Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
நாணயம் மற்றும் பணத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
மனிதன் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் தான் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது அத்துடன் பணம் முக்கியமான ஒன்றாகிவிட்டது. பணம் இல்லாவிட்டால், வாழ்வதே கடினம் என்ற நிலை வந்துவிட்டது. எனவே பலரும் பணத்தை சம்பாதிப்பதற்கு ஒய்வு என்பதை மறந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போவது, நாணயம் மற்றும் பணத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களைப் பற்றி தான். பலருக்கும் இதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தகவல் #1
சுமார் 90% அமெரிக்க டாலர்களில் கொக்கைன் பொருட்கள் உள்ளது. ஆம், இது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை என்பது தெரியுமா?
தகவல் #2
94% டாலர்களில் கழிவுப் பொருட்கள் இருப்பதற்கான தடயங்கள் உள்ளதாக சதன் மெடிகல் ஜர்னல் கண்டுபிடித்துள்ளது. அப்படியெனில் நம் இந்திய ரூபாய் நோட்டுகளில் எவ்வளவு கழிவுப் பொருட்கள் இருக்கும் என சற்று யோசித்துப் பாருங்கள்.
தகவல் #3
முதல் காகித பணத்தை சுமார் 1,400 வருடங்களுக்கு முன் சீனா தான் தயாரித்தது என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?
தகவல் #4
இரண்டாம் உலக போர் வரை சைபீரியா மற்றும் ஆசியாவில் தேயிலை செங்கற்களால் ஆன நாணயம் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தகவல் #5
அமெரிக்க காகித பணமானது உண்மையில் காகிதத்தால் ஆனதல்ல; மாறாக ஒரு துணியால் ஆனது என்பது தெரியுமா?
தகவல் #6
உங்களிடம் கடன் இல்லாமல், 10 டாலர் இருந்தால், சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு பாதி அமெரிக்கர்களிடம் அதுக்கூட இல்லை.
தகவல் #7
பில்கேட்ஸ் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டாலர் பணத்தை செலவழித்தாலும், அவரிடம் உள்ள மொத்த பணத்தையும் கொண்டு குறைந்தது 218 வருடங்கள் இருக்கலாம். எவ்வளவு அதிர்ஷ்டசாலி!



Click it and Unblock the Notifications


