For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லணை கட்டிய கரிகாலன் சோழன் பற்றிய வரலாற்று தகவல்கள்!!

|

சங்க காலத்தை சேர்ந்த சோழ அரசர்களில் மிக முக்கியமான சிறப்புமிக்க அரசன் கரிகாலன் சோழன். இளஞ்செட்சென்னி என்பவருக்கு மகனாக பிறந்தவன் தான் கரிகாலன் சோழன். தனது முன்னோர்கள் ஆண்ட நிலப்பரப்பை விட சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய பெருமை கரிகாலனுக்கு இருக்கிறது.

களிமண் கொண்டு கரிகாலன் கட்டிய கல்லணையின் பின் புதைந்திருக்கும் வரலாற்று உண்மைகள்!!!

காஞ்சி முதல் காவிரி வரை சோழ ராஜ்ஜியம் விரிவடைய காரணமாக இருந்தான் கரிகாலன். சங்ககால சோழர்களில் கரிகாலனுக்கு சமமான, இவனை தாண்டிய புகழுடையவர் வேராரும் இல்லை என்ற பெயரும் கரிகாலனுக்கு உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெயர் காரணம்

பெயர் காரணம்

இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக கால் கருகிய நிலையடைந்தது. இதனால் தான் இவனுக்கு கரிகாலன் சோழன் என்று பெயர் வந்ததாக வரலாற்று கூற்றுகள் தெரிவிக்கின்றன.

புனைப்பெயர்கள்

புனைப்பெயர்கள்

கரிகாலன் சோழனுக்கு திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

வெண்ணிப் போர்

வெண்ணிப் போர்

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இந்த போர் தான் என்று கூறப்படுகிறது.

கரிகாலனின் மனைவி

கரிகாலனின் மனைவி

நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியைக் கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராண கதைகள்

புராண கதைகள்

தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பாடோ செய்து கொண்டான் என்று கூறப்படுகிறது.

காவிரி ஆற்றின் கரைகள்

காவிரி ஆற்றின் கரைகள்

காவிரி ஆற்றின் கரைகளை உயர்த்தி கட்டிய பெருமை கரிகாலன் சோழனுக்கே உரியது.

இறப்பு

இறப்பு

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார். மற்றும் பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Historical Facts About Karikalan Cholan

Historical Facts About Karikalan Cholan
Desktop Bottom Promotion