For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜான்.எப்.கென்னடி பற்றி பலரும் அறியாத திகைக்க வைக்கும் தகவல்கள்!

|

இரண்டாம் உலகப் போரில் தென்மேற்கு பசிபிக் பகுதி கடற்படையில் லெப்டினண்டாகப் வேலை செய்தவர் ஜான் கென்னடி. இவர் போரின் முடிவில் தீவிரமாக அரசியலில் ஈடுபட துவங்கினார். மசாசுசெட்ஸ் மாநிலத்தின் அமெரிக்க கீழவை (House) உறுப்பினராக 1947 முதல் 1953 வரை ஜனநாயகக் கட்சி சார்பில் பதவி வகித்து வந்தார்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

மேலும், மேலவை உறுப்பினராக 1953 முதல் 1961 வரை பதவி வகித்தவர் ஜான் கென்னடி. 1960-ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி ஜனாதிபதியான குடியரசுக் கட்சி வேட்பாளர் ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்து அமெரிக்க அதிபராக பதவியேற்றார். புலிட்சர் விருது பெற்ற ஒரே அமெரிக்கத் தலைவர் ஜான் கென்னடியே ஆவார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றி நீங்கள் அறிந்திராத பல வியக்கத்தக்க தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல் #1

தகவல் #1

ஆரம்பத்தில் இருந்து இந்நாள் வரை அமெரிக்க அதிபராக இருந்தவர்களில் குறைந்த வயதில் இறந்தவர் ஜான் கென்னடி தான்.

தகவல் #2

தகவல் #2

ஹார்வர்ட்-க்கு ஒருமுறை அப்ளிகேஷன் அனுப்பிய போது, கென்னடி வெறும் ஐந்து வரிகளில் எழுதி அனுப்பினார்.

தகவல் #3

தகவல் #3

காங்கிரஸ் மேனாக இருந்த போதிலும் சரி, பின்னர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகும் சரி, தனது முழு சம்பளத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டார்.

தகவல் #4

தகவல் #4

அமெரிக்க அதிபர்களிலேயே ரோமன் கத்தோலிக்கை சேர்ந்த ஒரே அதிபர் ஜான் கென்னடி தான்.

தகவல் #5

தகவல் #5

1962-ல் ஜான் கென்னடி ரகசியமாக வெள்ளை மாளிகையில் ஒலிப்பதிவு செய்யும் முறையை கொண்டுவந்தார்.

தகவல் #6

தகவல் #6

வெள்ளை மாளிகையில் விருந்தின் போது 1962-வரை ஆண்கள் மட்டுமே பங்குவேரும் நிகழ்வாக இருந்து வந்தது. இம்முறை ஜான் கென்னடி வந்த பிறகு தான் மாற்றப்பட்டது.

தகவல் #7

தகவல் #7

ஜான் கென்னடியின் கடைசி குழந்தை பேட்ரிக், பிறந்த இரண்டாவது நாளே இறந்துவிட்டார். (ஆகஸ்ட், 1963)

தகவல் #8

தகவல் #8

ஓர் அதிகார சபை அங்க உறுப்பினராக, கென்னடி, அப்போலோ விண்வெளி ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதை உடனே நிறுத்தவும் கூறினார்.

தகவல் #9

தகவல் #9

இரண்டாம் உலகப்போரின் போது தனது உயிரை காக்க ஓர் தேங்காய் மூலம் செய்தி அனுப்பினார். அதன் மூலம் தப்பிக்கவும் செய்தார். அதனால், அதிபரான பிறகு அந்த தேங்காயையே பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார் கென்னடி.

தகவல் #10

தகவல் #10

20-ம் நூற்றாண்டில் பிறந்து அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் அமெரிக்கர் ஜான் கென்னடி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts about John F Kennedy

Do you know this Interesting Facts about John F Kennedy? read here in tamil.
Desktop Bottom Promotion