"பிரம்பானான்" தெற்காசியாவின் மிகபெரிய இந்து கோவில் - பிரமிப்பூட்டும் தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பிரம்பானான் (அ) சண்டி பிரம்பானான் (அ) சண்டி ராரா ஜொங்ராங் என்று அழைக்கபப்டும் இந்த கோயில் ஒன்பதாம் நூன்றாண்டில் இந்தோனேசியாவில் இருக்கும் யாவாப் எனும் பகுதியில் அமைக்கப்பட்டது. இதுவொரு இந்து ஆலயம் ஆகும். உலகப் பாரம்பரிய களங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கோயில் இது.

இரண்டாம் சூரியவர்மன் கட்டிய அங்கோர் வாட் பற்றிய அதிசயிக்க வைக்கும் வரலாற்றுக் கூற்றுகள்!!!

இந்த கோயிலின் விமான பகுதியின் உயரம் மட்டுமே 154 அடி ஆகும். பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக திகழ்ந்து வருகிறது. இந்த பிரம்பானான் கோயில் தான் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கோயில் என்ற புகழப்படுகிறது...

இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவ ஆலயம்

சிவ ஆலயம்

முதலில் இந்த ஆலயம் சிவனுக்காக கட்டப்பட்டது ஆகும். ஆரம்பத்தில் இவ்விடம் "சிவக்கிரகம்" என்று தான் அழைக்கப்பட்டு வந்ததாம். இதை இந்த கோயிலில் இருக்கும் கல்வெட்டுகள் நிரூபணம் செய்கின்றன.

மும்மூர்த்தி தளம்

மும்மூர்த்தி தளம்

பின்னர் இந்த கோயிலின் இருபுறங்களிலும் திருமால் மற்றும் பிரம்மன் ஆகியோருக்கு ஆலயம் அமைக்கப்பட்டு மும்மூர்த்து கோயிலாக வணங்கப்பட்டு வந்தன.

சைலேந்திர வம்சத்திற்கு போட்டியாக கட்டப்பட்டது

சைலேந்திர வம்சத்திற்கு போட்டியாக கட்டப்பட்டது

சாவகத்தின் ஒன்பதாம் நூற்றாண்டு பௌத்த வம்சமான சைலேந்திர வம்சத்துக்குப் போட்டியாக தான், இந்து வம்சமான சஞ்சய வம்சத்தால் இப்பிரமாண்டமான இந்துக் கோயில் அமைக்கப்பட்டது.

ராகாய் பிகாதன்

ராகாய் பிகாதன்

சஞ்சய வம்ச மன்னன் "ராகாய் பிகாதன் தான் இந்த கோயிலை அமைத்தார் என்று நம்பப்படுகிறது. பிகாதனனால் ஒன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பமான இதன் கட்டுமானம், இவருக்கு பின்னால் லோகபாலனாலும், பாலிதுங் மகாசம்பு எனும் மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிறகு வந்த மன்னர்கள் இந்த கோயிலை விரிவாக்கம் செய்திருக்கலாம் என்ற கருதப்படுகிறது.

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

மூன்று திரிமூர்த்தி கோயில்கள்: சிவன், திருமால், பிரம்மன்

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

மூன்று வாகனக் கோயில்கள்: நந்தி, கருடன், அன்னம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

இரண்டு அபித் கோயில்கள்: திரிமூர்த்தி மற்றும் வாகனக் கோயில்களுக்கு இடையே தென்புறங்களில் இருக்கும் இரு ஆலயங்கள்.

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

நான்கு கெளிர் கோயில்கல் உள்வீதியின் நான்கு வாயில்களையும் அண்மித்துள்ள சிறு ஆலயங்கள்.

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

நான்கு பாதொக் கோயில்கள்: உள்வீதியின் நான்கு மூலைகளிலும் உள்ள சன்னதிகள்.

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

பிரம்பானான் வளாகத்தில் இருக்கும் கோயில்கள்

224 பரிவாரக் கோயில்கள்: பெரிய கோயிலை சுற்றி, சதுரமாக நாண்டு வரிசையில் 44,52,60,68 என்று சிற்றாலயங்கள் அமைந்திருக்கின்றன. இவற்றால் பலவன சேதமடைந்துவிட்டன.

இயற்கை சீற்றங்கள்

இயற்கை சீற்றங்கள்

2006-ல் யோக்யகர்த்தாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பலத்த சேதமடைந்தது, இதனால் ஆலயத்தின் சில பாகங்களுக்குள் நுழைய, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 13 பிப்ரவரி 2014-ல் கெலுட் எரிமலை வெடித்து சாம்பல் பரவியதால், இக்கோயிலின் வளாகம் மூடப்பட்டது எனினும், சில நாட்களிலேயே மீண்டும் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Facts About The Biggest South Asian Temple Prambanan

Do you know about the facts of biggest south asian temple Prambanan? Take a look on one among the pride of hindu temples.
Story first published: Tuesday, October 13, 2015, 14:41 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter