Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இந்திய மக்கள் மட்டுமே செய்யக்கூடிய சில முரணான வேலைகள்!!!
இந்தியாவில் மட்டுமே முரணான வேலைகளை காண முடியும். இந்தியாவில் பார்த்தோமானால் தங்கள் வயிற்றை நிரப்புவதற்கு எந்த வேலையை வேண்டுமானாலும் மக்கள் செய்வார்கள். குறிப்பாக ஜாதியில் மிகவும் பின்தங்கியவர்கள் தான் மிகவும் முரணான வேலையை செய்வார்கள். அதிலும் ஒருசில வேலைகளை ஜாதியில் பின்தங்கியவர்கள் தான் செய்ய வேண்டும் என்பது போல் நினைப்பார்கள் மற்றும் அப்படியே நடத்துவார்கள்.
உலகத்தின் கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!
அதில் ஒன்று தான் காணும் ஒரு முரணான வேலை - பாதாள சாக்கடையில் இறங்கி கையிலேயே செய்யும் துப்புரவுப்பணி. இது இந்தியாவில் சட்டத்திற்கு விரோதமானது என்றாலும் கூட, பல பேர்கள், முக்கியமாக கிராம பகுதியை சேர்ந்தவர்கள், இன்னமும் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைகளுக்கு மிக குறைவான ஊதியமே அளிக்கப்படும். இருந்தாலும் கூட பலர் இந்த வேலையை விரும்பி ஏற்றுக் கொள்வதுண்டு.
இந்தியாவில் உள்ள மூலை முடுக்குகளில், தங்கள் கனவுகளை பின்பற்றக்கூடிய பலரை நாம் சந்திக்கக்கூடும். ஆனால் அவர்கள் பார்க்கும் வேலையோ விந்தையாக இருக்கும். உதாரணத்திற்கு பாம்பாட்டிகள் மற்றும் கை ரேகை ஜோசியம் ஆகிய இரண்டுமே இந்தியாவில் பொதுவாக காணப்படும் தொழிலாகும்.
அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
இந்தியாவில் அப்படி உள்ள பல முரணான வேலைகளை தான் இப்போது பார்க்கப் போகிறோம். முழுதாக படித்தால் கண்டிப்பாக உங்களுக்கு புல்லரிக்கும். ஏனெனில் அந்த வேலைகள் அனைத்தும் அனைவராலும் செய்ய முடியாது. இருப்பினும் இக்காலத்தில் வேலை அவ்வளவு சுலபமாக கிடைக்காததால், பலர் கிடைக்கும் வேலையை சிறந்ததாக எண்ணி செய்து வருகின்றனர். எனவே அப்படி முரணான வேலைகளை செய்யும் நபர்களிடம் நட்புறவு கொள்ளாவிட்டாலும் சரி, அவர்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை கொடுங்கள். சரி, இப்போது அந்த முரணான வேலைகள் என்னவென்று பார்ப்போமா!

கைமுறை துப்பரவு பணி
இந்தியாவில் இது சட்டத்திற்கு விரோதமான இயல்பற்ற வேலை என்றாலும் கூட, இந்த வேலைகளை இன்னமும் பலர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள், உலகத்தில் உள்ள மோசமான வேலைகளில் முதலிடம் இதனை தான் சேரும்.

வெட்டியான்
பிணங்களின் எலும்புகளை எடுத்துப் போட்டு, புதிய பிணங்களை புதைக்க 6 அடிக்கு குழி தோண்டுவது ஒன்றும் குதூகலத்தை ஏற்படுத்துவது அல்ல. இந்த இயல்பற்ற வேலை இந்தியாவிலேயே உள்ளது; அதுவும் குறிப்பாக கிறிஸ்துவ கல்லறைகளில்.

தலித் சுத்தப்படுத்துதல்
மற்றொரு முரணான வேலை - பெரும்பாலும் தலித்களால் செய்யப்படுகிறது. அவர்களின் வேலை இதுவே - இந்தியாவை சேர்ந்த மேற்தட்டு குடும்பங்களில் உள்ள கழிவறையில் மனித மலத்தை வெறும் கைகளால் சுத்தம் செய்தல்.

ஒப்பாரி பாடுதல்
ஒரு குடும்பத்தில் இழவு விழுந்தால், ஒப்பாரி பாடி சூழ்நிலையை சோகமயமாக்க ஒப்பாரி பாடுபவர்களை சிலர் வாடகைக்கு அமர்த்துவார்கள். இப்படி அவர்களை கூட்டி வர, அவர்களுக்கு பெரிய தொகை கூலியாக கொடுக்கப்படும்.

பாம்பாட்டிகள்
இந்தியாவில் உள்ள மற்றொரு முரணான மற்றும் இயல்பற்ற வேலை தான் பாம்பாட்டிகளின் வேலை. வட இந்தியாவின் ஒவ்வொரு தெருக்களிலும் அவர்களை காணலாம்.

எலக்ட்ரிஷியன்
இந்தியாவில் இந்த தொழிலை செய்யும் லட்சக்கணக்கான மக்கள் துரதிஷ்டவசமாக உயிரிழப்பார்கள். இருந்தாலும் கூட இந்த தொழிலை செய்ய பெரிய கூட்டமே காத்திருக்கிறது.

கை ரேகை ஜோசியம்
உங்கள் எதிர்காலமே ஒரு கிளியில் தான் உள்ளது. விந்தையாக இருந்தாலும் அது உண்மையே. சந்தேகமே இல்லாமல் இந்தியாவில் உள்ள முரணான வேலைகளில் இதுவும் ஒன்று.

வாசல் காவலாளி
அடிமைகளை போல் நடத்தப்படும் வாசல் காவலாளிகள், நாள் முழுவதும் வாசலில் கால் கடுக்க நிற்க வேண்டும். மேலும் அவர்களின் வேலையை உயர்வாக எண்ணாதவர்களுக்கு கூட பணிவிடை செய்ய வேண்டும்.

பறவைகளை தடுத்தல்
ஜெய்பூரில் உள்ள சில விடுதிகளில், அங்கே காணப்படும் நீரூற்றில் இருந்து புறாக்களை விரட்ட ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். பறவைகளை விரட்ட அவர்கள் சிகப்பு நிற கொடியை பயன்படுத்துவார்கள்.

சிரிப்பு சிகிச்சை
மன அழுத்தம் இல்லாமல் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்திட, சிரிப்பே சிறந்த மருந்தாகும். ஆனால் சிலருக்கோ அவ்வளவு சுலபத்தில் சிரிப்பு வருவதில்லை. அதனால் சிரிப்பு வரவழைக்க தெரப்பிஸ்ட் வரவழைக்கப்படுவார்கள்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications