Latest Updates
-
Tamil New Year Wishes: தமிழ் புத்தாண்டு நாளில் உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புங்க.. சந்தோஷப்படுவாங்க.. -
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: டெல்லி ஸ்டைல் குக்கர் கேரட் அல்வா ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
அட்சய திருதியை அன்று தங்கம் மட்டுமல்ல இந்த 3 பொருட்களை வாங்கினாலும் அதிர்ஷ்டம்தானாம் தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டின் தென்மேற்கு திசையில் இவற்றை வெக்காதீங்க.. இல்ல கஷ்டம் தான் அதிகரிக்கும்! -
இதயம் ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள் - ஜாக்கிரதையா இருங்க -
தமிழ் புத்தாண்டுக்கு இந்த புதுமையான பாயாசத்தை ட்ரை பண்ணுங்க, டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்! -
கொளுத்தும் கோடை வெயிலால் சருமம் சேதமடையக்கூடாதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
வாஸ்து படி உங்க வீட்டில் இந்த அறிகுறி இருந்தால் ஆபத்தான வாஸ்து தோஷம் இருக்குனு அர்த்தமாம் - ஜாக்கிரதை -
Tamil New Year 2026 Chithirai Kani: சித்திரை கனி காணுதல் என்றால் என்ன? தட்டில் என்னென்ன பொருட்களை வைக்கணும்? -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி கார குழம்பு செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
பால்வெளி அண்டத்தைப் பற்றிய நம்பமுடியாத சில மர்மங்கள்!
நம் உலகம் பால்வெளி என்ற விண்மீன் மண்டலத்தில் உள்ளதென்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த பால்வெளி அண்டமானது அபார 10 நட்சத்திரங்களை கொண்டுள்ளது. வான்வெளியின் மர்மங்கள் என்பது நழுவி தப்பித்து கொள்கிற ரகசியங்களில் மிகவும் முக்கியமானதாகும். மிகவும் ஆழமாக புதைந்திருக்கும் இந்த மர்மங்களின் முடிச்சை அவிழ்க்கும் திறன் மனிதனிடம் இல்லை என்பதை அவன் புரிந்து வைத்திருக்கிறான்.
உலகின் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்....
பல விண்வெளி பொருட்களை பின்பற்றவும், ஆராயவும் தொலை நோக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் இருந்தாலும் கூட, மிக மிக தொலைவில் இருக்கக்கூடிய நூறு கோடி பொருட்களை படிவமாக்க முடியவில்லை. பால்வெளியை பற்றிய மர்மங்களை இப்போது பார்க்கலமா? பால்வெளியின் தீர்வு காணமுடியாத மர்மங்கள் ஒட்டு மொத்த பிரபஞ்சத்திற்கும் பொருந்தும். ஆம், பால்வெளி என்பது ராட்சச பிரபஞ்சத்தின் ஒரு அங்கம் தானே!
பால்வெளியை பற்றிய 8 மர்மங்களைப் பற்றி பார்க்கலாமா? இந்த மர்மங்களை பிரபஞ்சத்தின் மர்மங்களாகவும் கூட பார்க்கலாம்.
உலகத்தில் உள்ள மிகப்பெரிய 8 இரகசியங்கள்!!!

அமைமுறை
நம்பத்தகுந்த கணிப்பு மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பால்வெளியின் அமைமுறையை விஞ்ஞானிகள் படிவமாக்கியுள்ளனர். அதன் படி, ஒலி அலையை ஒத்திருக்கும் கிட்டத்தட்ட 300 ஆயிரம் நட்சத்திரங்களின் அமைமுறைஃயை கணித்திருக்கின்றனர். சரி இது ஏன் உறுதியாக தெரியவில்லை. நம் பிரபஞ்சத்திலும் விண்மீன் மண்டலத்திலும் ஏற்படக்கூடிய தற்போதைய மாற்றங்களின் அடிப்படையில் தான் இந்த அலை அல்லது அமைமுறை உருவாகிறது என விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர். இன்னொரு நம்பிக்கையும் கூட உள்ளது - அதாவது 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கருமையான பொருள் ஒன்று பால்வெளியை கடந்துள்ளது. இதனால் நட்சத்திரங்கள் குறிப்பிட்ட அமைமுறையை பெற்றுள்ளது.

அதீத வேகம் கொண்ட நட்சத்திரங்கள்
பால்வெளியில் பல நட்சத்திரங்களும் தோராயமாக ஒரு நொடிக்கு 145 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இருப்பினும் அதீத வேகம் கொண்ட சில நட்சத்திரங்கள் நொடிக்கு 400 மைல் வேகத்தில் பயணிக்கிறது. வியப்பாக உள்ளதல்லவா? இந்த நட்சத்திரங்களின் பற்றிய உண்மை என்னவென்றால், அவைகளின் அதீத வேகத்தினால் அவைகள் பிரபஞ்சத்தை விட்டே போகக்கூடும். மிகப்பெரிய கருங்குழியின் தாக்கத்தால் தான் இவ்வகையான நட்சத்திரங்கள் அதீத வேகத்தில் பயணிக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

அதீத வேகம் கொண்ட மேகங்கள்
விண்மீன் வாயுவால் உருவான இந்த மேகங்கள், பால்வெளியை அதீத வேகத்தில் கடக்கும். பெரும்பாலும் ஹைட்ரஜனால் உருவான இந்த அடர்த்தியான மேகங்கள் நொடிக்கு 50 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். ஆனால் இந்த மேகங்கள் எங்கிருந்து வருகிறது? வெண்ணுடுக்களின் இடைவெளியில் இருந்து உருவானவை இவைகள் என சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அப்படியே இருந்தாலும் கூட அதனை சுற்றியுள்ள மர்மம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. இது பிரபஞ்சத்தின் உன்னதமான மர்மம் தானே?

வெண்ணுடு பாவு
வெண்ணுடு பாவு என்பது விந்தையான அமைமுறையை கொண்ட மேகங்களாகும். இந்த வெண்ணுடு மேகங்கள் கலந்த அமைமுறைகளை பெற்றிருப்பதே இதனை சுற்றியுள்ள மர்மமாகும். அதற்கான விடையையும் கேள்விக்குறியே. பொதுவாக பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடைப்பட்ட இடங்களில் அடர்த்தியான அடுக்குகளை கொண்ட வாயுவும் புகையும் சூழ்ந்திருக்கும். மெல்லிய இடைவெளியின் நீளம் கூட 240 ஒலி ஆண்டுகள் இருக்கும்.

மகேலேனிக் மேகங்கள்
மகேலேனிக் மேகங்கள் பால்வெளியை சுற்றி வருகிறது என்று தான் சமீப காலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, அவை அப்படி செய்ய வாய்ப்பில்லை என்று ஒரு காரணத்திற்காக கூறப்பட்டுள்ளது - நாம் முதலில் நினைத்ததை விட அவைகள் இரண்டு மடங்கு வேகமாக நகர்கிறது. பால்வெளியை கடந்து பரந்து கிடக்கும் வாயுக்கள் நிறைந்த பெரிய மேகங்களான, மகேலேனிக் ஓடையை பற்றிய மர்மங்களுக்கான விடையை இன்றளவும் கூட விஞ்ஞானிகளால் கூற முடியவில்லை. நகர்ந்து கொண்டிருக்கும் மேகத்தின் வழியாக கிடைத்த ரேடியோ சிக்னலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொலை நோக்கி பதிந்துள்ளது. நியூட்ரான் நட்சத்திரங்கள் அல்லது கருங்குழியின் முனையில் ஏற்பட்டுள்ள வெடித்தல் போன்ற காரணத்தினால் இந்த அலை உருவாகியிருக்கலாம் என கண்டறியப்பட்டது. மற்றொன்று, 1,60,000 ஒளி வருடங்கள் தொலைவில் அமைந்துள்ளது பால்வெளி. மகேலேனிக் மேகங்கள் புதிதாக கண்டறியப்பட்ட வேகத்தில் பால்வெளியை சுற்றி வருவதாக இருந்தால், நாம் நினைத்ததை விட பால்வெளி இரண்டு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும்.

புதிய கோள்
பால்வெளி அண்டத்தில் உள்ள மற்றொரு புதிரான மர்மம் தான் இது. இந்த புதிய கோளானது பால்வெளி அண்டத்தில் மிகவும் பெரிய கோளான ஜூபிடரை விட பெரியது மட்டுமின்றி, இரகசியமாக சூரியனை சுற்றி வருகிறது. மேலும் இந்த கோளானது பால்வெளி அண்டத்திற்கு அருகில் தான் உள்ளது. இருப்பினும் இதனை பார்க்க முடியாது. ஏனெனில் இதனைச் சுற்றி சிறு நட்சத்திரங்கள் சூழ்ந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, மற்றொரு காரணம் இது 85 சதவீதம் அறியப்படாத பருப்பொருள் கருமையான பொருளால் ஆனது.



Click it and Unblock the Notifications











