For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கிறிஸ்துமஸ் பற்றிய விந்தையான தகவல்கள்!!!

By Ashok CR
|

ஒவ்வொரு வருடமும் நாம் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் பண்டிகைகளில் கண்டிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையும் முக்கியமான இடத்தை பெற்றிருக்கும். கிறிஸ்துமஸ் என்பது இனிப்புகள், விருந்துகள் போன்றவற்றுடன் மட்டுமே முடிந்து விடக்கூடியது கிடையாது. பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தான் பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையை கழிப்பார்கள்.

ஒவ்வொரு வருடமும், இந்த பண்டிகை காலத்தின் போது, கிறிஸ்துமஸ் பற்றிய சில விந்தையான தகவல்களை சிலர் அறிமுகப்படுத்துவார்கள். அவற்றை நாம் பெரும்பாலும் நம்பவும் செய்வோம். இந்த 2015 கிறிஸ்துமஸ் பண்டிகையில், கேண்டி கேன்னின் (மிட்டாய் கைத்தடி) உண்மையான அர்த்தத்தைப் பற்றி அமெரிக்கா ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

சமீபத்திய அறிக்கைகளின் படி, கூச்சலிடும் குழந்தைகளை அமைதியாக்கவே கிறிஸ்துமஸ் கேண்டி கேன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியாக உள்ளதா? தொடர்ந்து படிக்கும் போது, கிறிஸ்துமஸ் பற்றிய இத்தகைய வியப்பான மற்றும் விந்தையான தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இவைகள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

கிறிஸ்துமஸ் பற்றிய சமீபத்தில் கூறப்பட்ட இத்தகைய தகவல்களைத் தெரிந்து கொண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் கலக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிறிஸ்துமஸ் மிட்டாய்கள்

கிறிஸ்துமஸ் மிட்டாய்கள்

குழந்தைகளை பயமுறுத்தவே கிறிஸ்துமஸ் மிட்டாய்கள் தயாரிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? 1670 ஆம் ஆண்டு, கலோன் தேவாலயத்தின் இசை குழு தலைவர் ஆடு மேய்க்கும் குச்சியைப் போலவே கேண்டி கேன்களை (மிட்டாய் கைத்தடி) வடிவமைத்தார். தேவாலயத்திற்கு வரும் குழந்தைகள் அமைதி காக்க அவர்களிடம் அவை கொடுக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் ப்ளம் கேக்

கிறிஸ்துமஸ் ப்ளம் கேக்

வருடத்தின் இந்த நேரத்தில் ப்ளம் கேக் என்றால் அனைவருக்குமே இஷ்டமான ஒன்றாக விளங்கும். தொடக்கத்தில் ஒரு கஞ்சி இருந்தது. இதைப் பற்றி தெரிந்து கொள்ள கிறிஸ்துவ மத தொடக்க காலத்திற்கு நாம் செல்ல வேண்டும். மிக மெல்லியதாக அரைக்கப்பட்ட கோதுமை மாவில் செய்யப்பட்ட கேக் மிகப்பெரிய வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டது. அதற்கு காரணம், 14-ஆம் நூற்றாண்டிற்கு முன், பலரின் வீட்டில் கேக் செய்யப்படும் ஓவன் இல்லை. படிப்படியாக இந்த கஞ்சியில் மசாலா, உலர்ந்த பழங்கள், தேன் போன்றவற்றை மக்கள் சேர்க்க தொடங்கினார்கள். இதன் மூலம் அதனை கிறிஸ்துமஸ் பண்டிகையின் விசேஷ பண்டமாக அவர்கள் தயார் செய்தனர். இதுவே ப்ளம் கேக்காக மாறியது.

கிறிஸ்துமஸ் ஃப்ரூட் கேக்

கிறிஸ்துமஸ் ஃப்ரூட் கேக்

கிறிஸ்துமஸ் ஃப்ரூட் கேக் என்பது சிறப்பு தன்மை மிக்க பண்டமாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் முதல் மீதமுள்ள அந்த வருடத்தின் நாட்கள் வரை அதனை கிறிஸ்துவர்கள் சேமித்து வைக்க வேண்டியது அவசியமானது என கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் தகவல்களின் படி, அறுவடை காலத்தின் முடிவில் இந்த ஃப்ரூட் கேக் தயார் செய்யப்பட்டு, வரும் வருடத்தில் வரப்போகும் அறுவடை காலத்தின் தொடக்கம் வரை அதனை சேமித்து உண்ண வேண்டும். இது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

கிறிஸ்துமஸ் வான்கோழி

கிறிஸ்துமஸ் வான்கோழி

கிறிஸ்துமஸ் வான்கோழி என்பது உங்கள் உணவு மேஜையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பண்டமாகும். வான்கோழிக்கு பின்னால் ஒரு விந்தையான கிறிஸ்துமஸ் தகவல் மறைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் ஹென்றி VIII, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வான்கோழியை உட்கொண்டுள்ளார். படிப்படியாக இதுவே ஒரு வழக்கமாகவே மாறி விட்டது.

கிறிஸ்துமஸ் இரவு விருந்து

கிறிஸ்துமஸ் இரவு விருந்து

ஒவ்வொரு வருடமும், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உணவு மேஜை சிறப்பு உணவுகளால் நிரம்பியிருக்கும். கிறிஸ்துமஸ் இரவு விருந்து 7000 கலோரிக்கும் அதிகமான கலோரிகளை கொண்டிருக்கும் என உடல்நல வல்லுனர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் வருடத்தில் இந்த நேரத்தின் போது தான், உடல் எடையை அதிகரிக்க, அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை மக்கள் பயன்படுத்துவார்கள். அதனால், ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருக்க 2015 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எளிமையான உணவையே உண்ணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Strange Christmas Facts You Need To Know

These are some of the strange Christmas facts that will scare you. You might want to take a look at these facts which will blow your mind.
Desktop Bottom Promotion