For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகவும் பிரபலமான மேற்கோள்கள்!!!

By Boopathi Lakshmanan
|

அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல்வேறு புனிதமான மேற்கோள்கள் உள்ளன. புனிதமான மேற்கோள்களாக இருப்பதை பொதுவாகவெ சிறிய வாக்கியங்களாக உள்ளன. ஆனால், இந்த சிறிய வாக்கியங்களுக்கு பரந்த அர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதனின் எண்ணம் மற்றும் பார்வையைப் பொறுத்து அந்த மனிதர் மேற்கோளின் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வார்.

மிகவும் பிரபலமான மேற்கோள்கள் நமது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருகின்றன. நம்மை சுற்றியுள்ள உலகத்தை நாம் எந்த கண்ணோட்டத்துடன் காண்கிறோம் என்பதை அந்த மேற்கோள்கள் நிர்ணயிக்கின்றன. இந்த பிரபலமான மேற்கோள்கள் மதங்களைத் தாண்டி மனிதர்களை வழி நடத்துகின்றன. ஆயிரம் அர்த்தங்களை உலகத்திற்கு சொல்லும் இந்த வாக்கியங்கள் பெரிய புத்தகங்களாக இருப்பதில்லை.

The Most Popular Spiritual Quotes

இது போன்ற புனிதமான மேற்கோள்கள் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை கொண்டு வருகின்றன என்று அறிய விரும்பினால், அந்த வாக்கியத்தை உங்கள் பார்வையில் அடிக்கடி படும் இடத்தில் எழுதி வையுங்கள். அதை உங்களுடைய மொபைலின் ஸ்கிரீன் சேவராகவோ அல்லது சுவற்றில் ஒரு ஸ்டிக்கர் கொண்டு ஒட்டியோ தினமும் படிக்கலாம்.

அதிலும் தினமும் விழித்தெழும் போது காணும் வகையில் இந்த மேற்கோள்களை வைத்திருந்தால், அவை உங்கள் வாழ்க்கையில் பெருத்த மாற்றங்களை உறுதியாக கொண்டு வரும். இங்கே அது போல உங்கள் வாழ்வில் மிகச்சிறந்த மாற்றங்களை கொண்டு வரும் சில மேற்கோள்களை கொடுத்துள்ளோம்.

'கோவில்களோ, சிக்கலான தத்துவங்களோ தேவையில்லை. என்னுடைய மூளையும், இதயமும் தான் என்னுடைய கோவில்கள்; அன்பு தான் என்னுடைய தத்துவம்.'

- மிகவும் பிரபலமான முதன்மையான மேற்கோள்களை நீங்கள் தேடும் போது, மேலே படித்த மேற்கோள் கண்டிப்பாக அதில் இடம் பெற்றிருக்கும். இவை 14-வது தலாய் லாமாவின் வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகள் அன்பான காரியங்களை செய்வதற்காக நாம் பயன்படுத்த வேண்டிய உறுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

'அமைதி உள்ளே இருக்கிறது. அதை வெளியில் தேட வேண்டியதில்லை'.

- இது புத்தருடைய மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்றாகும். நம்முடைய அமைதியை நன்மை செய்வதன் மூலமாகவே அடையாளம் காண முடியும் என்று இந்த மேற்கோள் விளக்குகிறது. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் மகிழ்ச்சியைத் தேடுவதை விட, நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொருட்டாக நாம் செயல்பட வேண்டும் என்பதே இதன் சாராம்சமாகும்.

'ஆன்மீகத்தின் உண்மையான நோக்கம் சுய-ஒழுக்கம் தான். நாம் மற்றவர்களை விமர்ச்சிப்பதை விட்டு விட்டு, நம்மை நாமே மதிப்பிடவும், விமர்ச்சிக்கவும் வேண்டும்.'

- இதுவும் 14-வது தலாய் லாமாவின் மிகவும் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்றாகும். சுய-ஒழுகத்தின் முக்கியத்துவத்தை உறுதியாக எடுத்துச் சொல்லும் தன்மை வாய்ந்ததாக இந்த மேற்கோள் உள்ளது. இதுவும் மிகவும் பிரபலமான மேற்கோள்களில் முதன்மையான வரிசையில் இடம் பிடித்திருக்கிறது.

'கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை; என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுளின் பக்கமே இருக்கிறது, கடவுள் எப்பொழுதுமே சரியானவர்.'

- இது ஆபிரகாம் லிங்கன் மனிதனுக்கு அளித்த மிகவும் பிரபலமான மேற்கோள்களில் ஒன்றாகும். எங்கெல்லாம் நன்மை இருக்கிறதோ, அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார் என்பதை இந்த மேற்கோள் உறுதிபடுத்துகிறது. கடவுளை நோக்கிச் செல்வதே சரியானது என்கிறார் இவர்.

'மிகவும் பயனில்லாத நாள் என்பது சிரிக்காமல் செலவிடப்பட்ட நாள் தான்'

- மேலே படித்தது மிகவும் பிரபலமான மேற்கோள்களில் ஒன்றாகும். ஆமெரிக்காவில் மிகவும் பிரபலமான கவிஞர் மற்றும் ஓவியராக இருந்த எட்வர்டு எஸ்டிலின் கம்மிங்ஸ் என்பவரின் படைப்பு தான் இந்த மேற்கோளாகும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்களை உணரச் செய்வது தான் இந்த மேற்கோளின் சிறப்பம்சமாகும்.

'கடவுள், நம்மை படைத்தவர், நம்முடைய மனம் மற்றும் குணங்களில், உறுதி மற்றும் திறன்களை பெருமளவிற்கு சேர்த்து வைத்துள்ளார். புpரார்த்தனைகளின் மூலம் இந்த சக்திகளை நாம் அடையவும் மற்றும் வளர்த்துக் கொள்ளவும் முடியும்.'

- டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் எப்பொழுதும் வார்த்தைகளின் திறன்களை சிறப்பாக பயன்படுத்தி வெற்றிகளை குவிப்பவராவார். அவருடைய மிகவும் பிரபலமான மேற்கோள்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. கடவுள் என்பவர் நமக்குள்ளிருக்கும் சக்தி என்பதையே இந்த மேற்கோள் குறிப்பிடுகிறது.

'கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்.'

- புத்தரால் சொல்லப்பட்ட மிகவும் பிரபலமான மேற்கோள்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மேற்கோளினை உங்கள் வாழ்வில் பின்பற்றினால், வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியும். வாழ்க்கையின் சாராம்சத்தை இந்த தருணத்தில் அனுபவிப்பதற்கு இந்த மேற்கோள் உதவுகிறது.

English summary

The Most Popular Spiritual Quotes

If you want to try how famous spiritual quotes can influence your life, write it down somewhere that you can see it frequently. Here are some of the most popular spiritual quotes that may inspire you.
Desktop Bottom Promotion