விருச்சிக ராசிக்காரர்களின் குணாதிசயங்கள்!

By Ashok CR

பல பிரபலங்களும், புகழ் வாய்ந்தவர்களும் விருச்சிக ராசிக்காரர்களாக இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது வெறுமனே அதிர்ஷ்டம் என கூறி விட முடியாது. மற்ற ராசிக்காரர்களை விட விருச்சிக ராசிக்காரர்கள் வெற்றியாளர்களாக இருப்பது என்பது உண்மையே. சரி விருச்சிக ராசிக்காரர்கள் மட்டும் ஏன் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள் என தோன்றுகிறதா? அதற்கு காரணம் அவர்களை அதிர்ஷ்ட தேவதை தேடி வருவது மட்டும் தானா? அல்லது அவர்களின் இயற்கையான குணாதிசயங்களே அவர்களுக்கு வெற்றியைத் தேடி தருகிறதா?

சிம்ம ராசிக்காரர்களை தனித்து காட்டும் அட்டகாசமான குணாதிசயங்கள்!!!

சொல்லபோனால் இவை இரண்டின் கலவையே அதற்கு காரணம். பொதுவாக விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிர்ஷ்டசாலியாகவும், லட்சியவாதிகளாகவும் இருப்பார்கள். இந்த ராசிக்கரர்களுக்கு வெற்றி தேடி வருவதற்கு இன்னும் பல்வேறு காரணங்களும் உள்ளது. உதாரணத்திற்கு விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே சூழ்ச்சித் திறத்துடன் கையாளும் திறனை பெற்றிருப்பார்கள். தங்களின் தொழிலில் இதனை அவர்கள் நேர்மறையாக பயன்படுத்தலாம். ஒரு வேளை இந்த ராசிக்காரர்கள் நச்சரிக்கும் மனைவியாக இருந்தால், இதனை எதிர்மறையாகவும் பயன்படுத்தலாம்.

சுவாரஸ்யமான வேறு: உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்!!!

விருச்சிக ராசிக்காரர்கள் பெரிய பொய்யர்கள். சொல்லப்போனால் பொய் சொல்வதில், நீங்கள் பார்ப்பதிலேயே அவர்கள் தான் மிக சிறந்தவர்களாக திகழ்வார்கள். அவர்களின் ரகசிய இயல்பு அவர்களின் பொய்யை உண்மையானதாக வெளிக்காட்டும். மேலும் தங்களை சுற்றி ஒரு புதிரான முன்னுணர்வை வைத்திருப்பார்கள். அவர்களின் பொய் இந்த தொகுப்பின் ஒரு பகுதியாக விளங்கும். அதனால் தான் என்னவோ விருச்சிக ராசிக்காரர்கள் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். விருச்சிக ராசி கொண்ட ஆண்கள் அல்லது பெண்கள் வெற்றி என்ற இலக்கை எப்படி சுலபமாக அடைகிறார்கள் என்பதற்கான குணங்களின் பட்டியலை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காந்த சக்தி உள்ளவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்

காந்த சக்தி உள்ளவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்

மற்றவர்களை தன் வசம் இழுக்கும் காந்த சக்தியை விருச்சிக ராசிக்காரர்கள் கொண்டுள்ளார்கள். நீங்கள் ஏதோ ஒரு பார்ட்டியில் ஒருவர் மீது ஈர்க்கப்பட்டு, அது ஏன் என தெரியாமல் விழித்தால், கண்டிப்பாக அந்த நபர் விருச்சிக ராசிக்காரராக தான் இருக்க வேண்டும். தங்கள் வேலையை நிறைவேற்றிக் கொள்ள அடுத்தவர்களை தங்கள் வசம் இழுக்க தங்களின் இந்த காந்த சக்தியை பயன்படுத்திக் கொள்வார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் லட்சியவாதிகள்

விருச்சிக ராசிக்காரர்கள் லட்சியவாதிகள்

உங்களுக்கென கனவுகள் இல்லையென்றால் உங்களுக்கு வாழ்க்கையில் எதுவுமே இருக்க போவதில்லை. விருச்சிக ராசிக்காரர்களோ பெரிய கனவாக காண தயங்கவே மாட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் லட்சியவாதிகளாவே இருப்பார்கள். இந்த லட்சியமே அவர்களை மிகவும் கடினமாக உழைக்க வைத்து, தங்கள் கனவை அடைய வைக்கும்.

தீவிரமாக உழைப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்

தீவிரமாக உழைப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் அதிகமான விருப்பு கொண்ட இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதனால் தாங்கள் விரும்பி எதை செய்தாலும் அதில் தீவிரமாக ஈடுபடுவார்கள். தாங்கள் விரும்பிய தொழிலை செய்து வந்தால், அதில் கண்டிப்பாக உச்சத்தை தொடுவார்கள். அதற்கு காரணம் தீவிரமான கடின உழைப்பை அதில் செலுத்துவதே.

குறைவாக பேசி காரியத்தில் கண்ணாக இருப்பவர்கள்

குறைவாக பேசி காரியத்தில் கண்ணாக இருப்பவர்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ரகசியம் காப்பவர்கள். ஒதுங்கி நடக்கிற அவர்களின் குணத்திற்கு இதுவே மிகவும் பொருந்தவும் செய்யவும். உள்முகச் சிந்தனையாளர்களாக இல்லாமல் போனாலும் கூட, தேவைப்பட்ட நேரத்தில் மட்டுமே பேசுவார்கள். அவர்களின் குணத்திற்கு இது கூடுதல் வலுவை சேர்க்கிறது. அதனால் நினைத்ததை அடைபவர்களாக அவர்கள் பார்க்கப்படுகின்றனர்.

சூழ்ச்சித் திறத்துடன் இருந்தாலும் கூட ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்க மாட்டார்கள்

சூழ்ச்சித் திறத்துடன் இருந்தாலும் கூட ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்க மாட்டார்கள்

விருச்சிக ராசிக்கார்கள் சிறந்த முதலாளிகளாக இருப்பார்கள். காரணம் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக பணியாளர்கள் மத்தியில் அவர்கள் காட்சியளிப்பார்கள். சூழ்ச்சி திறன் என்பது இயற்கையாகவே அவர்களுக்கு வரும் குணமாகும். அதனால் பணியாளர்களிடம் அமைதியாக பேசி வேளை வாங்கும் திறமை அவர்களிடம் உண்டு. மரியாதையற்ற, அதிகார முறையை அவர்கள் கையாள வேண்டிய அவசியமே இல்லை.

விருச்சிக ராசிக்காரர்களின் நினைவாற்றல் அசாத்தியமானது

விருச்சிக ராசிக்காரர்களின் நினைவாற்றல் அசாத்தியமானது

ஆட்களை கையாளுவதில் விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் திறமையானவர்கள். நல்லதையோ கெட்டதையோ அவர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்தால் அதற்கான வெகுமதியை அவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு அளிப்பார்கள். அதே போல அவர்களுக்கு நீங்கள் கெடுதல் செய்வது உங்கள் சொந்த காசில் நீங்கள் சூனியம் வைத்துக் கொள்வது போலாகும்.

மிகவும் ரகசியமானவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்

மிகவும் ரகசியமானவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள்

அடிப்படையில் விருச்சிக ராசிக்காரர்கள் அதிகமாக பேச மாட்டார்கள். முடிந்த வரை அலுவலக அரசியல் மற்றும் வம்பளப்பதை விட்டு விலகியே இருப்பார்கள். அதனால் சுத்தமானவர்களாக பார்க்கப்படுவார்கள். அதே போல் அனைவரும் விரும்பிய படி நடப்பார்கள். யாரையும் கஷ்டப்படுத்த மாட்டார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் சிறந்த பொய்யர்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் சிறந்த பொய்யர்கள்

உங்களை சமாதானப்படுத்தும் வகையில் ஒருவாரால் சிறந்த வகையில் பொய் கூற முடியும் என்றால், அது விருச்சிக ராசிக்காரர்களாக தான் இருக்க முடியும். முகத்திற்கு நேராக பச்சை பொய் பேச மாட்டார்கள். காரணம் அவர்கள் முட்டாள் இல்லை. ஆனால் அதற்காக முழு உண்மையையும் கூற மாட்டார்கள். இந்த இரக்கமற்ற கார்பரேட் உலகில் தங்களை காக்கும் அளவிலான பொய்யை கூற தயங்க மாட்டார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் தனிமைவாதிகள்

விருச்சிக ராசிக்காரர்கள் தனிமைவாதிகள்

விருச்சிக ராசிக்கரர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் குறைந்த அளவிலேயே இருப்பார்கள். அனைவரையும் சற்று தூரத்தில் தான் வைத்திருப்பார்கள். அதே போல் யாரையும் அவ்வளவு சுலபத்தில் நம்பி விட மாட்டார்கள். உயர இருக்கும் போது தனியாக இருந்தாலும் கூட சிறந்த காட்சியை வெளிப்படுத்தும் தானே.

விருச்சிக ராசிக்காரர்கள் ஆழமானவர்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் ஆழமானவர்கள்

சமுத்திரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே; மேற்புறத்தில் பார்க்க அமைதியாக தென்பட்டாலும் கூட அதன் ஆழத்தில் நடப்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. விருச்சிக ராசிக்கரர்களும் சமுத்திரத்தை போன்றவர்கள் தான். மிகவும் ஆழமானவர்கள்; அறிவு ரீதியாகவும் சரி, உணர்ச்சி ரீதியாகவும் சரி.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion