Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
ஹோலி! இந்தியாவின் வண்ணமிகு திருவிழா!
வட இந்தியாவில் வருடா வருடம் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி திருநாளன்று கோலாகலமாய் கொண்டாடப்படும் வண்ணமிகு திருவிழா! ஜாதி மத வேறுபாடு இன்றி, சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் மனிதநேயம் பொங்கி வழியும் மாபெரும் பண்டிகை! வெள்ளை உடை அணிந்து ஆண்களும், பெண்களும், வண்ண வண்ண சாயங்களை மகிழ்ச்சியுடன் இன்பம் பெருக மற்றவர் மீது பூசி சந்தோசத்தை பகிர்ந்துக் கொள்ளும் விழா தான் ஹோலி!
ஹோலியின் மூலம் நாம் அறியவேண்டிய வாழ்வியல் கூற்று என்னவெனில், நம் அனைவரது மனமும் வெள்ளை உடைப் போல, அதில் நம்மை சுற்றியுள்ள பல உறவுகளின் அழகான நினைவுகளும், அவர்களின் பங்களிப்பும் இருக்கும் போது தான் நமது வாழ்க்கை மகிழ்ச்சியுற இருக்கும். இந்த மகத்தான வாழ்க்கை கூற்றை கூறும் ஹோலியைப் பற்றி நீங்களும் அறிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா... தொடர்ந்து படியுங்கள்...

வண்ணமயமான பண்டிகை
இந்துக்கள் பண்டிகைகளிலேயே வண்ணமயமான பண்டிகை என கருதப்படுவது ஹோலி. முகத்திலும், ஆடைகளிலும் வண்ணங்கள் பூசியும், வண்ணநீரை ஊற்றியும் கொண்டாடப்படும் பண்டிகை ஹோலி.

சகோதரத்துவம்
இந்திய பண்டிகைகளிலேயே சகோதரத்துவத்தை போற்றும் பண்டிகை ஹோலி தான். இதில் இவர் தான் கலந்துக் கொள்ள வேண்டும் என்று வேறுபாடு இன்றி இனம், ஜாதி, மதம் எதையும் பாராமல் கொண்டாடப்படும் சமத்துவ பண்டிகை ஹோலி

எல்லைகளின்றி
இந்துக்கள் பண்டிகைகளில் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு மாநிலத்தில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆனால், ஹோலி மட்டும் தான் எல்லைகளின்றி கொண்டாடப்படும் தேசம் தழுவிய பண்டிகை ஆகும். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை தேசம் முழுக்க மக்கள் தங்களது மகிழ்ச்சியை வண்ணங்களின் மூலம் வெளிப்படுத்தும் பண்டிகை தான் ஹோலி.

அழகான மாலை நேரம்
ஹோலி பெரும்பாலும் கதிரவனும், சந்திரனும் தோன்றும் அழகான வண்ணமயமான வானத்தின் கீழ் தான் வண்ணங்கள் பூசி கொண்டாடப்படுகின்றன.

கொண்டாட்டம்
தெருக்கள் எங்கும் வெள்ளை உடை அணிந்து அங்கும் இங்குமாய் ஓடி, வண்ணங்களை பூசியும், தண்ணீரில் கரைத்து மற்றவர் மீது வண்ணநீரை ஊற்றியும், கட்டித்தழுவி கொண்டாடப்படும் பண்டிகை தான் ஹோலி.



Click it and Unblock the Notifications