Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க..
பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டா?
அதிர்ச்சியாக உள்ளதா? ஆஞ்சநேயரை நமக்கு ஒரு திருமணமாகாதவராக தான் தெரியும். பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க உறுதி எடுப்பவர்கள் ஆஞ்சநேயரின் பெயரிலேயே அந்த உறுதி மொழியை எடுப்பார்கள். அப்படியிருக்க பிரம்மச்சரிய கடவுளான அவருக்கு எப்படி மகன் இருக்க முடியும்? நாங்கள் கூறப்போகும் சில விஷயங்கள் கண்டிப்பாக உங்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கும். தொடர்ந்து படியுங்கள்!
இராவணனின் மகள் சீதா தேவியா...?
ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருப்பதும், யுத்த களத்தில் தன் எதிரியாக அவனை பார்க்கும் வரை இந்த விஷயம் அவருக்கே தெரியாது என்பதும் சுவாரசியமான விஷயமாகும். வியக்கத்தக்க கருத்துக்களை கொண்டுள்ள இந்து புராணங்களை படிப்பதற்கு மிகவும் புதிராக இருக்கும். மகாபாரதத்தில் தேவர்களை கூட்டி பாண்டவர்களை கருவில் சுமந்தார் குந்தி தேவி. ஆனால் காந்தாரியோ உடனே 101 குழந்தைகளை கருவில் சுமந்தார். ஆஞ்சநேயரின் மகனான மகர்ட்வாஜாவும் கூட இதே மாதிரியான வியக்கத்தக்க கருத்தின் மூலமாக தான் பிறந்தார்.
இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா
ஆஞ்சநேயரின் மகன் கருவானதை பற்றியும், ஆஞ்சநேயர் அவனை சந்தித்தது பற்றியும் இரண்டு விதமான கதைகள் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கதையும் சொல்வது ஒன்றை தான் - ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருந்தான். மகர்ட்வாஜா ஆஞ்சநேயருக்கு மகனாக மட்டும் இல்லாமல் மிகப்பெரிய போர் வீரனாகவும் இருந்தான். அப்படியானால் தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் யாரென தெரியாமல் போரில் மோதிக் கொண்ட போது என்ன நடந்திருக்கும்? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

ஆஞ்சநேயரும் மீனும்
வால்மீகி முனிவர் எழுதிய புகழ்பெற்ற ராமாயண வடிவத்தின் படி, ஒரு முறை ஆஞ்சநேயேர் நதியில் குளித்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஏறியிருந்த சூட்டினால், அவருடைய விந்தணு ஆற்றில் கலந்துள்ளது. அது மகர் என்ற மீன் போன்ற உருவத்தில் இருந்த ஒர் உயிரினத்திடம் சென்றது. அதனால் ஒரு கருவையும் பெற்றது. பின்னர் ராவணனின் உறவினர்களான அஹிராவணாவும் மஹிராவணாவும் நதிக்கரையில் பாதி குரங்கு, பாதி மீன் வடிவில் ஒரு குழந்தையை பார்த்தனர். அதுவே மகர்ட்வாஜா!

மகர்ட்வாஜா: மிகச்சிறந்த போர்வீரர்
வால்மீகி கூறிய ராமாயணத்தின் படி, ராமரையும் லக்ஷ்மணனையும் அஹிராவணா படாலாவிற்கு அழைத்துச் சென்ற போது, அவர்களை காப்பாற்ற ஆஞ்சநேயர் அவர்களை பின் தொடர்ந்துள்ளார். படாலா வாசலில் ஒரு உயிரினத்தால் ஆஞ்சநேயருக்கு சவால் எழுந்தது. அந்த உயிரினம் பாதி குரங்காகவும், பாதி ஊர்வனவாகவும் ஒரு மகாராவாக இருந்தது. அவன் தன்னை மகர்ட்வாஜா என்றும் ஆஞ்சநேயரின் மகன் என்றும் ஆஞ்சநேயரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ஆஞ்சநேயரின் அதிர்ச்சி
அந்த உயிரினம் கூறியதை கேட்டு வியந்த ஆஞ்சநேயர், தான் தான் ஆஞ்சநேயர் என்றும் தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் கூறினார். இருப்பினும், தியானத்தில் கண்களை மூடிக்கொண்ட ஆஞ்சநேயர் மகர்ட்வாஜா பிறப்பின் பின்னணியில் நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்தார். தன் மகனான மகர்ட்வாஜாவை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர் தன் ஆசீர்வாதங்களையும் அளித்தார்.

உண்மையான காவலர்
அரக்கர்களின் பிடியில் இருந்து ராமரையும் லக்ஷ்மணனையும் காப்பாற்ற, தன்னை அனுமதிக்குமாறு மகர்ட்வாஜாவிடம் ஆஞ்சநேயர் கேட்டுக் கொண்டார். ஆனால் ஆஞ்சநேயர் தான் தன் தந்தை என தெரிந்து பின்பும் கூட மகர்ட்வாஜா ஆஞ்சநேயரை அனுமதிக்கவில்லை. தன் எஜமானன் அஹிராவணாவின் சொல்லை மீற முடியாது என கூறினான். மாறாக ராமரும் லக்ஷ்மணரும் அடைக்கப்பட்டிருக்கும் கதவுக்கு வழிநடத்தி செல்ல ஆஞ்சயேருக்கு அவன் ஒரு விடுகதை போட்டான்.

மச்சானு
கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான ராமாயணத்தில், ஹனுமாரின் மகன் மச்சானு என அழைக்கப்பட்டான். ஆஞ்சநேயருக்கும் ராவணனின் கடற்கண்ணி மகளான சுவன்னமச்சாவிற்கும் பிறந்தவன் தான் மச்சானு. சில பதிப்புகளில், விந்தணு தண்ணீரில் சென்ற அதே கதை தான் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது சென்றது மகாராவிற்கு பதில் ராவணனின் கடற்கண்ணி மகளான சுவன்னமச்சாவிடம். இன்னும் சில பதிப்புகளில், இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டிருக்கும் போது, சுவன்னமச்சாவின் மேல் காதல் கொண்ட ஆஞ்சநேயர் ஒன்றாக இணைந்தனர். அந்த கடற்கண்ணி ஆஞ்சநேயரின் மகனான மச்சானுவை பெற்றெடுத்தார் என்றும் சொல்கிறது.

தந்தையை சந்திக்கும் மகன்
கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான ராமாயணத்தில், ராவணனின் படையுடன் நடந்த ஒரு போரின் போது, இடுப்புக்கு மேல் குரங்கை போலவும் இடுப்புக்கு கீழ் மீனை போல் இருந்த, சக்தி வாய்ந்த ஒரு எதிரியை எதிர்கொண்டார் ஆஞ்சநேயர். கடுமையான போருக்கு பிறகு, அந்த உயிரினத்தை தன் ஆயுதங்களால் தாக்க முயற்சி செய்த போது, வானத்தின் மேல் ஒரு தங்க நட்சத்திரம் ஜொலித்தது. தான் தாக்கப் போகும் தன் எதிரி வேறு யாருமல்ல, தனக்கும் ராவணனின் கடற்கண்ணி மகளான சுவன்னமச்சாவிற்கும் பிறந்த தன் சொந்த மகன் என அந்த நட்சத்திரம் உண்மையை கூறியது. தன் மகனை அடையாளம் கண்டு கொண்ட ஆஞ்சநேயர் உடனே நடு வானில் பாதி வழியில் சென்று கொண்டிருந்த தன் ஆயுதத்தை நிறுத்தினார்.



Click it and Unblock the Notifications











