உலகை வெளுத்து வாங்கிய டாப் 10 கருப்பின மக்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கருப்பு என்பது வெறும் நிறம் மட்டுமே, அது ஒதுக்கப்படும் மக்களின் அடையாளம் இல்லை என நிரூபித்தவர்கள் இவர்கள். இவர்களை கருப்பின மக்கள் என குறிப்பிட்டதற்கே இங்கு மன்னிப்பு கேட்க வேண்டும். ஆயினும் வரலாறு இவர்களை இவ்வாறு தான் வரையறுத்து வைத்திருந்தது.

"பாப் மன்னன்" மைகேல் ஜாக்சனின் வினோதமான குணாதிசயங்கள்!!!

இன்றைய நாட்களில் நாம் ட்ராப்பிக் ஜாம் ஆனாலோ, தக்கல் டிக்கெட் புக் செய்யும் போது இணையம் மிகவும் மந்தமாக செய்யப்பட்டாலோ கூட அரசாங்கத்தை குறைகூறி வருகிறோம்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

ஆனால், 20-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வரை உலகெங்கிலும் பல நாடுகளில் குறிப்பிட்ட இன மக்களுக்கு அவர்களுக்கான அடிப்படை உரிமையே வழங்க மறுக்கப்பட்டு வந்த சூழல் ஏகபோகமாக இருந்தது . அதிலும் முக்கியமாக அமெரிக்காவில் வெள்ளை அமெரிக்கர், கருப்பு அமெரிக்கர் என வகை பிரித்து கொத்தடிமையாக்கி வைத்திருந்த சூழல் கூட நிலவி வந்தது.

உலகப் போரின் போது வழங்கப்பட்ட சில கோரமான தண்டனைகள் - திடுக் நடுக் தகவல்கள்!!!

உலகெங்கிலும் தங்களது உரிமைக்காக போராடி வந்தனர் கருப்பின மக்கள். இந்த கடுமையான சூழலில் உலகை வெளுத்து வாங்கிய மற்றும் அதன் பிறகு உலகையே கலக்கிய சில நிஜமான சூப்பர் ஹீரோ மனிதர்களை தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்....

இரண்டாம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட விசித்திர ஆயுதங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்டின் லூதர் கிங் ஜூனியர்

மார்டின் லூதர் கிங் ஜூனியர்

ஆப்பிரிக்க-அமெரிக்க வாழ்வுரிமை, குடியுரிமை இயக்கத்தை முன்னடத்தி சென்ற தலைவர் இவர். கருப்பின மக்களின் குடியுரிமைக்காக கடுமையாக போராடினர்.

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா

மண்டேலா 1962- ஆம் ஆண்டிலிருந்து 27 வருடங்கள் சிறையில் இருந்தார். இதில் பல ஆண்டுகள் இவரை தனிமை சிறையில் வைத்து கொடுமை செய்தது ஆப்ரிக்க அரசாங்கம். 1988ஆம் ஆண்டு காச நோய் ஏற்பட்டு மரணத்தின் விளிம்புக்கு சென்று வந்தவர். பிறகு 1994ஆம் ஆண்டு ஆப்ரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார்.

முகமது அலி

முகமது அலி

உலக குத்து சண்டை வரலாற்றில் மாபெரும் வீரராக திகழ்ந்தவர் முகமது அலி. காஸ்சியுஸ் கிளே என்பது தான் இவரது இயற்பெயர். 1964ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்த பிறகு முகமது அலி என பெயர் மாற்றம் செய்துக் கொண்டார். வியட்னாம் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கைது செய்யப்பட்டு இவரது பதக்கங்கள் பறிக்கப்பட்டன.

கோபி அட்டா அன்னான்

கோபி அட்டா அன்னான்

கானாவை சேர்ந்த இவர் ஐக்கிய நாடுகளின் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். 2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்கு உழைத்ததற்காக" அமைதிக்கான் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

Image Courtesy

மைக்கல் ஜாக்சன்

மைக்கல் ஜாக்சன்

"கிங் ஆப் பாப்" என்ற புனைப்பெயரோடு அழைக்கப்பட்டவர் மைக்கல் ஜாக்சன். தனது இசையாலும், காந்த குரலாலும் உலக இசை ரசிகர்களை கட்டிப்போட்டவர் மைக்கல் ஜாக்சன். இவரது இசை பாடல் தொகுப்புகள் பல சாதனைகள் செய்துள்ளன. ஏறத்தாழ 40 வருடங்கள் முடிசூடா மன்னனாக பாப் இசை உலகில் திகழ்ந்து வந்தார் மைக்கல் ஜாக்சன்.

பிரடெரிக் டக்ளஸ்

பிரடெரிக் டக்ளஸ்

பிரடெரிக் டக்ளஸ், ஆப்ரிக்க- அமெரிக்க சமூக சீர்த்திருத்தவாதியாக இருந்தவர். அடிமைத்தனத்தில் இருந்து தப்பித்து, அடிமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராக இருந்தார். இவர் ஒரு பேச்சாளர், எழுத்தாளர், மற்றும் மூதறிஞர். அடிமைத்தனத்தை ஒழிக்க போராடியவர்.

Image Courtesy

முதலாம் ஹைலி செலாசி

முதலாம் ஹைலி செலாசி

1930 - 1974 ஆம் ஆண்டு வரை எத்தியோப்பியா நாட்டின் மன்னராக இருந்தார். 20ஆம் நூற்றாண்டில் பல ஆப்ரிக்க நாடுகள் விடுதலை அடைந்த போது, முதலாம் ஹைலி செலாசி ஏற்கனவே சுதந்திரமாக இருந்த எத்தியோப்பியாவை வளர்த்தெடுத்தார். ராஸ்த்ஃபாரை சமயத்தை சேர்ந்தவர்கள் இவரை கடவுளாக பார்க்கிறார்கள்.

Image Courtesy

பாரக் ஒபாமா

பாரக் ஒபாமா

தற்போதையே அமெரிக்காவின் அதிபராக பதவி வகிப்பவர். இவர் அமெரிக்காவின் 44வது அதிபர் ஆவர். இவர் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆவார்.

சின்னுவா அசெபே (Chinua Achebe)

சின்னுவா அசெபே (Chinua Achebe)

நைஜீரியா நாட்டின் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவர் நிறைய நாவல்கள், பாடல்கள், கவிதைகள் எழுதியுள்ளார். மற்றும் இவர் பேராசிரியர் பணியாற்றியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுப்போக விமர்சகராகவும் இருந்துள்ளார்.

Image Courtesy

உசேன் போல்ட்

உசேன் போல்ட்

உலகின் வேகமான மனிதர் என்று பெயரெடுத்தவர் உசேன் போல்ட். ஓட்டப் பந்தயத்தில் பல உலக சாதனைகள் மற்றும் ஒலிம்பிக் சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். இவர் உலக அளவில் மின்னல் மனிதர் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Ten Greatest Black Men Of All Time

Top Ten Greatest Black Men Of All Time, Who made historical moments in our World. Take a look.
Story first published: Thursday, August 20, 2015, 10:29 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter