Latest Updates
-
கீரை வாங்குனா அடுத்தமுறை இந்த ஆந்திரா கீரை வேப்புடுவை செய்யுங்க - கீரை பிடிக்காதவர்களும் ஆசையா சாப்பிடுவாங்க -
கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14-ல் வரப்போவதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 11 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
சுக்கிரன் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம் -
மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி மாதிரி செமயா இருக்கும்.. -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ சக்திமான்: மறக்க முடியாத 10 விஷயங்கள்!
சூப்பர்மேன், பேட்மேன் என்று திரிந்துக் கொண்டிருந்த போது, இந்தியாவிற்கு என ஓர் தனி சூப்பர்மேனாக உதித்தார் சக்திமான். குழந்தைகளை மற்றும் சிறுவர்களை கவரும் வண்ணம் இந்த தொடர் அமைந்திருந்தது.
சுற்றிக் கொண்டே வானில் பறக்கும் சக்தி, பல வில்லன்களுடன் மோதுவது போன்ற சூப்பர்மேனுக்கு எந்த வகையிலும் குறைவே இல்லாமல் முழு அளவில் திருப்திகரமாக அமைந்தது சக்திமான்.
90களில் சிறுவர்களுக்கு மட்டுமே தெரியும் சக்திமான் எவ்வவளவு சக்தி மற்றும் புகழ் வாய்ந்தவர் என்று. ஸ்பைடர்மேன் உடைகளுக்கு முன்பே 90 களின் குழந்தைகள் சக்திமான் உடையை அணிதவர்கள்.
இன்றளவும் சக்திமான் என்று கூறும் போதே மனதில் ஒரு பூரிப்பு ஏற்படுகிறது எனில், அதற்கு முழு காரணம் முகேஷ் கன்னா தான்.

தகவல் #1
சக்திமானின் முதல் டீசர் வெளியான செப்டம்பர் 5, 1997 அன்று தான் அன்னை தெராசா இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் #2
தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட சக்திமான் தொடர் மொத்தம் 400க்கும் மேற்பட்ட எபிசோட்கள் கொண்டதாகும்.

தகவல் #3
இதில், சக்திமான் என்கிற கங்காதர் திலக்-காக நடித்த முகேஷ் கன்னா தான், சக்திமான் எனும் பாத்திரத்தை படைத்தவரும் கூட.

தகவல் #3
ஓர் முறை நீதிமன்றத்தில் சக்திமான் பார்த்து குழந்தைகளும் அதே போல செய்கிறார்கள் என்ற வழக்க தொடரப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் சக்திமான் தொடர் ஒளிப்பரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தகவல் #5
1999-ம் ஆண்டு தினேஷ் பிரபாகர் எனும் சிறுவன் சக்திமான் தன்னை காப்பாற்ற வருவார் என, தீ வைத்து கொண்டான்.

தகவல் #6
குண்டலினி யோகா உடலின் ஏழு சக்கரங்களை எழுப்பி, அபார சக்தியை வெளிக் கொண்டுவர உதவும் என்பார்கள். இது தான் சக்திமானின் அடிப்படை ஆகும். சக்திமான் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை வணங்குபவர்.

தகவல் #7
குழந்தைகளுக்கு நல்லது கற்றுக் கொடுக்க, தீய செயல்களில் ஈடுபடாமல் இருக்க ஒவ்வொரு தொடரின் இறுதியிலும், சக்திமான் ஒரு பாடம் கற்பித்து செல்வார். அதில், சிறுவர்கள் கோரஸ்ஸாக சாரி சக்திமான் என்று சொல்வது பலரின் மனதில் ஆழப்பதிந்த விஷயமாகும்.

தகவல் #8
சூப்பர்மேன், சக்திமான் ஸ்பைடர்மேன் என சூப்பர் ஹீரோக்கள் எல்லாரும் கதையில் ரிப்போட்டராக பணியாற்றியுள்ளனர். இதில், ஸ்பைடர்மேன் மட்டும் தன் படத்தை மட்டும் புகைப்பட கலைஞராக கதையில் வந்து செல்வார்.

தகவல் #9
நேர்மை, கல்வியின் அவசியம், சுகாதாரம், உண்மை, தேசப்பற்று என சக்திமான் குழந்தைகளுக்கு நிஜமாகவே தொடரின் மூலமாக நிறைய நல்ல குணங்களை கற்றுக்கொடுத்தார்.

தகவல் #10
சக்திமானால் உடலை தீ, காற்று, நீர், பூமி மற்றும் வானம் என ஐந்தாக பிரிக்க முடியும். இவர் முழுமையான யோக சக்தி பெற்றவர்.



Click it and Unblock the Notifications