Latest Updates
-
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
உடலுறவில் ஈடுபடுவது போல கனவு வருவது ஏன் தெரியுமா?
கனவு என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், சிலருக்கு எப்போதுமே காதல் வயப்படுவது போலவே கனவு வரும், சிலருக்கு கோவிலுக்கு செல்வது, கடவுளை தரிசிப்பது போன்ற கனவுகள் வரும். இது அவரவர் வாழ்வியலை பொருத்தது.
ஆண்களே! அடிக்கடி தூக்கத்தில் தானாக விந்து வெளியேறுகிறதா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்!
ஆனால், சிலருக்கு அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவது போன்ற கனவு வரும். அதுவும், அவர்களுக்கு சம்மந்தமே இல்லாத நபர்களுடன் உறவில் ஈடுபடுவது, அல்லது மிக நெருங்கிய நபருடன் சேர்ந்து வருவது சில சமயங்களில் சங்கடத்தை உருவாக்கும்.
இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்?
அவர்களை பற்றி அவ்வாறு தவறாக ஏதும் எண்ணாத போதும், இதுப் போன்ற கனவுகள் வருவது ஏன்?

காட்சி நிலை
உங்கள் கனவில் வரும் யாவரும், நீங்கள் காட்சி நிலைப்படுத்துவதன் காரணமாக வருபவர்கள் ஆவர். உங்களுக்கு தெரியாத யாவரும் உங்கள் கனவில் வர மாட்டார்கள்.

வேலை
நீங்கள் வேலை செய்துக் கொண்டிருக்கும் அல்லது வேலை செய்ய விரும்பும் இடங்கள், செயல்கள் தான் உங்கள் கனவில் பெரும்பாலும் வரும்.

ஆழ்ந்த பதிவு
உங்கள் உணர்ச்சியின் அல்லது செயல்பாட்டின் தாக்கம் போன்றவற்றின் மூலமாக தெரிந்தோ, தெரியாமலோ மனதில் பதியும் அந்த ஆழ்ந்த பதிவு தான் உங்கள் கனவில் பிரதிபலிக்கின்றன.

பிணைப்பும், இணைப்பும்
பெண்மை குறித்து அல்லது பெண்களோடு நமக்கு இருக்கும் பிணைப்பு, இணைப்பு, மற்றும் பெண்களோடு சேர்ந்து நாம் பழகும் விதம் போன்றவற்றின் வெளிப்பாடுகள் இவ்வாறான கனவுகளாக வரக்கூடும்.

பெண்மை பற்றிய உணர்சிகள்
பெண்மை குறித்து உங்களுக்குள் அதிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் நினைவுகள் மற்றும் உணர்சிகளின் விளைவாக கூட சிலருக்கு உடலுறவில் ஈடுபடுவது போன்ற கனவுகள் வரலாம்.

கானல்
நீங்கள் கனவில் உறவில் ஈடுபதுவது போன்ற நபரை நீங்கள் அவ்வாறான எண்ணத்தில் காணாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், ஒருசில எண்ணங்களின் கலவையாக கூட அந்த கனவு, அந்த நபருடன் உறவில் ஈடுபடுவது போல வந்திருக்கலாம்.

மூன்றில் இருந்து ஒன்பது வரை
ஓர் இரவில் நமக்கு மூன்றில் இருந்து ஒன்பது வேறுப்பட்ட கனவுகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன. இவை யாவும் நமது நினைவில் பதியாது, ஒருசில சமயத்தில் ஓரிரு கனவுகள் பதியலாம், சில சமயத்தில் மொத்தமாக குழப்பம் மட்டுமே மிஞ்சும், எந்த கனவும் நினைவில் இருக்காது.

விடைகளாக கூட இருக்கலாம்
சிலருக்கு வரும் கனவுகள் அவர்களுக்கு ஏற்பட்டிற்கும் பிரச்சனைக்கான தீர்வாக கூட இருக்கும். ஓர் பிரச்சனைக்கான தீர்வை எண்ணி நீங்கள் உறங்கும் பட்சத்தில், கனவில் கூட அதற்கான தீர்வு கிடைக்கலாம்.

நட்பு , காதல்
சிலருக்கு தங்கள் தோழியுடன் காதலில் இருப்பது போன்று கூட கனவு வரும். இவை எல்லாம் ஏதோ ஓர் மூலையில் ஆழ்மனதில் பதிந்த எண்ணம் அல்லது அவர்களது செயல் ஏதாவது நீங்கள் காதல் போன்று எண்ணியது அல்லது பெண்மையை நீங்கள் பெரிதாக உணராதிருப்பது போன்றவற்றின் காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications