Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
மண்டையில் உறைக்கும்படி சென்னை மழை புகட்டி சென்ற பாடங்கள்!!!
சென்னை மழை மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிறைய பாடங்கள் புகட்டி சென்றுள்ளது. நன்றியுடன் இருந்தால் தான் நாய், ஊரக்கூட்டி உண்டால் தான் காகம் என்பது போல மனிதநேயம் உள்ளவன் தான் மனிதன் என்ற பெரும் பாடத்தை மிக வலுவாகவும், மக்களுக்கு வலிமையும் அளித்து, கற்பித்து சென்றது சென்னை மழை.
அரசும், ராணுவமும் களமிறங்கும் முன்னரே ஓடோடி வந்தனர் இளைய சமுதாயத்தினர். கை கொடுத்ததும், கையில் இருந்ததை கொடுத்ததும் பெருவாரியாக உதவி புரிந்து அகம் நெகிழ செய்தனர் பல நகரங்களை சேர்ந்த இளைஞர்கள். சென்னை மட்டுமின்றி இவர்களது உதவி மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
"அச்சம் தவிர்.." என்ற சொல் மக்களுக்கு புரிந்துவிட்டது என்பதை அரசியல்வாதிகளும் கற்றுக் கொண்டனர்.....

மொபைல் போன்கள் வாழ்க்கையை காக்கும்
ஆர்.ஜே.பாலாஜி, நடிகர் சித்தார்த் மட்டுமின்றி எழுச்சிமிக்க இளைஞர்கள் பலரின் பங்களிப்பால் உதவி வேண்டி காத்திருந்த பல மக்களுக்கு தக்க சமயத்தில் உதவிட மொபைல் போன்களும், சமூக இணையங்களும் பயன்பட்டன.

மனித ஒற்றுமை
இயற்கை சீற்றம் வலுவாக இருந்தாலும், அதை மிஞ்சும் அளவு வல்லமை கொண்டது மனித ஒற்றுமை என்பதை கடந்த சென்னை மழையின் போது நாம் அனைவரும் கற்றுக் கொண்டோம்.

சுயநலம் அகன்றது
தெருக்களில் கரைபுரண்டு ஓடிய மழை வெள்ளம், மக்களின் சுயநலத்தை அடித்துக் கொண்டு சென்றது. பொதுநலத்தை மனதில் நிறைத்து சென்றது. சென்னை மழைக்கு நன்றியை தான் கூற வேண்டும்.

அந்நியன் அல்ல, நண்பன்
நமது பக்கத்து வீடு, தெரு, ஏரியா மக்கள் எல்லாம் அந்நியர்கள் அல்ல, அனைவரும் நமது நண்பர்கள் என நாம் அறிந்துக் கொண்டது இந்த சென்னை மழை வெள்ளத்தின் போது தான்.

பணத்தை சாப்பிட முடியாது
இந்த மழை வெள்ளத்தின் போது தான் பெரும்பாலன மேல்தட்டு மக்களும் தெரிந்துக் கொண்டனர் பணத்தை சாப்பிட முடியாது என, மனிதன் என்ற இனத்தை காக்க, மனிதம் கொண்டு வந்த மக்களுக்கு நன்றிகள்.

ஒற்றுமேயே வெல்லும்
காவல், ராணுவம், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பிரபலங்கள் என அனைவரது ஒற்றுமை சென்னையை மீட்டெடுக்க உதவியது. எவ்வளவு பெரிய இயற்கை சீற்றமாக இருப்பினும் நாம் ஒற்றுமையாக இருந்தால் எதுவும் செய்ய முடியாது.

மதம், யானைக்கு மட்டுமே பிடிக்கும்
மதம் பாராமல், இஸ்லாமிய தோழர்கள் அனைவருக்கும் உதவிய பண்பு பலதரப்பட்ட மக்களின் நெஞ்சை சிலிர்க்க வைத்தது. இந்து கோவில்களை அவர்கள் சுத்தம் செய்வதும், இந்து பெண் தனக்கு பிறந்த குழந்தைக்கு இஸ்லாமிய தோழரின் பெயரை சூட்டியதும், மனம் நெகிழ்ந்து போன தருணங்கள்.

இன்ஜினியர்கள் எங்கும் பணிபுரிவார்கள்
ஏ.சி அறைகளில் மட்டுமல்ல, நாங்கள் புயல் காற்றிலும், வெள்ளப்பெருக்கிலும் கூட இறங்கி வேலை பார்ப்போம், எங்கள் மக்களுக்காக உழைக்க கடமைப்பட்டுள்ளோம் என்று சென்னை, பெங்களூர், கோவை மற்றும் பல பகுதிகளை சேர்ந்த இளைஞர் பட்டாளம் நிரூபித்தது.

ரியல் சூப்பர்ஸ்டார்
சில பிரபலங்கள் ரீல் வாழ்க்கையில் மட்டுமின்றி ரியல் வாழ்க்கையிலும் சூப்பர்ஸ்டார் தான் என்று அனைவருக்கும் புரிய / தெரிய வைத்தது இந்த சென்னை மழை.

ஸ்டிக்கர்கள் ஒத்துவராது
இனிமேலும், சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள், போஸ்டர்கள், பேனர்கள் வைத்து மக்களை ஏமாற்ற முடியாது என்பதை மிக வலுவாக பாடம் புகட்டி சென்றது சென்னை மழை.

இளைஞர்கள்
இளைஞர்கள் வீணாக இல்லை, வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சென்னை மழை இந்த உலகிற்கே பெரிய பாடமாக புகட்டி சென்றுள்ளது.

மனித நேயம்
வரும் சந்ததியினர், வளரும் சந்ததியினர் மனித நேயத்தை மறந்து வளர்ந்து வருகிறார்கள் என்ற குற்றசாட்டிற்கு தக்க பதிலடி கொடுக்க சென்னை மழை ஓர் வாய்ப்பாக அமைந்தது. இனிமேல், யாரும் இந்த தலைமுறையினர் மனிதநேயம் மறந்தவர்கள் என்று எப்போதும் கூற முடியாத அளவிற்கு அவர்கள் நற்பணி ஆற்றியுள்ளனர்.



Click it and Unblock the Notifications
