Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
ஹூக்கா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
பெரும்பாலான மக்கள் சிகரெட்டிற்கு பதிலா ஹூக்கா பிடிப்பதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் சிகரெட்டை விட மிகவும் கொடியது தான் ஹூக்கா. மேலும் ஆய்வுகள் பலவற்றிலும் சிகரெட் பிடித்தால் உள்ளுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பாதிக்கப்படும் என்றும், அதுவே ஹூக்கா பிடித்தால், விரைவிலேயே உள்ளுறுப்புகளானது பாதிக்கப்படும் என்றும் கூறுகின்றன.
பொதுவாக ஹூக்காவானது வாட்டர் பைப் கருவியின் மூலம் புகைக்கப்படுவதாகும். இந்த வாட்டர் பைப்பின் அடியில் தண்ணீர் இருக்கும். அதற்கு மேலே புகையிலையானது சூடேற்றப்பட்டு நீருடன் சேர்ந்து குளிர்ச்சியான காற்றுடன் உள்ளிழுக்கப்படும். இந்த ஹூக்காவை உலகில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும். அதிலும் ஒவ்வொரு இருப்பிடத்தைப் பொறுத்து இதன் பெயர்கள் வேறுபடும். அதில் வாட்டர் பைப், ஷிஷா, நர்கீலா, அர்கீலா போன்றவை.
குறிப்பாக இவற்றிற்கு மாணவர்கள் தான் அதிகம் அடிமையாகின்றனர். இங்கு அந்த ஹூக்காவைப் பற்றிய சில சுவாரஸ்யமான சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

புற்றுநோய் பொருட்கள்
ஹூக்கா பற்றிய சுவாரஸ்ய தகவல்களில் ஒன்று தான், ஹூக்காவில் 70 சதவீதம் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்கள் அல்லது கார்சினோஜென்கள் உள்ளன.

ஒப்பிடுகையில்..
சிகரெட்டுடன் இதனை ஒப்பிடுகையில், ஹூக்காவை ஒருவர் உள்ளிழுக்கும் போது, அதன் வழியே அதிகப்படியான நிக்கோட்டினை சுவாசிக்க நேரிடுகிறது. இதனால் நுரையீரல் விரைவில் அழுக ஆரம்பிக்கிறது.

எதிர்காலத்தை பாதிக்கும்
ஒருவர் ஹூக்காவை விளையாட்டாக ஒருமுறை பிடிக்க ஆரம்பித்துவிட்டால், அது எதிர்காலத்தை பாதித்துவிடும். ஏனெனில் இதனை உள்ளிழுக்கும் போது ஒருவித சுகத்தை அனுபவிப்பதால், அந்த சுகத்தைப் பெற அன்றாடம் பிடிக்க வேண்டுமென்று தோன்றிவிடுவதுடன், நாளடைவில் சுவாசக் கோளாறு, மலட்டுத்தன்மை போன்றவற்றிற்கு உள்ளாகக்கூடும்.

புகைக்கும் நேரம்
ஹூக்காவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில் ஒன்று தான், 45 நிமிடம் ஹூக்காவை பிடிப்பது என்பது 50 சிகரெட்டை பிடிப்பதற்கு சமம்.

அடிமையாகிவிட்டால்...
ஹூக்காவிற்கு ஒருமுறை அடிமையாகிவிட்டால், அதிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினம். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

நோய்கள் பரவும்
ஹூக்காவானது ஒரு வாட்டர் பைப் மூலம் அனைவராலும் அடிக்கப்படுவதால், எளிதில் நோய்களானது பரவும். குறிப்பாக ஹூக்காவால் வாய் ஹெர்பெஸ் பரவக்கூடும்.

பலவகையான ஹூக்கா
உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஹூக்காவில் 250-திற்கும் மேற்பட்ட ப்ளேவர்கள் உள்ளன. இதன் காரணமாகவே பலர் இந்த ஹூக்காவிற்கு அதிகம் அடிமையாகின்றனர்.

வாய் புற்றுநோய்
சிகரெட் பிடிக்காதவர்களாக இருந்தாலும், ஹூக்காவை 7 முறைக்கு மேல் பிடித்தால், ஈறுகளில் நோய் வருவதுடன், வாய் புற்றுநோயும் வந்துவிடும்.

அப்படி என்ன உள்ளது?
அனைவரும் ஹூக்கா ஒன்றும் இல்லை என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு சிகரெட்டில் இருக்கும் ஆர்செனிக் லெட்டை விட மிகவும் அதிகமாக ஹூக்காவில் ஆர்செனிக் லெட்டானது உள்ளது.



Click it and Unblock the Notifications