Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
இன்னும் 90 ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கிவிடுமா சென்னை???
ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்' என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.
தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பகுதிகளிலேயே ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து போயுள்ளதாகக் கூறுயுள்ளார்....

மாற்று எரிசக்தி
இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வருகிறார் ராபர்ட் ஸ்வான். இவர் சமீபத்தில் சென்னை வந்துள்ளார்.

வெப்பநிலை மாற்றம்
இது குறித்து ராபர் ஸ்வான் கூறுகையில், "நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது. என்று கூறியிருக்கிறார்.

பனி மலைகள் வேகமாக உருகுகின்றன
அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.

கடல் மட்டம் உயரும்
விஞ்ஞானிகள் கூறியதை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இரண்டு மீட்டர் கடல் மட்டம் உயர்ந்தால் கூட உலகில் உள்ள பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும் என்று கூறியுள்ளார் ராபர்ட். இது குறித்து நிறைய பிரச்சாரம் செய்து வருகிறார்.

சூரிய மின்சாரம்
இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.

ஓசோன் மண்டலம் பாதிப்பு
ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தான் இதற்கான முக்கிய காரணம். இவர்களது துருவ பகுதியில் நடந்துக் கொண்டு ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த போது, கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்க ஆரம்பித்தன அதற்கு காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதிர்கள் தான்.

அதிர்ச்சி
இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

வளர்ந்த நாடுகளே காரணம்
உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.

ராபர்ட் ஸ்வான் பற்றிய சிறு குறிப்பு
தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்தார். ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார். லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
