த நபர் பொறுப்பற்றும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பார் என்று கூறப்படுகிறது.

பெண்களுக்கு
பெண்களுக்கு மணிக்கட்டு வரிகளில் நெளிவு சுளிவுகளுடன் இருந்தால் அவர்களுக்கு மகளிர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. மற்றும் கருத்தரிக்கும் போதும் அவர்கள் சற்று சிரமப்படுவார்கள். மாதவிடாய் நாட்கள் தள்ளி போவது போன்ற கோளாறுகளும் நிகழலாம்.

ஆண்களுக்கு
ஆண்களுக்கு முதல் மணிக்கட்டு வரி நெளிவி சுளிவுடன் இருந்தால், அவருக்கு சிறுநீர், புரோஸ்டேட் மற்றும் இனப்பெருக்க குறைபாடுகள் ஏற்படலாம்.

இரண்டாவது மணிக்கட்டு வரி
இரண்டாவது மணிக்கட்டு வரி, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு குறித்தது. இந்த வரி தெளிவாக, எந்த பிரிவுகளும் இன்றி இருந்தால் உங்களுக்கு நிறைய நல்லவை நடக்கும் என்றும், பிரிவுகள் இருக்கும் சமயத்தில் சற்று தடங்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மூன்றாவது வரி
இந்த மூன்றாவது மணிக்கட்டு வரி உங்களது தொழில் மற்றும் வேலையை குறிப்பது. இந்த வரி தெளிவாக இருக்கும் பட்சத்தில் இவரது தொழில் மற்றும் வேலைகளில் எப்போதுமே ஏறுமுகமாக காணப்படுவார் என்று கூறுகிறார்கள்.

நான்காவது வரி
நான்காவது வரி இருப்பது என்பது மிகவும் அரிதானது. இந்த வரி இருந்தால் அது மூன்றாவது வரியுடன் இணை வரி போல தான் இருக்கும். இது மூன்றாவது வரிக்கு பலமாக அதாவது, உங்கள் தொழில் மற்றும் வேலை ரீதியான செயல்பாடுகளுக்கு வலுவளிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நான்கு வரிகள் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் மரணம் அடையலாம் என்றும் கூறுகிறார்கள்.

முக்கிய குறிப்புகள்
முதல் வரி தடித்தும், இரண்டாவது மூன்றாவது வரி சற்று மெல்லிசாகவும் இருந்தால் அந்த நபர் குழந்தை பருவத்தில் செழிப்பாகவும், நடுவயதில் சற்று பின்தங்கி மேலும், கடைசியில் மீண்டெழுந்து வரும் நபராக இருப்பார் என குறிப்பிடப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்
ஒருவரது மணிக்கட்டு வரிகளில் கொக்கி போன்ற குறி ஏதேனும் இருக்கிறது எனில், அவருக்கு ஆளுமை திறன் அதிகம் இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்
மணிக்கட்டு வரிகள் அமைந்திருக்கும் இடத்தில் சங்கிலி போன்ற தோற்றம் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் போராட்டங்கள் நிறைந்திருக்கும், ஆயினும் அவர்கள் அந்த பயணத்தை விரும்பி மேற்கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications