இவ்வளவு கேவலமான எண்ணம் கொண்ட ஆண்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

Posted By:
Subscribe to Boldsky

காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் காதல் வரும். ஒருவருக்கு காதல் வேகமாக வரலாம். ஆனால் அந்த காதல் தோல்வியடையும் போது, அதனால் சில மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். ஒருவர் நம்மை ஏமாற்றிய பின், முதலில் அவரது மனதில் பழி வாங்கும் எண்ணம் தான் மேலோங்கும்.

அந்த வகையில் இங்கு காதல் தோல்வியடைந்ததால், மிகுந்த கோபத்திற்குள்ளாகிய சில ஆண்கள் செய்த சில மோசமான செயல்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சிலர் காதலித்துக் கொண்டிருக்கும் போதே துன்புறுத்தியுள்ளவர்கள். அதில் ஒருவன் கை, கால் இல்லாத தன் காதலியை அடித்து துன்புறுத்தியுள்ளான். சரி, அந்த மோசமான ஆண்களைப் பற்றி தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலியல் படங்கள் அனுப்பிய ஆண்

பாலியல் படங்கள் அனுப்பிய ஆண்

டேவிட் சிம்மோன்ஸ் தன் முன்னாள் காதலி தன்னுடன் பாலியல் செயலில் ஈடுபடும் போது, காதலிக்கு தெரியாமலேயே போட்டோக்களை எடுத்துள்ளான். காதல் தோல்வியடைந்த பின், அந்த போட்டோக்களை வைத்து ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை ஒன்றை செய்து தன் முன்னாள் காதலியின் குடும்பத்திற்கு அனுப்பியுள்ளான். என்ன ஒரு கேவலமான புத்தி கொண்டவன் பாருங்கள்!

Image Courtesy

கருவுற்ற காதலியிடம் திருடியவன்

கருவுற்ற காதலியிடம் திருடியவன்

வின்சன் என்னும் பெயரைக் கொண்ட ஒருவன், பீர் வாங்க பணம் கேட்டு தராததால், தான் காதலித்து திருமணம் செய்து பிரசவத்திற்கு தயாராக இருந்த காதலியின் தலையில் அடித்து, கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளான். நல்ல வேளை, அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலமாக உள்ளாள்.

Image Courtesy

காதலியை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டவன்

காதலியை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டவன்

ஜேம்ஸ் ஸ்டைப்பின் என்பவன் தன் முன்னாள் காதலியுடன் எடுத்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் போட்டு, தன் காதலியை பலாத்காரம் செய் ஒரு ஆக்கிரோஷமான மனிதனைத் தேடி விளம்பரமிட்டார். அந்த விளம்பரத்தைப் பார்த்து ஒருவர் ஒப்புக் கொள்ள, அவருடன் முன்னாள் காதலியின் வீட்டிற்குள் நுழைந்து, காதலியைக் கட்டிப் போட்டு, கத்தி முனையில் காதலியை பலாத்காரப் படுத்தினர். பின் இந்த உண்மை வெளியே தெரியவர, ஜேம்ஸ் பாலியல் தாக்குதல் செய்ய சதி செய்ததாக குட்டம் சாட்டி சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது.

Image Courtesy

கை, கால் இல்லாத காதலியை அடித்த காதலன்

கை, கால் இல்லாத காதலியை அடித்த காதலன்

ஜாக்கோபை ஸ்மித், கை, கால் இல்லாத பெண்ணை காதலிப்பதால் பார்க்க பரந்த மனம் கொண்டவராக காணப்படலாம். ஆனால், அவர் தன் காதலியின் முகத்தில் 10 முறை கடுமையாக தாக்கி துன்புறுத்தியுள்ளான். இது வெளியே தெரியும் போது, தன் சுய பாதுகாப்பிற்காக அடித்ததாக சொல்கிறான். நம்ப முடிகிறதா?

Image Courtesy

எச்.ஐ.வி இல்லை என்று கூறி உறவு கொண்டவன்

எச்.ஐ.வி இல்லை என்று கூறி உறவு கொண்டவன்

டியோன் லாங் என்பவன், தன் காதலியுடன் படுக்கையில் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டான். ஆகவே அவன் தனக்கு எச்.ஐ.வி எதுவும் இல்லை என்று போலியான ரிபோர்ட் ஒன்றைக் காட்டி, தனக்கு எச்.ஐ.வி இருப்பதை மறைத்து உறவு கொண்டான். இப்படி பொய் கூறி உறவு கொண்டதால், அவன் மோசடி குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Meet The World’s Worst Boyfriends

    Find out about the most disgusting boyfriend stories. These are the people who ruined their girlfriends life for the worse. Read on to know more..
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more