Latest Updates
-
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்..
இந்தியாவில் அதிக அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய கொடூர நிலநடுக்கங்கள்!!!
இயற்கை சீற்றங்கள் என்பது யாராலும் தடுக்க முடியாதது. பூமியின் அடிபாகத்தில் உள்ள தட்டுகள் எப்போதுமே நகர்ந்துக் கொண்டே தான் இருக்கும். அப்படி நகரும் போது ஏற்படும் உராய்வுகளினால் தான் பூகம்பங்களும், கடல் கொந்தளிப்புக்களும் ஏற்படுகின்றன என்று அறிவியல் கூறுகிறது.
உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!!
ஓர் வகையில் மனிதனின் ஆறாவது அறிவு ஒரு சொற்பமான விஷயம் தான், இந்த புவியை மிஞ்சி செயல்பட எந்த ஒரு சக்தியினாலும் முடியாது என்பதனை மனிதருக்கு உரைக்கும் படி சொல்ல இயற்கை செய்யும் விளையாட்டோ என்னவோ இது.
மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!
இல்லையேல், இயற்கை சீற்றங்களை வரும் முன் உணரும் சக்தியை விலங்குகளுக்கு கொடுத்த அந்த இறைவன் மக்களுக்கு ஏன் கொடுக்கவில்லை.நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கின்றது என்பதை அடிக்கடி உணர்த்துவது இந்த இயற்கை சீற்றங்கள் தான்.
அந்த வகையில் இந்தியாவில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங்கள் பற்றி இனி பார்க்கலாம்...

ஜூன் 16, 1819 - குஜராத்
ரிக்டர் அளவில் 8.2 என்று பதிவான இந்த பூகம்பம் சிந்திரி (Sindri) என்னும் எரி பகுதியில் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தினால் 1,543 மக்கள் உயிரிழந்தனர். இதனால் சுனாமி பேரலைகளும் எழுந்தது.

டிசம்பர் 31, 1881 - அந்தமான் தீவு
இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இரண்டாவது முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. வீடுகள் பலவன சிதைந்து போயின. இது பெரும் சோகத்தை அந்தமான் மக்களுக்கு அளித்தது.

ஜூன் 12, 1897 - அசாம்
1,500 பேரை பலிவாங்கிய இந்த நிலநடுக்கம், அசாமின் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.1 ஆந்திரா அளவில் பதிவாகியுள்ளது. இது பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியது.

ஏப்ரல் 4, 1905 - ஹிமாச்சல் பிரதேசம்
ரிக்டர் அளவில் 7.8 என்று பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கம். இது மிகபெரும் உயிர் சேதத்தை உருவாக்கியது, ஏறத்தாழ 20,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தனர். இது ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள கங்காரா என்னும் பகுதியில் ஏற்பட்டது.

ஜனவரி 15, 1934 - நேபாளம்
நேபாளத்தில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கம் இதுவாகும். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 என்ற அளவில் பதிவாகியுள்ளது. ஏறத்தாழ 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம், எவரஸ்ட் மலையில் இருந்து தெற்கே 10 கிமீ தூரத்தில் ஏற்பட்டுள்ளது.

ஜூன் 26, 1941 - அந்தமான் தீவு
ரிக்டர் அளவில் 8.1 என்ற அளவில் பதிவாகயுள்ளது இந்த நிலநடுக்கம். இந்த பாகத்தின் தாக்கம், இலங்கை மற்றும் இந்தியாவில் தெரிந்தது. இது, சுனாமி பேரலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 7,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட்15, 1950 - அருணாச்சல் பிரதேசம்
சுதந்தரத்திற்கு பின் ஏற்பட மிகபெரிய பூகம்பமாக இது கருதப்படுகிறது. ரிக்டர் அளவில் 8.7 என்ற பதிவான இந்த பூகம்பத்தினால் 1,526 பேர் உயிரிழந்தார்கள்.

அக்டோபர் 20, 1991 - உத்தரகண்ட்
உத்தரகண்டின், உத்தர்காஷி என்னும் இடத்தில ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 என்று [பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏறத்தாழ 2000 பேர் இறந்துள்ளனர்.

செப்டம்பர் 30, 1993 - மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் லதூர் என்ற பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 என்று பதிவாகியிருந்த இந்த நிலநடுக்தினால் 9,748 பேர் உயிரிழந்தார்கள்.

மே 22, 1997 - மத்திய பிரதேசம்
ஜபல்பூர் என்னும் இடத்தில ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவில் 6.0 என்று பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கம்.

மார்ச் 29, 1999 - உத்தரகண்ட்
சமோலி என்னும் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். ரிக்டர் அளவில் இந்த பூகம்பம் 6.8 என்று பதிவாகி இருந்தது.

ஜனவரி 26, 2001 - குஜராத்
இந்திய குடியரசு தினத்தன்று நடந்து துயர சம்பவம் இது. ரிக்டர் அளவில் 7.7 என்று பதிவான இந்த பூகம்பத்தினால் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும்பாலானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்தனர். இந்தியாவையே உலுக்கிய சம்பவம் இது.

டிசம்பர் 26, 2004 - சுமத்ரா
மாலத்தீவு அருகில் உள்ள சுமாத்திரா பகுதியில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 9.1 என்று பதிவானது. உலக அளவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் இது மூன்றாவது இடத்தில இருக்கின்றது. இந்த நிலநடுக்கத்தில் காரணமாக 2,83,106 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அக்டோபர் 8, 2005 - காஷ்மிர்
ரிக்டர் அளவில் 7.6 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தினால் 1,30,000 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீநகர், இஸ்லாமாபாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது இந்து பூகம்பம்.

ஏப்ரல் 25, 2012 - அந்தமான் தீவு
ஒரே நாளில் பல முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆனால், எந்த ஒரு உயர் சேதமும் ஏற்படவில்லை.

மார்ச் 21, 2014 - அந்தமான் தீவு
ஒரே நாளில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆயினும் ரிக்டர் அளவில் 5.2 என்று சிறிய அளவில் தான் பதிவாகியிருந்தது. இம்முறையும் எந்த ஒரு முறையும் உயிர் சேதமும் ஏற்படவில்லை.



Click it and Unblock the Notifications