தமிழகத்தின் சிறந்த முதலமைச்சர் காமராஜர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

கல்வி கண் திறந்த காமராஜர், கருப்பு காந்தி, கர்ம வீரர் என பல புகழ் பெயர்கள் இவருக்கு உண்டு. இன்று வரையிலும், இவரை போன்ற வேறொரு தலை சிறந்த அரசியல் தலைவர் எந்த மாநிலத்திற்கும், நமது இந்தியாவிற்கும் கிடைக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!

மக்களின் நலனுக்காக உழைத்த நல்ல உள்ளம் காமராஜருடையது. நம் நாடு மேலுயர வேண்டும் என்றால், முதலில் கல்வி நிலையில் மேன்மை நிலையை அடைய வேண்டும் என்று அன்றே உணர்ந்து தமிழகமெங்கும் நிறைய பள்ளிக் கூடங்களை திறந்து வைத்தார் காமராஜர்.

படிக்காமலேயே அரசியலில் கலக்கிய அரசியல்வாதிகள்!!!

கடைசி வரை மக்களின் பணத்தில் ஒரு பைசாவை கூட வீணாக செலவளிக்காமல் உத்தமராக வாழ்ந்து, மறைந்து புனித ஆத்மா காமாராஜர். ஆனால், இத்தனை நல்லது செய்த இவரையே, மக்கள் கடைசியில் சரிவர புரிந்துக்கொள்ளவில்லை என்பது, மக்களில் அறியாமையை உணர்த்துகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

இனி, கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பற்றி காண்போம்....

உலகத்தில் உள்ள மிகவும் மோசமான மற்றும் கொடூரமான 10 சர்வாதிகாரிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 காமராஜர் பெயர் காரணம்

காமராஜர் பெயர் காரணம்

குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார் காமராஜர். இவர்களது குல தெய்வமான காமாட்சியின் பெயரையே இவருக்கு "காமாட்சி" என்ற பெயராக வைத்தனர். சிவகாமி அம்மாள் இவரை எப்போதும் ராசா என்று தான் அழைப்பார், இந்த பெயரே காலப்போக்கில் மருவி காமராசு என்று ஆனது.

கல்வி கண் திறந்தவரின் கல்வி நிலை

கல்வி கண் திறந்தவரின் கல்வி நிலை

இவர் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் படித்து வந்தார், குடும்ப சூழல் காரணத்தினால் இவரால் படிப்பை தொடர முடியாமல் போனது. அதனால், இவரது தாய் மாமன் வைத்திருந்த துணிக்கடையில் வேலைக்கு மறந்தார்.

துணிக்கடையில் இருந்து அரசியல்

துணிக்கடையில் இருந்து அரசியல்

தாய் மாமாவின் துணிக்கடையில் வேலை செய்துக் கொண்டிருந்த போது, பெ.வரதராஜுலு நாயுடு போன்ற தேச தலைவர்களின் பேச்சில் ஈர்ப்பு ஏற்பட்டு அரசியலிலும், சுதந்திர போராட்டங்களிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

16வயதில் காங்கிரஸ் உறுப்பினர்

16வயதில் காங்கிரஸ் உறுப்பினர்

தனது 16வது அகவையில் தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டார். வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்திலும் கலந்து கொண்டார் காமராஜர். இதற்காக கைது செய்யப்பட்டு கல்கத்தா சிறைக்கு சென்றார் காமாராஜர்.

காமராஜரின் சிறை வாழ்க்கை

காமராஜரின் சிறை வாழ்க்கை

1940-இல் கைதாகி வேலூர் சிறைக்கும், 1942-இல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றிருக்கிறார் காமராஜர்.

காமராஜரின் அரசியல் குரு

காமராஜரின் அரசியல் குரு

சிறந்த பேச்சாளாரும், நாடாளுமன்றவாதியுமான சத்தியமூர்த்தி அவர்களை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார் காமாரஜார். 1936-இல் சத்தியமூர்த்தி அவர்கள் பிரதேச காங்கிரசின் தலைவரான போது, காமராஜர் ஐயா அவர்களை செயலாளர் பொறுப்பில் அமர்த்தினார்.

குறைந்த அமைச்சர்கள்

குறைந்த அமைச்சர்கள்

காமாராசரின் அமைச்சரவையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் அமைச்சர்கள் இருந்தனர். மொத்தம் 8 பேர் கொண்ட அமைச்சரவை தான் காமராஜர் ஐயா அமைத்திருந்தார்.

போட்டியாளர்களுக்கும் அமைச்சர் பதவி தந்தவர்

போட்டியாளர்களுக்கும் அமைச்சர் பதவி தந்தவர்

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் ஆகிய இருவரையுமே தனது அமைச்சரவையில் சேர்த்திருந்தார காமராஜர் ஐயா அவர்கள்.

குறிப்பிடத்தக்க அம்சம்

குறிப்பிடத்தக்க அம்சம்

காமராஜர் அவர்களின் அமைச்சரவையின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை. இதன் அமைச்சராக பி.பரமேசுவரன் என்கிற அமைச்சர் அமர்த்தப்பட்டிருந்தார்.

மதிய உணவு திட்டம்

மதிய உணவு திட்டம்

காமராஜர் ஐயா கல்வியின் நிலையை உயர்த்த நிறைய உழைத்தார். பள்ளிகள் தொடங்கப்பட்டும் கூட மாணாவர்கள் படிக்க வரவில்லை. காரணம் வீட்டின் நிலை கருதி நிறைய குழந்தைகள் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தனர். எனவே, முதலில் அவர்களது பசியை போக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டம் கொண்டுவந்து. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தார் காமராஜர். இதுவே, பின்னாளில் எம்.ஜி.ஆர். அவர்களால் சத்துணவு திட்டம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

கல்வியில் முன்னேற்றம்

கல்வியில் முன்னேற்றம்

ஆங்கிலேயர்கள் காலத்தில் படித்தவர்களின் விழுக்காடு வெறும் 7% தான் இருந்தது, இதை 37%மாக உயர்த்தினார் காமராஜர். 180 நாட்களாக இருந்த பள்ளி வேலை நாட்களை 200 நாட்களாக மாற்றினார். சென்னையில் இந்திய தொழில்நுட்ப கல்லூரி (I.I.T) தொடங்கவும் காரணமாக இருந்தார்.

 காமராஜர் ஐயா அவர்களின் காலத்தில் தொடங்கப்பட்ட பொதுப்பணி நிறுவனங்கள்

காமராஜர் ஐயா அவர்களின் காலத்தில் தொடங்கப்பட்ட பொதுப்பணி நிறுவனங்கள்

பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF), நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டவை தான்.

தேர்தலில் தோல்வி

தேர்தலில் தோல்வி

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் என்பவரால் 1,285 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார். நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1969 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்

காமராஜர் திட்டம்

காமராஜர் திட்டம்

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர். முதல்வர் பணியை விட தேசியப் பணியே முக்கியம் என தனது முதல்வர் பதவியை விலகல் செய்து பக்தவச்சலம் அவட்களிடம் கொடுத்துவிட்டு டெல்லி சென்றார், அங்கு நேருவின் அனுமதியோடு காமராஜர் திட்டம் (K-Plan) மற்றும் இந்திய தேசிய தலைவராக உதயமானார் காமராஜர்.

"கிங் மேக்கர்" காமராஜர்

நேருவின் மறைவிற்கு பிறகு, இந்திய பிரதமர்களாக லால் பகதூர் சாஸ்திரி அவர்களையும், ஐவரும் இறந்த பிறகு இந்திரா காந்தியையும் பதவியில் அமர்த்தியவர் காமராஜர். இதனால் தான் "கிங் மேக்கர்" என்று அழைக்கபட்டார் காமராஜர்.

கட்சிக்குள் பூசல்

கட்சிக்குள் பூசல்

ஒருசில உட்கட்சி பூசல்களினால், மீண்டும் தமிழக அளவிற்குள் தனது அரசியல் வாழ்க்கையை சுருக்கிக் கொண்டார் காமராஜர்.

நினைவு சின்னங்கள்

நினைவு சின்னங்கள்

தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

Desktop Bottom Promotion