முத்தம் கொடுத்தால் தான் வேலை - கொடூர பாஸ், இணையத்தில் கசியவிட்டு சிக்கவைத்த கேர்ள்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

தமிழ்நாடு, இந்தியா என்று மட்டுமில்லை உலகளவில் பெண்கள் சமையல் அறையை விட்டு வெளிவந்து, படித்து, உலகை வெற்றிக் கொள்ள எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்பது சொல்லிமாளாது. முக்கியமாக தொழில் செய்யும் பெண்களை காட்டிலும் மாத சம்பளத்திற்கு வேலைக்கு போகும் பெண்கள் தான் அதிக தர்மசங்கடமான சூழல்களை எதிர்க் கொள்கின்றனர்.

Male Boss Forces Female Employees To Line Up And Kiss

Image Source

உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, மன ரீதியாக, ஏளனப் பேச்சால், ஆண்களால் பல துன்பங்களை தாண்டி தான் அவர்கள் தாங்கள் விரும்பும் தங்கள் துறையில் சாதிக்க வேண்டியுள்ளது. எப்போதுமே சீனா என்றால் விசித்திரம் தான். இதோ இணையத்தில் வைரலாகி வரும் சீனாவில் நிகழ்ந்த மற்றுமொரு கேவலமான விசித்திர சம்பவம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எந்த கம்பெனி?

எந்த கம்பெனி?

வீடியோ கசிந்துள்ள இந்த கம்பெனி பீஜிங்கில் உள்ள டோங்ஃஷூ எனும் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த கம்பெனியின் பாஸ் தான், தினமும் காலையில் முத்தம் கேட்டு, இப்போது இணையத்தில் சிக்கியுள்ளார்.

Image Source

பெண்கள் அதிகம்!

பெண்கள் அதிகம்!

இந்த கம்பெனி வீடுகள்ல் சொந்தமாக பீர் வடிக்கும் மெஷின்களை தயாரிக்கிறது. இந்த கம்பெனியில் அதிகமாக பெண்கள் தான் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

ஓனர் கூறுவது என்ன?

ஓனர் கூறுவது என்ன?

அந்த பாஸ் மற்றும் கம்பெனியின் ஓனர் இதுப்போன்று முத்தமிட்டு அந்த நாளின் வேலையை துவங்குவதால், ஊழியம் செய்யும் பெண்கள் உத்வேகம் அடைகின்றனர் என்கிறார். இது முதலாளி, உழைப்பாளி மத்தியில் ஆரோக்கியமான பந்தத்தை உருவாக்குகிறதாம்.

Image Source

எதிர்ப்பு!

எதிர்ப்பு!

ஆனால், இது போன்ற செய்கை, நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கது என சீனாவிலேயே பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நெட்டிசன்கள் பலர் இதை தடை செய்ய வேண்டும் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர்.

ரிசைன்!

ரிசைன்!

இந்த செயலுக்கு முன்வராத பெண் ஊழியர்கள் தங்கள் வேலையை ரிசைன் செய்துவிட்டு போகட்டும் என்கிறார் பாஸ்.

இதோ அந்த வீடியோ பதிவு!

இணையத்தில் வைரலாக பரவும் காலையில் முத்தத்துடன் வேலையை துவங்கும் பாஸ்-ன் வீடியோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Male Boss Forces Female Employees To Line Up And Kiss

Male Boss Forces Female Employees To Line Up And Kiss Him Every Morning In China
Story first published: Thursday, October 13, 2016, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter