Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!
அமெரிக்க நாட்டின் நாசா அமைப்புக்கும் ரோசவியகாசுமோசு அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சர்வதேச விண்வெளி நிலையமானது ஒரு ஆய்வக மையமாகவும், விண்ணியல் நோக்ககமாகவும் மற்றும் தொழிலகமாகவும் செயல்பட உருவாக்கப்பட்டது.
ஆழ்கடலைப் பற்றிய வியக்கவைக்கும் சில அதிசய தகவல்கள்!!!
மேலும் சர்வதேச விண்வெளி நிலையமானது நிலவு, செவ்வாய் மற்றும் குறுங்கோள்களை நோக்கி செலுத்தப்படும் எதிர்கால விண்கலன்களுக்கு எவுதளமாகவும் அவற்றை பேணும் இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாகரீக தோற்றத்தின் பிறப்பிடமாக திகழ்ந்த சிந்து சமவெளி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!
2010ஆம் ஆண்டின் அமெரிக்க விண் கொள்கையில், சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பொருளாதார, அரசியல் மற்றும் கல்விக்காகவும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி, சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்துப் பார்க்கலாம்...

கால்பந்து மைதானம் அளவு
சர்வதேச விண்வெளி நிலையத்தின் நீளமும், அகலமும் ஓர் கால்பந்து மைதானத்தின் அளவு பெரியதாக இருக்கும்.

வருகையாளர்கள் எண்ணிக்கை
ஏறத்தாழ உலக நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சென்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக ஆராய்ச்சியாளர்கள் சென்று வரும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவில் இருந்து மட்டுமே 140 பேர் சென்று வந்துள்ளனர். அடுத்ததாக ரஷ்யாவில் இருந்து இதுவரை 44 ஆராய்ச்சியாளர்கள் சென்று வந்துள்ளனர்.

ஸ்பேஸ் வாக்ஸ் (Spacewalks)
ஸ்பேஸ் வாக் என்பது விண்வெளியில் நடப்பது ஆகும். இதுபோன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 187 ஆராய்ச்சியாளர்கள் ஸ்பேஸ் வாக்ஸ் செய்துள்ளனர்.அதில் 140 பேர் அமரிக்கர்கள், மற்றும் 47 பேர் ரஷ்யர்கள் என்று கூறப்படுகிறது.

சோலார் சக்தி
சர்வதேச விண்வெளி நிலையம் சூரிய சக்தியில் இயங்கிவருகிறது.

52 கணினிகள்
சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசாவின் 52 கணினிகள் தான் கட்டுப்படுத்தி, செயல்படுத்தி வருகிறதாம்.

ரஷ்ய ஆய்வு மையத்தை விட பெரியது
சர்வதேச விண்வெளி நிலையமானது நான்கு மடங்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை விட பெரியதாம். மற்றும் ஐந்து மடங்கு அமெரிக்க ஸ்கைலேபை விட பெரியதாம்

3.3 மில்லியன் வரிகள்
சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்க உதவ 3.3 மில்லியன் வரிகள் அடங்கிய மென்பொருள் கோடுகள் (Code) எழுதப்பட்டுள்ளன. விமான வழி இயக்கத்தை உதவ 1.8 மில்லியன் வரிகள் அடங்கிய மென்பொருள் கோடுகள் (Code) எழுதப்பட்டுள்ளன.

8 மைல் தூரம்
மின் சக்தியை இணைக்க 8 மைல் தூரம் கொண்ட எலக்ட்ரிக் ஒயர்கள் பயன்படுத்தப்படுகிறதாம்.

ஒரு மில்லியன் பவுண்ட்
சர்வதேச விண்வெளி நிலையத்தின் எடை ஒரு மில்லியன் பவுண்டுகள் ஆகும். கிலோ கணக்கில் என்றால், ஏறத்தாழ 4,50 ,000 கிலோ எடை ஆகும்.

மின் சக்தி தயாரிப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சூரிய சக்தியைக் கொண்டு 84 கிலோ வாட்ஸ் மின் சக்தி தயாரிக்கப்படுகிறதாம்.



Click it and Unblock the Notifications
