ஆஸ்கர் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோவின் 23 ஆண்டுக்கால கனவுப் பயணம்!

Posted By:
Subscribe to Boldsky

ஆஸ்கர் மீது தீராத தாகம் கொண்டவர் லியோனார்டோ டிகாப்ரியோ. ஆஸ்கருக்கான இவரது பயணம் கடந்த 1993-ல் தொடங்கி இன்று வரை நீடித்துக் கொண்டே போகிறது. பல திரைப்படங்களில் தனது அபரிமிதமான நடிப்பை வெளிக்கொண்டு வந்து ஆஸ்கர் விருதை தட்டி பறித்து முத்தமிட வேண்டும் என்பது இவரது தீராத தாகம்.

ஒவ்வொரு முறையும் விருதை நெருங்கி ஏமாற்றத்துடன் திரும்பும் போதிலும், ஒருபோதும் இவரது அடுத்த முயற்சியில் இவர் சோர்வடைந்தது இல்லை. இம்முறை தி ரிவெனன்ட் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட லியோனார்டோ டிகாப்ரியோ ஆஸ்கர் வென்று தனது நீண்டநாள் தாகத்தை தீர்த்துக் கொண்டுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாட்ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்

வாட்ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்

கடந்த 1993-ம் ஆண்டு வெளிவந்த வாட்ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப் (What's Eating Gilbert Grape) சிறந்த சப்போர்ட்டிங் நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு முதல் முறையாக பரிந்துரைக்கப் பட்டார் லியோனார்டோ டிகாப்ரியோ. ஆனால், அவரால் அந்த முறை விருது வெல்ல முடியவில்லை.

டைட்டானிக்

டைட்டானிக்

உலக மக்களை கண்ணீர் சிந்த வைத்த காதல் காவியம் டைட்டானிக். ரசிகர்களை ஈர்த்தது, விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. வசூலிலும் நம்பர் 1 இடத்தை பெற்றது இந்தப்படம். ஆனால், பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் கூட லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் இடம்பெறாதது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

தி ஏவியேட்டர்

தி ஏவியேட்டர்

பிறகு கடந்த 2005-ம் ஆண்டு மீண்டும் தி ஏவியேட்டர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர். ஆனால், ஜேமி ஃபாக்ஸ் என்பவர் ரே எனும் படத்திற்காக ஆஸ்கரை தட்டி சென்றுவிட்டார்.

ப்ளட் டைமன்ட்

ப்ளட் டைமன்ட்

அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே மீண்டும் 2007 ஆஸ்கர் விருது சிறந்த நடிகருக்கான பிரிவில் ப்ளட் டைமன்ட் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டார் லியோனார்டோ டிகாப்ரியோ. ஆனால், சில புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடமே கிடைத்தது லியோனார்டோ டிகாப்ரியோவிற்கு. தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து படத்திற்காக பிலிப் ஹாஃப்மேன் விருதை தட்டி சென்றார்.

இன்செப்ஷன்

இன்செப்ஷன்

கடந்த 2010-ம் ஆண்டு இன்செப்ஷன் திரைப்படத்திற்காக இவர் கட்டாயம் விருது வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் கூட லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் இடம்பெறாதது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

தயாரிப்பாளராகவும் ஆஸ்கரை வெல்ல முடியவில்லை

தயாரிப்பாளராகவும் ஆஸ்கரை வெல்ல முடியவில்லை

2014-ம் ஆண்டு , தி வுல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட் படத்திற்காக சிறந்த தயாரிப்பாளருக்கான ஆஸ்கர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்தார் லியோனார்டோ டிகாப்ரியோ. ஆனால் இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.

தி ரிவெனன்ட்

தி ரிவெனன்ட்

இம்முறை 2016 ஆஸ்கருகான சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் லியோனார்டோ டிகாப்ரியோ. இந்த திரைப்படம் இவருக்கு பல விருதுகளை வாங்கி தந்தது. இவரது ஆஸ்கர் பசிக்காகவே எடுக்கப்பட்ட படம் இதுவென விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

கனவு மெய்ப்படுமா?

கனவு மெய்ப்படுமா?

லியோனார்டோ டிகாப்ரியோவின் ஆஸ்கர் கனவு தி ரிவெனன்ட் மூலமாக நிறைவடைந்துள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்று தனது தாகத்தை தீர்த்துக் கொண்டுள்ளார்லியோனார்டோ டிகாப்ரியோ

லியோனார்டோ டிகாப்ரியோவின் ட்வீட்!

ஆஸ்கர் வென்ற லியோனார்டோ டிகாப்ரியோவின் ட்வீட்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Thrist Of Leonardo DiCaprio On Academy Award

Everytime when oscar nominations announced, it will be thriller effect for Leonardo Dicaprio and his fans.
Story first published: Monday, February 29, 2016, 10:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter