Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
உலகில் இருக்கும் சில சைகோ பெண் கொலையாளிகள்!
சைகோ கொலையாளிகளைப் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம். மேலும் சைகோ கொலையாளி என்றால் அது ஓர் ஆணாகத் தான் இருக்க முடியும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் சைகோ பெண் கொலையாளிகளும் உலகில் உள்ளனர்.
இக்கட்டுரையில் உலகில் உள்ள சில சைகோ பெண் கொலையாளிகள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள சைகோ பெண் கொலையாளிகளுள் சிலர் பார்க்க ஒன்றும் தெரியாதவர்கள் போலும் மற்றும் சிலர் பார்ப்பதற்கே பயத்தை ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பர்.
இவர்கள் எத்தனை பேரைக் கொன்று குவித்துள்ளார்கள் என்பதை கேட்டால், நீங்களே அதிர்ச்சி அடைவீர்கள். சரி, இப்போது உலகில் இருக்கும் சைகோ பெண் கொலையாளிகள் பற்றி காண்போமா!!!

சிரிக்கும் பாட்டி
ஓக்லஹோமாவைச் சேர்ந்த இப்பெண், மிகவும் நட்புள்ளவராகவும், நல்ல மனைவியாகவும், நல்ல பெற்றோராகவும், அனைவரிடமும் நன்கும் பழகி வந்தனர். ஆனால் இப்பெண் 11 பேர் அடங்கிய தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் தனியாக கொன்று குவித்தார் என்றார் பாருங்கள். அதிலும் இப்பெண் அர்சனிக் என்னும் விஷத்தைப் பயன்படுத்தி, தன் 5 கணவர்களையும், தன் குழந்தைகளையும் மற்றும் பேரக் குழந்தைகளையும் கொன்றுள்ளார்.
Image Courtesy

ஏய்லென் வோர்னாஸ்
ஏய்லென் வோர்னாஸ் ஓர் உண்மையான அரக்கி எனலாம். இவர் தன் தாத்தாவினாலும், நண்பர்களாலும் தன் சொந்த சகோதரனாலும் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனாலோ என்னவோ, இப்பெண் நிறைய ஆண்களை கொலை செய்து வருகிறார்.
Image Courtesy

டோரோதியா
இவர் கலிபோர்னியாவில் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய வயதானவர்களை பார்த்துக் கொள்வதில் நல்லவர். இத்தகைய பெண் முதியவர்களுக்கு காசோலைகள் வந்த பின், அவர்களை கொன்று, அவர்களது உடலை முதியோர் இல்லத்தின் அடியில் ஒரு எடுபிடி ஆளை வைத்துக் கொண்டு மறைத்து வந்திருந்தார். ஒருநாள் அந்த எடுபிடி ஆள் திடீரென்று காணாமல் போய்விட்டார்.
Image Courtesy

ரோஸ்மேரி வெஸ்ட்
சாதுவாக தோற்றமளிக்கும் இப்பெண் ஒரு லெஸ்பியன். இப்பெண் 10 பெண்களுடன் உறவில் இருந்ததோடு, அவர்களை கொலை செய்து யாருக்கும் தெரியாதவாறு மறைத்துள்ளார். இவர் தற்போது சிறையில் இருந்தாலும், அந்த சடலங்களைப் பற்றி எதுவும் வெளியே சொல்லவில்லை.
Image Courtesy

பெல்லி சோரன்ஸன்
இவர் தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான சைகோ பெண் கொலையாளி. இவர் தனது 2 கணவர்களையும், தனது 2 குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். இதற்கு காரணம் என்னவென்றால் ஆயுள் காப்பீடு பணத்தின் மீதுள்ள மோகம் தான். மேலும் இவர் சுமார் 25-40 பேரை பல காரணங்களுக்காக கொலை செய்து மறைத்துள்ளார்.
Image Courtesy

மேரி ஆன் காட்டன்
இப்பெண்ணிற்கு தன் கண் முன் ஒருவர் இறப்பதைக் காண்பது என்பது சந்தோஷமாக இருக்குமாம். இதனால் இப்பெண் தன் குடும்பத்தைச் சேர்ந்த 21 பேரை, அதாவது 4 கணவர்கள் மற்றும் டஜன் கணக்கில் குழந்தைகள் மற்றும் ரகசியக் காதலன் என அனைவரையும் கொன்றுள்ளார். இதற்கு காரணமும் ஆயுர் காப்பீட்டு பணத்தைப் பெறத் தான் என்றும் இவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
Image Courtesy



Click it and Unblock the Notifications
