Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
அனைவரும் நிச்சயம் சமைத்து சுவைத்து பார்க்க வேண்டிய தோசைகள்!!!
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு தான் தோசை. தற்போது இந்த தோசையானது தென்னிந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் உள்ளது. மேலும் இது ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றும் கூட.
இத்தகைய தோசையில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. நீங்கள் தோசை பிரியர்களாக இருந்தால், அதன் வெரைட்டிகளை நிச்சயம் சுவைத்து பார்க்க வேண்டும். மேலும் வெரைட்டிகள் என்பது அதில் நாம் சேர்க்கும் பொருட்களை பொறுத்தது தான்.
இங்கு மிகவும் பிரபலமான மற்றும் அனைவரும் நிச்சயம் சுவைத்து பார்க்க வேண்டிய சில வெரைட்டியான தோசைகளைப் பட்டியலிட்டுள்ளோம். உங்களுக்கு அதில் எந்த தோசை பிடிக்கும் என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

ப்ளைன் தோசை
இது பொதுவாக அனைவரது வீட்டிலும் செய்யக்கூடிய தோசை. இந்த தோசைக்கு பல்வேறு வகையான சட்னிகளை தொட்டு சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

மசாலா தோசை
இந்த தோசை நிறைய பேருக்கு மிகவும் விருப்பமான தோசையாக இருக்கும். இந்த தோசையானது உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து செய்யக்கூடியது. இந்த தோசையை சாம்பார் மற்றும் சட்னியுடன் சாப்பிட்டால்,சூப்பராக இருக்கும்.

வெண்ணெய் தோசை
இந்த தோசையில் எண்ணெய்க்கு பதிலாக, வெண்ணெய் ஊற்றி சுடப்படும். இந்த தோசையை எவ்வளவு ஊற்றிக் கொடுத்தாலும், சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.

ரவை தோசை
இந்த தோசையானது ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து செய்யக்கூடியது. இந்த தோசை மற்ற தோசைகளை விட வித்தியாசமாக இருக்கும்.

பேப்பர் தோசை
பேப்பர் தோசை என்பது தட்டை விட மிகவும் பெரியதாக பேப்பர் போன்று மொறுமொறுவென்று இருக்கும். இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

நீர் தோசை
நீர் தோசை கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. இது மிகவும் மெல்லியதாக இருக்கும்.

கோதுமை தோசை
அரிசி மாவிற்கு பதிலாக கோதுமை மாவைக் கொண்டு செய்யப்படுவது தான் இந்த தோசை. இந்த தோசையும் நன்றாக இருக்கும்.

வெங்காய தோசை
இந்த தோசை செய்வது மிகவும் ஈஸி. இந்த தோசையானது சாதாரணமாக ஊற்றுவது போல் ஊற்றி, அதன் மேல் வெங்காயத்தை தூவி செய்ய வேண்டும். இதனால் தோசையானது வித்தியாசமான சுவையுடன் இருக்கும். மேலும் இது பெரும்பாலானோருக்கு விருப்பமான தோசை என்றும் சொல்லலாம்.

முட்டை தோசை
தோசை சுடும் போது, அதன் மீது முட்டையை ஊற்றினால் முட்டை தோசை ரெடி. இதனை பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பாசிப்பயறு தோசை
பருப்புக்களில் ஒன்றான பாசிப்பயறு கொண்டு செய்யப்படுவது தான் பாசிப்பயறு தோசை. இந்த தோசை மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், சுவையானதும் கூட.



Click it and Unblock the Notifications
