Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நீங்க இன்ஜினியரா? அப்போ இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா?
திரு. விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினத்தை தான் இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் பாரத ரத்னா விருது வாங்கிய பெருமைக்குரிய பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
1970 மற்றும் 80-களில் எப்படி வங்கிகளில் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை செய்வது ஓர் பெருமைக்குரிய செயலாக இருந்து வந்தது. அதைவிட பல மடங்கு பெருமையாகவும், ஊதிய அளவில் பெரியதாகவும் இப்போது விளங்குகிறது பொறியியல். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல, ஓர் இன்ஜினியருக்கு செல்லும் இடமெல்லாம் வேலை என்பது ஊர்ஜிதமான ஒன்றாக இருந்தது.
இந்திய பெற்றோர்கள் பெண்ணாக பிறந்தால் டாக்டர், ஆணாக பிறந்தால் இன்ஜினியர் என்ற எண்ணத்தோடு இன்றளவும் இருக்கிறார்கள். பணம், இன்ஜினியரிங் படித்தால் ஏகபோகமாக சம்பாதிக்கலாம், வாழ்க்கையில் சீக்கிரமாக செட்டிலாகிவிடலாம் என்ற எண்ணம். ஊருக்குள் இன்ஜினியர் என்றாலும் இன்ஜினியர் மாப்பிளை என்றாலும் மதிப்பிற்கு குறைச்சலே இருக்காது முன்னாட்களில்.
கெத்தாக இன்ஜினியரிங் படிப்பை படித்தவரா நீங்கள்? இன்று பொறியாளர் தினம். இந்த தினத்தை இந்த சுவாரஸ்யமான தகவல்களோடு கொண்டாடுங்கள்....

திரு. விஸ்வேஸ்வரய்யா
திரு. விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினத்தை தான் இந்தியாவில் பொறியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் பாரத ரத்னா விருது வாங்கிய பெருமைக்குரிய பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நொறுக்கப்படும் கணினிகள்
அமெரிக்காவில் வருடா வருடம் 220 மில்லியன் டன் எடைக் கொண்ட அளவிற்கு கணினிகள் மற்றும் ஹார்ட்வேர் உபகரணங்கள் நொறுக்கப் படுகின்றன.

வேகமான ஊடகம்
50 மில்லியன் மக்களை சென்றடைய வேகமாக உதவிய ஊடகம் இணையம் தான். ரேடியோ 50 மில்லியன் மக்களை சென்றடைய 38 ஆண்டுகள் ஆயினவாம், டிவிக்கு 13 ஆண்டுகள் ஆயினவாம், ஆனால் இணையம் வெறும் நான்கே ஆண்டுகளில் 50 மில்லியன் மக்களை சென்றடைந்துவிட்டது.

முதல் மொபைல் போன்
எரிக்ஸன் என்ற நிறுவனம் தான் முதன்முதலில் மொபைல் போனை தயாரித்தது. இந்த நிறுவனம் கடந்த 1979 ஆண்டு மொபைல் போனை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஜினியரிங் என்ற பெயர் பிறப்பு
இலத்தின் வார்த்தையான இதன் உண்மையான பொருள் "Cleverness" புத்திசாலி என்பதாகும்.

கூகுள் தேடல்
ஒருமுறை கூகுள் தேடல் செய்தால், 0.2 கிராம் CO2 வெளியாகிறதாம். ஏறத்தாழ கூகுளில் ஒருநாளுக்கு ஒரு பில்லியன் தேடல் வரை வருகிறதாம். அப்படியானால், ஒருநாளுக்கு 200 டன் CO2 வெளியாகிறது.

இன்ஜினியரிங் வகைகள்
நமக்கு தெரிந்தது எல்லாம், கணினி, சிவில், மெக்கானிக், எலெக்ட்ரானிக், கெமிக்கல் போன்ற சில துறைகள் தான் ஆனால், இன்ஜினியரிங்கில் நூறு வகையிலான பிரிவுகள் இருக்கின்றன.

உலகின் மூன்றில் ஒருவர்
நமது உலக மக்கள் தொகையில் மூன்றில் இருவர் தொலைப்பேசி மூலமாக இதுவரை ஒரு கால் கூட செய்ததுக் கிடையாது.

கணினியின் "எலி"
முதன் முறையாக கணினியில் மவுஸ் 1968 ஆம் ஆண்டு தான் முதல் முறையாக அறிமுகம் ஆனது. டக்ளஸ் எங்கெல்பார்ட் என்பவர் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஓர் கணினி சார்ந்த எக்ஸ்போவில் இதை அறிமுகப்படுத்தினார்.

முதல் இணைய ஒளிபரப்பு
முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கடந்த 1997ஆம் ஆண்டு திறப்புவிழா செய்தது தான் இன்டர்நெட்டின் முதல் இணைய ஒளிப்பரப்பு.



Click it and Unblock the Notifications
