Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
அமேசான் மழைக்காடுகளை பற்றிய பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்!!
அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு. அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கி.மீ ஆகும்.
மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும்.
இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.

ஆக்சிஜன்
உலகின் மொத்த ஆக்சிஜன் தயாரிப்பில் 20% அமேசான் மழைக்காடுகளில் இருக்கும் மரங்களின் மூலமாக தான் வெளிவருகிறது.

தலைகீழ்
முன்னொரு காலத்தில், இப்போது ஓடிக் கொண்டிருக்கும் திசைக்கு நேர் மாறாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்ததாம் அமேசான் நதி.

உலகில் பாதி
உலகில் உள்ள மழைக்காடுகளில் பாதி அளவுக்கு மேல் அமேசான் மழைக் காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் குடிக்கும் பூச்சி
அமேசானிய வண்ணத்துப்பூச்சிகள் ஆமைகளின் கண்ணீரை குடிக்கின்ற பழக்கம் கொண்டிருக்கின்றன.

அமேசான் நதிக்கு கீழே ஓர் நதி
பிரேசிலில் அமேசான் நதிக்கு கீழே ஒரு நதி நான்கு கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில், இது நூறுமடங்கு அகலமானது என கூறப்படுகிறது.

அமேசானுக்கு உதவிய நார்வே
கடந்த 2008-ம் ஆண்டு நார்வே ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை, அமேசான் மழைக் காடுகளை பாதுகாக்க கொடுத்தது.

நீர் வெளியேற்றம்
உலகின் மற்ற நதிகளை விட ஐந்து மடங்கு அதிகமான அளவு நீரை வெளியேற்றுகிறது அமேசான் நதி.

பெரிய நகர்
பெருவில் இருக்கும் இக்விடோஸ் தான் உலகிலேயே பெரிய நகரம். சாலைகளால் இந்த நகரை தொடர்பு கொள்வது இயலாத காரியம். இது அடர்ந்த அமேசான் மழைக் காட்டுக்குள் இருக்கிறது. இங்கு நான்கு லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.

பாலம் இல்லை
அமேசான் நதிக்கு இடையே ஒரு பாலம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரினங்கள்
உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரினங்கள்
2.5 மில்லியன் பூச்சியினங்கள், 10,000-க்கும் அதிகமான தாவர வகைகள், ஏறத்தாழ 2000-க்கும் மேற்பட்ட பறவை வகைகள் மற்றும் பாலூட்டிகளுக்கு அமேசான் மழைக் காடுகள் தான் தாயகமாக விளங்குகிறது.

பறவைகள்
உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வசிக்கின்றன.



Click it and Unblock the Notifications
