சென்னை மழை: ரியல் சூப்பர்ஸ்டாராக மாறிய நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி!

Posted By:
Subscribe to Boldsky

வரலாறு காணாத அளவு சென்னையில் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் இப்போது பெய்து வரும் மழை தான் அதிக பட்சமாக பதிவாகியுள்ளது. இது பெரும்பாலான சென்னையை நீரில் மூழ்கடித்துவிட்டது. சென்னையில் முதல் மாடி குடியிருப்பு வரையிலும் மழைநீர் உட்புகுந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து போய்விட்டது.

நல்ல உள்ளம் கொண்ட மக்கள் இருக்கும் ஊர்களில் மழை பெய்யும் என்பது சான்றோர் வாக்கு. ஆனால், சென்னையில் பெய்து வரும் இந்த விடாத மழை பல நல்ல உள்ளங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. பெயர் தெரியாத ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

இதில் நடிகர் சித்தார்த் ஆரம்பம் முதலே தனது ட்விட்டர் தளத்தின் மூலமாக நிறைய முயற்சி எடுத்து ரியல் சூப்பர்ஸ்டாராக உருவெடுத்துள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேசிய ஊடகங்கள் மீது பாய்ச்சல்

தேசிய ஊடகங்கள் மீது பாய்ச்சல்

நேற்று முன்தினம், சென்னை மழை வெள்ளத்தை பற்றி அக்கறை இன்றி செயல்படும் தேசிய ஊடங்கள் மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் நடிகர் சித்தார்த். நேரடியாக அவர்களை தொடர்புக் கொண்டு பேசவும் செய்தார்.

ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி

நடிகர் சித்தார்த் உடன் சேர்ந்து வானொலி தொகுப்பாளர் ஆர்.ஜே. பாலாஜியும் உதவி செய்து வருகிறார். ட்விட்டரில் இவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை நேரடியாக செய்து வருகிறார்கள்.

கை கோர்த்த நட்சத்திரங்கள்

கை கோர்த்த நட்சத்திரங்கள்

வாகனங்கள் தேவைப்படுகிறது என உதவி கோரிய போது, நடிகர். உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு, இயக்குனர் மோகன் ராஜா, போன்ற நட்சத்திரங்கள் தாங்களும் உதவிக்கு வருவதாகவும், எங்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

அறிவுரைகள்

அறிவுரைகள்

வெறும் உதவி மட்டும் இன்றி அவசரக் கால அறிவுரைகளையும் மக்களுக்கு அவ்வப்போது தனது ட்விட்டர் தளம் மூலம் மக்களுக்கு தெரிவித்து வந்தார் சித்தார்த். இவரது இந்த செயல்பாடுகள், உதவும் கரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.

கார்களில் இருக்க வேண்டாம்

கார்களில் இருக்க வேண்டாம்

மும்பையில் இதுப் போன்ற வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் கார்களில் ஆபத்து இல்லை என உள்ளே இருந்த பலர் உயிர் இழந்த சம்பவம் நாம் யாரும் மறந்திருக்க முடியாது. எனவே, இவ்வாறு யாரும் முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

அவசர உதவிகள்

அவசர உதவிகள்

தன்னிடம் உணவுப் பொட்டலங்கள் இருக்கும் போதெல்லாம், யாருக்கு எங்கு உணவு தேவைப்படுகிறது, எங்கே வந்து தர வேண்டும் எனவும், யாரேனும் உங்களிடம் உணவு இருந்தால் தந்து உதவும் படியும் சித்தார்த் மற்றும் குழுவினர் கேட்டு உதவி வருகிறார்கள்.

அன்றாட தேவை

அன்றாட தேவை

இந்த மழை மற்றும் கடும் குளிரில் மக்கள் உறங்க பாய்கள் நிறைய தேவைப்படுகிறது. எனவே, முடிந்த வரை பாய்கள் இருந்தால் கூட தந்து உதவுங்கள் என மக்களிடம் கேட்டுக் கொண்டார் நடிகர் சித்தார்த்.

மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்

மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்

சிலர் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வருவதால், உதவி செய்து வருபவர்களுக்கு இடையூறாக இருக்கிறது. அதனால், தயவு செய்து வீட்டில் இருக்கும் மக்கள் வெளியே வர வேண்டாம் என உதவி செய்பவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும், ட்விட்டர் மூலமாக பலரும் நடிகர் சித்தார்த்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு உதவ வேண்டி கேட்டுக் கொண்டனர்.

ஒரு துளி பெரு வெள்ளம்

ஒரு துளி பெரு வெள்ளம்

நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து தொடங்கி இப்போது பலநூறு பேர் சேர்ந்து தங்களால் முடிந்த உதவிகளை இராப்பகல் பாராமல் செய்து வருகிறார்கள். மேலும், இராணுவம், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என சென்னையை மீட்டெடுக்க ஒரு பெரும் கூட்டம் செயல்பட்டு வருகிறது.

மனித நேயம் இறந்திவிடவில்லை

மனித நேயம் இறந்திவிடவில்லை

சமீபக் காலமாக மக்கள் மத்தியில் மனித நேயம் இல்லை என்ற குற்றசாற்று நிலவி வந்தது. ஆனால், சென்னையில் கடந்த சில இரண்டு நாட்களாக சாலையில் ஓடும் வெள்ளத்தையும் தாண்டி மனித நேயம் தலைதூக்கி மக்களை காப்பாற்றி வருகிறது. முடிந்த வரை வெளியூர் மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chennai Floods: Actor Siddharth Become Real Life Superstar

Actor Siddharth and RJ Balaji joined hands together with volunteers to help affected people. They working for day and night to lift chennai up.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter