Latest Updates
-
கருட புராணத்தின் படி இந்த 5 பழக்கங்களை உடனே கைவிடுங்க, இல்ல பண பிரச்சனை தலைவிரித்தாடும்! -
தமிழ் புத்தாண்டு நாளில் அழகா வெள்ளையா ஜொலிக்கணுமா? அப்ப இந்த உளுந்து ஃபேஸ் பேக்கை போடுங்க! -
சன்டே ஸ்பெஷல் பாலக் க்ரீன் சிக்கன் 65 - எப்படி செய்றது-ன்னு பாத்து மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க! -
நுங்கு உடல் சூட்டை குறைக்குமா? சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் நுங்கு சாப்பிடலாமா? - டாக்டர் பதில்கள்! -
138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: இந்த 3 ராசிக்காரங்க நிறைய பணத்தை சம்பாதிப்பாங்களாம்! உங்க ராசி என்ன? -
மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் வறுத்தரைச்ச சிக்கன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 12 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் தேடிவருமாம் -
வார ராசிபலன் (12 ஏப்ரல் 2026-18 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்குமாம் -
மணத்தக்காளி கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வாஸ்து படி வீட்டில் இந்த இடங்களில் கண்ணாடி மாட்டினால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம்
இயற்கை சீற்றத்தினால் அழிந்த உலக நகரங்கள்!!!
இதுவரை யாராலும் துல்லியமாக கணிக்க முடியாமல், அறிந்துக் கொள்ள முடியாமல் இருப்பது இயற்கை தான். இயற்கை ஒரு கண்ணாடியைப் போல நாம் அதற்கு நன்மை விளைவித்தால் நன்மையைத் தரும், நாம் அதற்கு தீமையை விளைவித்தால் பல மடங்கு அதிகமாக தீமையைத் திருப்பி தரும்.
ஆயினும், சில சமயங்களில் தானாகவே மாபெரும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. அது, சுனாமியாகவோ, பூகம்பமாகவோ, எரிமலை சீற்றங்களாகவோ ஏற்படுகின்றன.
இவை வருடம் தவறாமல் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன. நடுக் கடலில் நடக்கும் இயற்கை சீற்றங்கள் எண்ணில் அடங்காதவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான இயற்கை சீற்றங்களால் சில சமயங்களில் பெரும் உயிரிழப்புகளோடு சேர்ந்து நகரங்களும் அழிந்துப் போயிருக்கின்றன. அந்த நகரங்களைப் பற்றி தான் இங்குப் பார்க்கவிருக்கிறோம்....

"இராம் ஆப் தி பிள்ளர்ஸ்" - உபர், அரேபியப் பாலைவனம்
புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த பண்டையக் காலத்து நகரம், ஓர் பெரிய இயற்கை பேரழிவில் புதைகுழியில் புதைந்துப் போனது. கடந்த 1992 ஆம் ஆண்டு நாசாவின் ஒரு ஆராய்ச்சியின் போது தான் இந்நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. குரானில் கூட இந்த நகரத்தை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Image Courtesy

"சோதோம், கொமோரா" - டெத் கடல் (Death Sea) அருகாமையில்
சோதோம், கொமோரா (Sodom and Gomorrah) இந்த இரு நகரங்களும் டெத் கடல் அருகில் அமைந்திருந்தவை ஆகும். தீ மற்றும் கந்தக வீச்சின் காரணமாக இவ்விரு நகரங்களும் அழிந்துவிட்டன என்ற வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன. மேலும் இவை டெத் கடலின் தரைமட்டத்திற்கு கீழ் இப்போது மூழ்கிபோய் உள்ளது.
Image Courtesy

தோனீஸ் (Thonis) - எகிப்து
கி.மு 12 ஆம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டிராவிற்கு அருகாமையில் இருந்த ஒரு துறைமுக நகரம் தான் தோனீஸ். கி.மு 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் மிகப் பெரிய ஆதிக்கத்துடன் இருந்த இந்த நகரம், ஒரு இயற்கை பேரழிவில் கடலுக்குள் மூழ்கிப் போனது. கடந்த 2000 வருடம் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் தான் இந்த நகரத்தை மீண்டும் கண்டுப்பிடித்தார்.
Image Courtesy

ஹேலைக் - கிரீஸ்
கி.மு. 373 ஆம் ஆண்டு பூகம்பம் மற்றும் சுனாமியின் ஒரு சேர்ந்தத் தாக்கத்தினால் அழிந்தப் போனது ஹேலைக் (Helike) எனும் இந்த நகரம். அன்றையக் காலத்தில் இந்நகரம் ஒரு கலாச்சார வழிப்பாட்டுத் தளமாக இருந்திருக்கிறது.
Image Courtesy

போம்பீ - இத்தாலி
வெசுவிஸ் எனும் எரிமலையின் சீற்றத்தினால் கடந்த கி.மு 79 ஆம் ஆண்டு தீக்கிரையாகிப் போனது இந்த நகரம். ரோமாபுரியின் உல்லாச நகரமாகத் திகழ்ந்த இந்த நகரம் காலப்போக்கில் மறந்துப் போன நகமாக மறைந்துப் போனது.
Image Courtesy

எகிப்து, சிரியா (Egypt and Syria)
கடந்த 1202 ஆம் ஆண்டு எகிப்து மற்றும் சிரியாவைத் தாக்கி மாபெரும் பேரழிவை ஏற்படுத்தியது ஒரு பூகம்பம். கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேலானவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பூகம்பத்தினால் சுற்றி இருந்த ஏராளமான கிராமங்கள், வீடுகள் அழிந்துப் போயின. டமாஸ்கஸ், திரிபோலி, டயர், ஏக்கர் மற்றும் நேபுலஸ் போன்ற நகரங்களும் கூடப் பேரழிவை சந்தித்தன.
Image Courtesy

கால்வெஸ்டன் - டெக்சாஸ்
கடந்த 1900 ஆம் ஆண்டு டெக்சாஸில் உள்ள கால்வெஸ்டன் என்ற பகுதியில் ஏற்பட்ட சூறாவளிப் புயலின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் அழிந்துப் போயின. நன்கு வளர்ந்து வந்துக் கொண்டிருந்த நகரமாக இருந்த காலக்கட்டத்தில் தான் இந்த பேரழிவினால் நாசமாகிப் போனது இந்த நகரம்.
Image Courtesy

சான் பிரான்சிஸ்கோ - கலிபோர்னியா
இன்று உலக அளவில் பெரும் நகரமாகத் திகழும் சான் பிரான்சிஸ்கோ. கடந்த 1906 ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தினால் நிலைகுலைந்துப் போனது. 8.2 ரிக்டர் அளவு என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அழிவினால் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளை இழந்துத் தவித்தனர்.
Image Courtesy

தனுஷ்கோடி
கடந்த 1964 ஆம் ஆண்டு கடலில் ஏற்பட்ட பெரும் கடல் சூறாவாளியால் முற்றிலுமாக அழிந்துப் போனது இந்த துறைமுக நகரம். இப்போது அரசாங்கத்தினால் மக்கள் வாழ தடைவிதிக்கப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy

குமரி கண்டம்
இது நகரம் அல்ல, மனித உயிரினம் தோன்றிய மாபெரும் கண்டம். நாகரீகத்தை வளர்த்த மண். உலகின் முதல் மொழியாக நமது உயர் தனி செம்மொழி தமிழ் பிறந்த மண். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் தொடர் இயற்கை சீற்றத்தினால், இப்போது இந்திய பெருங்கடலின் உள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது குமரி கண்டம்.
Image Courtesy



Click it and Unblock the Notifications











