Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கூடுதலான உடல் பாகங்களைக் கொண்ட வினோதமான மனிதர்கள்!
குழந்தையைப் பெற்றெடுக்கும் அனுபவத்திற்கு இணையாக வேறு எதுவும் வர முடியாது. பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தையைப் பார்க்கும் போது ஒவ்வொரு பெற்றோரின் முகத்தில் எழும் புன்னகையே தனி தான்.
ஆனால், சில நேரங்களில் பிறக்கும் குழந்தையின் உருவத்தில் சற்று வித்தியாசமாக இருந்தால் எப்படி இருக்கும்? அதை ஏற்றுக் கொள்வது என்பது சற்று கடினமாகத் தான் இருக்கும்.
இருப்பினும், இது கடவுள் தனக்கு அளித்த குழந்தை என்று பெற்றோர்கள் சந்தோஷமாக ஏற்று, அக்குழந்தைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முயல்கின்றனர்.
இங்கு அப்படி உலகில் கூடுதலான உடல் பாகங்களைக் கொண்ட சில மனிதர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

31 விரல்களுடன் சிறுவன்
சீனாவில் ஒரு சிறுவன் 31 கை மற்றும் கால் விரல்களுடன் பிறந்துள்ளான். 2010 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சையின் மூலம் கூடுதலான மூட்டுகள் நீக்கப்பட்டு, தற்போது சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான்.
Image Courtesy

8 கை கால் உறுப்புக்களுடன் சிறுமி
இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி என்று சிறுமி 8 கை கால் உறுப்புக்களுடன் பிறந்திருந்தாள். நகர்வதற்கே மிகுந்த சிரமத்தை சந்தித்த அச்சிறுமிக்கு சரியான அறுவை சிகிச்சையின் மூலம் ஒட்டியிருந்த எஞ்சிய கை, கால் உறுப்புக்கள் நீக்கப்பட்டு, தற்போது அச்சிறுமி மற்ற குழந்தைகளைப் போல் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்கிறாள்.
Image Courtesy

பாதங்களில் மார்பக காம்புகள்
ஒரு பெண்மணி வலது காலின் பாதத்தில் 2 இன்ச் உள்ள மார்பக காம்புடன் வாழ்ந்து வருகிறார். இதுக் குறித்து அப்பெண்ணிடம் கேட்கையில், இதனால் நடக்கும் போது எவ்வித வலியும் தெரியவில்லையாம்.
Image Courtesy

2 பிறப்புறுக்களுடன் பெண்
கேஸான்டிரா பங்க்சன் என்னும் 22 வயது பெண் 2 பிறப்புறுப்புக்களுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு அசாதாரண மாதவிடாய் சுழற்சியுடன், அடிவயிற்றில் ஏதோ ஒன்று அசைவது போன்றும், வலியையும் உணர்ந்தார். இதனால் மருத்துவரை அணுகி சோதித்துப் பார்த்ததில், அவருக்கு 2 பிறப்புறுப்புக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
Image Courtesy

முதுகில் கரு வளர்ச்சியைக் கொண்ட சிறுமி
சீனாவில் முதுகில் அசாதாரண கரு வளர்ச்சியைக் கொண்டவாறு யின் ஸின் என்னும் சிறுமி பிறந்துள்ளாள். இச்சிறுமி வளர வளர முதுகில் உள்ள கருவும் வளர்ச்சியடைந்தது. ஒரு கட்டத்தில் இச்சிறுமியின் முதுகில் உள்ள கரு மனித உருவைப் பெற்றது. பின் அறுவை சிகிச்சையின் மூலம் முதுகில் வளர்ந்த கரு நீக்கப்பட்டுவிட்டது.
Image Courtesy

இரு இதயங்களுடன் ஒரு மனிதன்
இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் பிறக்கும் போது சாதாரணமாக தான் இருந்தார். ஒருமுறை இவருக்கு மாரடைப்பு வந்தது. இவரை மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதித்த போது இவருக்கு இரு இதயங்கள் இருப்பது தெரிய வந்தது. நல்ல வேளை ஒரே சமயத்தில் இரு மாரடைப்பைத் தாங்கிய இவர் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
Image Courtesy

மார்பகத்தில் 4 கை கால் உறுப்புகளுடன் ஒரு சிறுவன்
ஒரு சிறுவனுக்கு மார்பக பகுதியில் 4 கை,கால் உறுப்புக்கள் ஒட்டியவாறு இருந்தது. அருகில் உள்ள கிராமத்து வாசிகள், மார்பகத்தில் நீளமான கால்களுடன் இருப்பதால், இந்த சிறுவனை சாத்தனாக நினைத்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சரியான அறுவை சிகிச்சையின் மூலம் இச்சிறுவனின் மார்பக பகுதியில் உள்ள எஞ்சிய கை,கால் உறுப்புக்கள் நீக்கப்பட்டு, தற்போது அச்சிறுவன் மற்ற குழந்தைகளைப் போல் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.
Image Courtesy

இரு முகங்களுடன் குழந்தை
சீனாவில் காங்காங் என்னும் குழந்தை முகத்தில் மாஸ்க் அணிந்திருப்பது போன்று இரு முகங்களுடன் பிறந்தது. அதிர்ஷ்டவசமாக, இக்குழந்தையின் பெற்றோர்கள் போதிய நிதியைத் திரட்டி, அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தற்போது அக்குழந்தையின் முகம் சரிசெய்யப்பட்டுவிட்டது.
Image Courtesy



Click it and Unblock the Notifications
