Latest Updates
-
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம்
இந்தியாவில் லட்சம் கோடிகளில் நடந்த மாபெரும் ஊழல் குற்றங்கள்!!!
இந்தியா, அரசு+இயல்= அரசியல் என்று பாராமல், அரசியல் என்பதை ஓர் குற்றத்தையும், பாவத்தையும் போல் மக்கள் பார்க்கும் நாடு. இதற்கு காரணம் எண்ணற்ற ஊழல்கள். வார்டு கவுன்சிலர்களில் இருந்து வட்டம், மாவட்டம், கோட்டை, செங்கோட்டை வரை எங்கும், எதிலும் ஊழல்.
இந்தியாவைக் கண்டு உலகே ஆச்சரியப்படும் அரிய தகவல்கள்!!!
அரசு அலுவலகங்களில் இதற்கு ஈடாக போட்டி போட்டுக் கொண்டு லஞ்சம் வேறு. ஒட்டுமொத்தமாக, திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது மட்டும் தவிர்த்து வேறு எதிலும் நம் நாட்டு மக்கள் அரசை விரும்புவதில்லை.
இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்!!!
இதற்கு முக்கியக் காரணமாக திகழ்வது இந்த லஞ்சமும், ஊழல் தான். எண்ணற்ற ஊழல்கள் நடந்திருந்தாலும், ஒவ்வொரு இந்தியனாலும் மறக்க முடியாத மாபெரும் ஊழல் குற்றங்கள்...

நிலக்கரி ஊழல்
இந்தியாவில் நடந்த எல்லா ஊழல்களுக்கும் அன்னை என்று கூறலாம் இந்த ஊழலை. கடந்த மத்திய ஆட்சியில் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது நடந்த ஊழல் தான் இது. இந்த ஊழலினால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நட்டம் மட்டுமே 10 லட்சத்தி 60 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது கடந்த 2004-2009 ஆண்டு காலங்களில் நடந்த ஊழல்.

2G அலைக்கற்றை ஊழல்
கடந்த 2008ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் வழக்கு. கிட்டத்தட்ட இந்திய மக்கள் அனைவரையும் வாயை பிளக்கவைத்த வழக்கு என்றும் கூறலாம். ஏறத்தாழ 1.76 லட்சம் கோடி ரூபாய் இந்திய கஜானாவிற்கு நட்டம் ஏற்படுத்திய ஊழல் தான் இந்த 2G அலைக்கற்றை வழக்கு. அப்போதைய டெலிகாம் அமைச்சர் ராஜா அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இன்றுவரை நடந்து வருகிறது இந்த ஊழல் வழக்கு. இதன் பின்னணில் யார் இருக்கின்றார் என்று தமிழகமே அறிந்த உண்மை.

வாக்ப் போர்டு (Wakf Board) நில ஊழல்
கடந்த 2012ஆம் ஆண்டு கர்நாடக கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் வெளிவந்த ஊழல் வழக்கு. கிட்டத்தட்ட 27,000 ஏக்கர் நிலம் தவறான முறையில் கையாளப்பட்டு 1.5 - 2 லட்சம் கோடி ரூபாய் அளவில் நடந்த ஊழல் தான் இது.

காமன்வெல்த் கேம்ஸ் ஊழல்
கடந்த 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் கேம்ஸ் போட்டிகளில் மட்டுமே 70,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது. செலவு செய்ய ஒதுக்கப்பட்ட பணத்தை அபகரிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது மட்டுமின்றி விளையாட்டு துறையில் பல ஊழல்கள் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

சத்யம் ஊழல்
கடந்த 2009ஆம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவுனர் ராமலிங்கா ராஜு செய்த நிதி மோசடியில் ஈடுப்பட்ட வழக்கு. இதில் ஊழல் செய்யப்பட்டதாக கூறப்படுவது 14,000 கோடி ரூபாய் ஆகும்.

ஹவாலா ஊழல்
ஹவாலா என்ற வார்த்தை பிரபலமானதே இந்த ஊழல் நடந்ததற்கு பின்பு தான். யாராலும் மறக்க முடியாத மற்றுமொரு மாபெரும் ஊழல். கடந்த 1996ஆமாண்டு நடந்த இந்த ஊழலில் $18 மில்லியன் டாலர்கள் (100 கோடி) மதிப்புடைய பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழலில் பல முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர் அடிபட்டது வெளிப்படையாகவே தெரிந்தது.

ஸ்டாக் மார்க்கெட் ஊழல்
ஹர்ஷத் மேத்தா மற்றும் கேதன் பரேக் ஊழல். இதை ஊழல் என்று சொல்வதை விட கொள்ளை என்று தான் சொல்ல வேண்டும். இருவரும் சேர்ந்து ஸ்டாக் மார்கெட்டில் பணம் போட்டிருந்தவர்களின் பணத்தை அரித்து, சுரண்டினார்கள் என்று தான் கூற வேண்டும். ஹர்ஷத் மேத்தா 4000 கோடியும், கேதன் பரேக் 1000 கோடியும் சேர்த்து, 5000 கோடி ரூபாய் ஊழல் நடந்தது. ஸ்டாக் மார்க்கெட்டில் இருப்பவர்களினால் மறக்க முடியாத சம்பவம் இது.



Click it and Unblock the Notifications