Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
தனிமையில் இருக்கும் இனிமையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சுக்க இத படிங்க!
தனியாக இருக்க பெரும்பாலும் யாருக்கும் பிடிக்காது. போர் அடிக்கும், சலிப்பு ஏற்படும் என எண்ணுவர். ஆனால், சிலர் வித்தியாசமாக தனிமையில் இருக்கவே அதிகம் விரும்புவர். அதற்கு காரணம், அவர்களுக்கு தான் தெரியும் தனிமையில் இருக்கும் இனிமையைப் பற்றி. பெரும்பாலும் இப்போது இருக்கும் சந்ததியர் ஓர் கூட்டத்தின் நடுவே இரைச்சலை ஏற்படுத்தி கத்தி கும்மாளம் போடுவது தான் மகிழ்ச்சி என எண்ணி சுற்றி திரிகின்றனர். அதையெல்லாம் தாண்டி, தனிமையில் ஓர் சொர்க்கமயமான இன்பம் மறைந்திருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.
புத்தக வாசிப்பு, பிடித்த இசையினை தனிமையில் நிசப்தமான நிலையில் கேட்பது என தனிமையில் நாம் பெற வேண்டிய இன்பங்கள் ஏராளம் இருக்கின்றன. அதைப் பற்றி எல்லாம் விரிவாக அறிந்து கொள்ளத் தான் இந்த கட்டுரை உங்களுக்காக. தனிமையை சாபம் என எண்ணுபவர்களுக்கு. இனி, அது வரம் என எண்ணிடத் தோன்றும். எந்த ஒரு விஷயத்தையும் நாம் முற்றிலும் அறியாமல் புறம் பேசுவது, குற்றம் கூறுவது தவறு. தனிமையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். தனிமையில் இருக்கும் இனிமையை பயில கற்றுக் கொள்ளுங்கள்...

புத்தகம் வசிப்பது
இரைச்சல் நிறைந்த இடத்தில் கண்டிப்பாக நீங்கள் புத்தகம் வாசிக்க முடியாது. புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் தனிமையில் அவர்கள் காணும் இனிமை பற்றி. புத்தகம் வாசிப்பது சிறந்த பொழுதுபோக்காக உலக அளவில் கருதப்படுகிறது. அது மட்டும் அல்லாமல், உங்கள் அறிவாற்றலை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் புத்தக வாசிப்பு உதவும்.

இசை
பெரும்பாலானவர்கள் பேருந்தில் செல்லும் போதும், சாலையில் நடந்து போகும் போதும், அவர்களுக்கு பிடித்தமான பாடல்களை கேட்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், உங்களுக்குப் பிடித்த அதே பாடலை யாரும் இல்லாத போது தனிமையில் நீங்கள் கேட்டது உண்டா? கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு பிடித்த இசையை அவ்வளவு இனிமையாக வேறு எந்த ஒரு சூழலும் உங்களுக்கு தந்துவிட இயலாது.

ஷாப்பிங்
வார இறுதி நாட்களில் ஷாப்பிங் மால்கள் அல்லது கடை வீதிகளுக்கு சென்று அடித்து பிடித்து ஷாப்பிங் செய்து நொந்துப்போய் வீடு திரும்புவீர்கள். ஏதோ கட்டிப் புரண்டு சண்டையிட்டு வந்தது போல இருக்கும். அதே ஷாப்பிங்கை, வார நாட்களில் ஒரு நாள் விடுமுறை எடுத்து பகல் நேரத்தில் தனிமையில் ஷாப்பிங் செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை ரசித்து, தேர்வு செய்து வாங்கி வரும் அனுபவம் அப்போது தான் கிடைக்கும். இவையெல்லாம் தனிமை விரும்பிகள் மட்டுமே அனுபவிக்கும் இனிமையான தருணங்கள் ஆகும்.

திரைப்படம்
திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்திட ஒரு பட்டாளம் இருக்கும் அதே சமயம் திரைப்படத்தை தனிமையில் ரசித்து பார்க்க வாரம் கழித்து திரையரங்குகளுக்கு செல்லும் நபர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். முதல் நாள் முதல் காட்சி நடிகர்களின் ரசிகர்களுக்கு என்றால், தனிமையில் படத்தை ரசிப்பவர் சினிமா ரசிகராக இருப்பார்கள்.

உணவுப் பழக்கம்
தனிமையில் சிலரை நீங்கள் ஹோட்டல்'களில் கண்டிட நேர்ந்திருக்கும். அவ்வளவு பொறுமையாய் உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ஏன் இதே வேலையை வீட்டில் செய்பவர்களும் உண்டு. சமையலை ஒரு கலையாய் கையாள்பவர்கள் அவர்கள். நீங்களும் முயற்சி செய்துப் பாருங்கள். அதன் ருசியே தனியாய் இருக்கும்.

காதல்
தனிமையை அதிகம் நேசிப்பவர்கள் பெரும்பாலும் தன்னை தானே விரும்புவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு தெரியுமா ஓர் ஆய்வறிக்கையின் முடிவில், தன்னை தானே யார் அதிகமாக விரும்புகின்றனரோ அவர்கள் அதிகம் சாதிக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.

திருமணம்
தனிமையை அதிகம் நேசிக்க கற்றுக் கொள்பவர்கள், அவர்களது இல்வாழ்க்கை துணைவியரையும் அதிகம் நேசிப்பார் என கூறுகின்றனர். தனிமையை மேலும் இனிமையாக்கிட மனைவியை தவிர வேறு யாரால் முடியும். சரிதான நான் சொல்றது!



Click it and Unblock the Notifications