உலகில் கொண்டாடப்படும் சில கிறுக்குத்தனமான பண்டிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட பண்டிகைகள் அல்லது விழாக்கள் மற்றும் சடங்குகள் உள்ளன. இதனால் மக்களை ஒன்றிணைப்பதோடு, நகைச்சுவைமிக்கதாகவும், சற்று சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கும்.

இங்கு உலகில் கொண்டாடப்படும் சில கிறுக்குத்தனமான பண்டிகைகள் அல்லது விழாக்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாங்க்ரான் பண்டிகை, தாய்லாந்து

சாங்க்ரான் பண்டிகை, தாய்லாந்து

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம், தாய்லாந்தில் உள்ள மக்கள் ஆராவாரத்திலும், சந்தோஷத்திலும் மூழ்கியிருப்பார்கள். ஏனெனில் இம்மாதத்தில் தான் தாய்லாந்தில் சாங்க்ரான் என்னும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இது அவர்களது புத்தாண்டு கொண்டாட்டமாகும். இம்மாதத்தில் தண்ணீர் பிஸ்டல், துப்பாக்கி மற்றும் வாளியில் நீரைக் கொண்டு ஒருவர் மீது மற்றொருவர் ஊற்றி கொண்டாடி மகிழ்வார்கள்.

Image Courtesy

துனராமா பண்டிகை, ஆஸ்திரேலியா

துனராமா பண்டிகை, ஆஸ்திரேலியா

துனராமா என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல. இது ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் கொண்டாடப்படும் ஒரு போட்டியைக் கொண்ட விழா. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளரும் ஆரம்பத்தில் 8-10 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் டூனா மீனை தூக்கி எறிய வேண்டும். இறுதிச் சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு தான் உண்மையான டூனா மீன் தூக்கி எறிய வழங்கப்படும்.

Image Courtesy

முள்ளங்கி திருவிழா, மெக்ஸிகோ

முள்ளங்கி திருவிழா, மெக்ஸிகோ

மெக்ஸிகோவில் கொண்டாடப்படும் ஒரு வினோதமான பண்டிகை தான் முள்ளங்கி திருவிழா. இந்த விழாவும் போட்டியைக் கொண்டது. இந்த திருவிழாவில் பங்கு கொள்வோர் முள்ளங்கியைக் கொண்டு பல சுவாரஸ்யமான ஓவியத்தை உருவாக்குவார்கள். இந்த திருவிழாவானது கிறிஸ்துமஸ் காலத்தில் நடக்கும்.

Image Courtesy

கோனகி சுமோ, ஜப்பான்

கோனகி சுமோ, ஜப்பான்

இந்த நகைச்சுவைமிக்க நிகழ்ச்சியானது சுமோ மல்யுத்த வீரர்கள் தங்களது கையில் கைக்குழந்தையைத் தூக்கியவாறு களத்தில் இறங்குவார்கள். இந்த போட்டியானது, எந்த மல்யுத்த வீரரின் கையில் உள்ள குழந்தை முதலில் அழுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த விழாவானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் ஜப்பானில் உள்ள கோவில்களில் நடைபெறும். 400 வருடங்களாக இந்த பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஜப்பானிய மக்கள், இந்த போட்டியின் போது அழும் குழந்தை வேகமாக வளர்வதாக நம்புகின்றனர். மேலும் இன்றும் இந்த நம்பிக்கை அங்குள்ள மக்களிடம் உள்ளது.

Image Courtesy

பொலாஸ் டி ஃபூகோ, சன் ஸ்யால்வடார்

பொலாஸ் டி ஃபூகோ, சன் ஸ்யால்வடார்

20 ஆம் நூற்றாண்டில், சன் ஸ்யால்வடாரில் உள்ள நெஜப்பா என்னும் நகரம் எரிமலை வெடிப்பால், அழிந்தது. இந்நிகழ்வை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும், கந்தல்துணியை பந்து போல் செய்து மண்ணெண்ணையில் 1 மாதம் ஊற வைத்து, பின் நெருப்பூட்டுவார்கள். இந்நிகழ்வின் போது, அங்குள்ள மக்கள் மெக்ஸிகன் காபியைக் குடித்துக் கொண்டு, ஆட்டம் பாட்டம் என குதூகலமாக இருப்பார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top craziest festivals from around the world

Here are some craziest festivals from around the world. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter