வெளிநாடுகளில் கிடைக்காத 15 அருமையான நம்மூர் சங்கதிகள்!!

By Karthikeyan Manickam

சாதாரண கூலித் தொழிலாளர்கள் முதல் டாக்டர்கள், சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் வரை நாள்தோறும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் வேறு மொழி, வேறு கலாச்சாரம், வேறு பழக்கவழக்கங்கள் காரணமாக சிலர் முடிந்த அளவுக்குச் சம்பாதித்து விட்டு, தங்கள் சொந்த ஊருக்கே திரும்பி விடுகின்றனர்.

இங்குள்ள சொந்த பந்தங்கள், நண்பர்கள், இங்கு இருக்கும் கசகச கடைத் தெருக்கள், சந்து சந்தாக வீதிகள், அவற்றில் தீப்பெட்டிக் கட்டுகளைப் போல் வீடுகள், கோவில் திருவிழாக்கள், பொங்கல்-தீபாவளிப் பண்டிகைகள், குத்துப் பாட்டுக்கள், நம்மூர் பஸ்-ரயில்-ஆட்டோ பயணங்கள்... இப்படி நீளும் எல்லாவற்றையும் மறக்க எப்படித் தான் மனசு வரும்?!?!

இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளச் செய்யும் 10 முதன்மையான விஷயங்கள்!!!

"சொர்க்கமே என்றாலும்ம்ம்... அது நம்மூரப் போல வருமா?" என்ற பாடலில் வரும் வரிகள், வெளிநாடுகளில் எவ்வளவு தான் வசதிகள் கொட்டிக் கிடந்தாலும், அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு நம் சொந்த ஊரில் வந்து ரிலாக்ஸ் செய்வதன் அருமையைத் தான் விளக்குகின்றன.

சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளில் முகாமிட்டிருக்கும் நம் நாட்டு மக்கள் அப்படி இழந்து கொண்டிருக்கும் 15 சங்கதிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் பெண்களின் சில வித்தியாசமான குணங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நம்மூர் மக்கள்

நம்மூர் மக்கள்

உலகிலேயே இரண்டாவது மிகப் பெரும் மக்கள் தொகை உள்ள நம் இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் இருப்பது தெரிந்தது தான். இவ்வளவு மக்கள் கூட்டத்திற்குள் இருக்கும் நாம், வெளிநாடுகளுக்குச் சென்றால் தனிக் கட்டைகள் தான். பிரைவஸி என்ற பெயரில் வீடுகளும், அறைகளும் தனித்தனியாகத் தான் அங்கு இருக்கும். மேலும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் புன்னகைப்பது கூட அங்கு அரிதாகவே இருக்கும். வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் நம் நாட்டு மக்களின் முகத்தில் நம்மூர் மக்களைப் பார்த்ததும் தோன்றும் பிரகாசம் இதற்கெல்லாம் பதில் சொல்லும்.

நம்மூர் சத்தங்கள்

நம்மூர் சத்தங்கள்

அதிகாலையில் நம்மூர் தெருக்களில் பெண்கள் தங்கள் வீடுகளில் வாசல் தெளிக்கும் சத்தம், கோவில்களிலிருந்து வரும் பூஜை மற்றும் மணிச் சத்தம், டீக்கடைகளில் சினிமா பாடல்கள் சத்தம், தள்ளு வண்டிகளில் காய்கறி விற்பவர்கள் கூவி விற்கும் சத்தம், ஆட்களே இல்லாத தெருக்களில் கூட பைக்குகளில் இளைஞர்கள் எழுப்பும் சத்தம், திருவிழாக் காலங்களில் காதைக் கிழிக்கும் மைக்செட் சத்தம்... இவற்றில் எதை நாம் வெளிநாடுகளில் கேட்க முடியும்?

நம்மூர் நட்புக்கள்

நம்மூர் நட்புக்கள்

"முஸ்தஃபா முஸ்தஃபா, டோண்ட் வொர்ரி முஸ்தஃபா..." என்று இந்தியாவில் எளிதில் நட்புக்களை சம்பாதித்து விட முடியும். முன்ன பின்ன பார்க்காத மனிதர்களிடம் கூட நட்பு கொண்டாடுவது நம் நாட்டில் மட்டும் தான் நடக்கும். மச்சான், மச்சி, மாப்ளே, பாஸ், குரு, ஃபிரண்ட் என்று எப்படிக் கூப்பிட்டாலும் அதில் நம் மக்களின் நட்பு தான் மேலோங்கி நிற்கும். வேறெந்த நாட்டில் இதையெல்லாம் பார்க்க முடியும்?

நம்மூர் திருவிழாக்கள்

நம்மூர் திருவிழாக்கள்

நம் கிராமங்களில் நடக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவாக இருந்தாலும் சரி, வட நாடுகளில் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையாக இருந்தாலும் சரி... இதுபோன்ற விழாக்கள் வந்து விட்டால் ஊரே களை கட்டும். கூட்டம் கூட்டமாகக் கூடி நாம் பண்டிகைகளைக் கொண்டாடுவதை விட எந்த வெளிநாட்டினர் கொண்டாடுகிறார்கள்?

நம்மூர் தவறுகள்

நம்மூர் தவறுகள்

நம்மூரில் மிகவும் சாதாரணமாகவே தவறுகளை செய்து விடுவோம். அதை யாரும் தட்டிக் கேட்டால் கூட, "இவ்வளவு தான சார், இதெல்லாம் பெரிய விஷயமா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்களேன்" என்று கூலாக சொல்லும் சுதந்திரம் நம் நாட்டை விட வேறு எங்கு கிடைக்கும்?

நம்மூர் வீட்டு வேலைக்காரர்கள்

நம்மூர் வீட்டு வேலைக்காரர்கள்

நம் அம்மா அப்பாவுக்கு அடுத்தபடியாக நம் வீட்டில் வேலை செய்பவர்களைத் தான் நமக்குப் பெரும்பாலும் பிடித்திருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் சரி, நீங்கள் எவ்வளவு தான் கேட்டுக் கொண்டாலும் சரி... கசங்கிய அழுக்கு உடைகளும், கலைந்த தலைமுடிகளுமாகத் தான் நம்மூர் வேலைக்காரர்கள் வலம் வருவார்கள். வெளிநாட்டில் எல்லாம் இது போன்றவர்கள் டிப்டாப்பாகத் தான் இருப்பார்கள்.

நம்மூர் ஆட்டோக்கள்

நம்மூர் ஆட்டோக்கள்

எத்தனை டவுண் பஸ்கள் ஓடினாலும், நம் நாட்டில் ஆட்டோக்களுக்கு எப்போதுமே நல்ல மவுசுதான்! வெளிநாடுகளில் நீங்கள் எவ்வளவு டாக்ஸிகளைப் பார்த்திருந்தாலும், அவையெல்லாம் நம்மூர் ஆட்டோக்களுக்கும், ஷேர் ஆட்டோக்களுக்கும் ஈடாகுமா? "மீட்டருக்கு மேல் பார்த்துக் கொடுங்க சார்" என்று நம் ஆட்டோ டிரைவர் கேட்பது போல் வேறெங்காவது கேட்பாருண்டா?

நம்மூர் ஓசிகள்

நம்மூர் ஓசிகள்

பக்கத்து வீடுகளில் ஓசி கேட்கும் நம்ம ஊர் தாய்மார்களின் பழக்கத்தை எந்த நாட்டில் உள்ளவர்களும் மிஞ்ச முடியாது. ஓசி சர்க்கரை, ஓசி காபி பொடி, ஓசி உரைமோர், ஓசி பேப்பர் என்று ஆரம்பித்து, ஓசி போன் கால்கள், ஓசி சிலிண்டர் வரை இந்தப் பழக்கம் நீஈஈஈஈஈண்டு இருப்பதை மறுக்க முடியுமா?

நம்மூர் வீட்டு சமையல்

நம்மூர் வீட்டு சமையல்

எவ்வளவு ஆயிரம் கொட்டி ஓட்டல்களில் சாப்பிட்டாலும், நம் வீட்டுத் தாய்மார்களின் கைவண்ணத்தில் மணக்கும் சமையலுக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவுமே, எங்குமே கிடையாது. பள்ளியில் மற்றும் வேலையில் இருந்து வயிறு காய்ந்துபோய் திரும்பும் தந்தைகளிடமும், மகன்களிடமும், மகள்களிடமும் கேட்டுப் பாருங்கள், வீட்டுச் சமையலின் ருசியை!

நம்மூர் வீட்டுத் தவிப்பு

நம்மூர் வீட்டுத் தவிப்பு

படிப்பிற்காக ஹாஸ்டல்களிலும், வேலைக்காக வெளியூர்களிலும் தங்கியிருக்கும் ஆணோ, பெண்ணோ... வீட்டையும் அம்மாவையும் பிரிந்து ஹோம் சிக்கில் தவிப்பது நம்மூர்களை விட வேறு எந்த வெளிநாட்டிலும் அவ்வளவாகக் காண முடியாது. நீண்ட பிரிவிற்குப் பின் தாயின் மடியில் தலை சாய்ந்து கொள்ளத் துடிக்கும் நம்மூர் மக்களைக் கணக்கில் எண்ணி விட முடியாது.

நம்மூர் 'திட்டம்'

நம்மூர் 'திட்டம்'

வெளிநாடுகளில் பெரும்பாலும் எல்லாவற்றையும் எந்திரத்தனமாக திட்டம் போட்டுத் தான் செய்வார்கள். ஆனால் நாமெல்லாம் அப்படியா? திடீரென்று நினைப்போம், அப்படியே கிளம்பிப் போய் ஷாப்பிங் பண்ணிவிட்டு வருவோம். எவ்வளவு பெரிய தலைப்போகிற வேலையாக இருந்தாலும், அதைத் தூக்கிப் போட்டு விட்டு, ஜாலியாக ஊர் சுற்றக் கிளம்பி விடுவோம்.

நம்மூர் பேரம்

நம்மூர் பேரம்

ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்ன்னு வியாபாரி சொன்னால் அதை வெறும் 5 ரூபாய்க்குக் கேட்கும் தைரியமும், ஒரு சேலை 1,000 ரூபாய்ன்னு விற்கிறவர் சொன்னாலும், அதை 300 ரூபாய்க்குக் கேட்கும் துணிச்சலும் எந்த வெளிநாட்டுப் பெண்களிடமாவது இருக்குமா? இந்த அளவுக்குப் பேரம் பேச நம்மூர் அம்மணிகளை அடிச்சுக்கவே முடியாது.

நம்மூர் சாகசங்கள்

நம்மூர் சாகசங்கள்

நம்ம ஊர் பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் இருக்கும் தில் வேறு எந்த வெளிநாட்டுக் காரர்களுக்கும் அவ்வளவு எளிதில் வராது. ஒற்றைச் சக்கரத்தில் பைக் ஓட்டுவது, நடு ரோட்டில் கில்லி & பம்பரம் ஆடுவது, ஃபிகருங்களை அசத்த இரு கைகளையும் விட்டுட்டு சைக்கிள் ஓட்டுவது, பஸ்களில் ஃபுட்போர்டு அடிப்பது என்று நம்மவர்களின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

நம்மூர் கிரிக்கெட் மோகம்

நம்மூர் கிரிக்கெட் மோகம்

பல வெளிநாடுகளில் கால்பந்துப் போட்டிகளுக்குத் தான் மவுசு இருக்கும். ஆனால், நம்ம ஊரிலோ ஆண்டு முழுவதும் கிரிக்கெட் ஃபீவர் சூழ்ந்திருக்கும். கிராமத்தில் ஒரு சின்ன ஒத்தையடிப் பாதையைக் கூட நம்மூர் 'சச்சின்'கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்கள். சனி-ஞாயிறு விடுமுறைகளில் ஊரிலுள்ள ஒவ்வொரு விளையாட்டு மைதானத்திலும், காலி வீட்டு மனையிலும் குறைந்தது 10 கிரிக்கெட் டீமாவது விளையாண்டு கொண்டிருப்பதை நீங்கள் எந்த வெளிநாட்டில் காண முடியும்?

நம்மூர் கிளினிக்குகள்

நம்மூர் கிளினிக்குகள்

அச்சுன்னு ரெண்டு தும்மல் போட்டாலே நாமெல்லாம் ஆஸ்பத்திரிக்கு ஓடுவது வழக்கம். அதற்கேற்ப நம்மூர்களில் தெருவுக்கு 20 கிளினிக்குகளாவது இருக்கும். அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் டாக்டர்கள் கூட தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கள் கிளினிக்குகளைத் திறந்து வைத்து கல்லா கட்டுவார்கள். இதுப்போன்று வெளிநாடுகளில் எல்லாம் இருக்குமா என்பதைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion