Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கோடைக்காலத்தின் ஸ்பெஷல் அம்சங்கள்!!!
கோடைக்காலம் வந்தாலே பலர் அழ ஆரம்பிப்பார்கள். இருந்தாலும், இக்காலத்தில் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியவாறான பலவற்றை நாம் அனுபவிக்கிறோம். எவ்வளவு தான் வெயில் கொளுத்தினாலும், வியர்த்தாலும், கோடையில் கிடைக்கும் சுவையான மாம்பழங்களை நினைக்கும் போது அவை அனைத்தையும் மறந்துவிடலாம். இப்படி மாம்பழம் மட்டுமின்றி, இன்னும் பல நல்ல விஷயங்களை கோடைக்காலத்தில் நன்கு அனுபவிக்கலாம்.
அதிலும் மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் தான் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்லலாம். குறிப்பாக கோடைக்காலத்தில் கொளுத்தும் வெயிலில் பீச் சென்றால், அப்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
இதுப்போன்று நிறைய உள்ளன. சரி, இப்போது கோடைக்காலத்தில் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சுத்தமான சாலை
மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் சாலைகள் நன்கு சுத்தமாக சேறு இல்லாமல், தண்ணீர் தேங்காமல் இருக்கும். இதனால் சாலையில் நிம்மதியாக நடக்கலாம்.

மாம்பழங்கள்
கோடைக்காலத்தில் பழங்களின் ராஜாவான மாம்பழத்தின் சீசன் என்பதால், மாம்பழங்கள் மிகவும் விலை மலிவில் கிடைக்கும்.

ஆடைகள் சீக்கிரம் காய்ந்துவிடும்
குளிர் மற்றும் மழைக்காலத்தில் துணிகளை துவைத்தால், அதனை நன்கு உலர வைக்க 2 நாட்களாவது வேண்டும். ஆனால் கோடையில் துணிகளை உலர வைக்க 2 மணிநேரம் போதும்.

அதிகளவு தண்ணீர்
மற்ற காலங்களை விட, கோடையில் நம்மை அறியாமலேயே தண்ணீரை அதிக அளவில் குடிப்போம். இப்படி தண்ணீரை அதிகம் குடிப்பதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சுத்தமான குளியலறை
பலருக்கு குளியலறை ஈரமாக இருந்தாலே, அதனுள் செல்ல அருவெறுப்பாக இருக்கும். ஆனால் கோடையில் குளியலறையானது விரைவில் உலர்ந்துவிடும்.

உடல் எடை குறையும்
கோடையின் சிறப்பம்சங்களில் ஒன்று தான் இயற்கையாகவே உடல் எடை குறையும். எப்படியெனில் மற்ற காலங்களை விட கோடையில் சற்று அதிகம் சுறுசுறுப்புடன் செயல்பட்டால், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நச்சுக்களானது வியர்வையின் மூலம் வெளியேறிவிடும்.

நுங்கு
கோடையில் மாம்பழம் மட்டுமின்றி, மிகவும் சுவையான நுங்கும் கிடைக்கும்.

சுற்றுலா
குளிர் மற்றம் மழைக்காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது. ஆனால் கோடையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், நிம்மதியாக குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்.

வைட்டமின் டி
நிறைய மக்களள் வைட்டமின் டி குறைபாட்டினால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஆனால் கோடையில் வெயிலில் இருந்து வைட்டமின் டி ஆனது அளவுக்கு அதிகமாக கிடைக்கும்.

சூப்பரான குளியல்
சுடுநீர் குளியல் உடலை இதமாகவும், குளிர்ந்த நீர் குளியல் உடலை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும். ஆனால் குளிர்ந்த நீர் குளியலை கோடையில் மட்டும் தான் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications