உலகத்தில் உள்ள மிகவும் மோசமான மற்றும் கொடூரமான 10 சர்வாதிகாரிகள்!!!

By Ashok CR

சர்வாதிகாரி என்ற வார்த்தை பல பெயரடையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. சர்வாதிகாரம் என்பதை மிகவும் ஆபத்தான ஒன்றாக வரலாறு சித்தரித்துள்ளது. இந்த உலகத்தில் பல சர்வாதிகாரிகள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அஞ்சாமை, பொருத்தமற்ற தன்மை, வெறுப்புணர்வு ஆகிவற்றை பல அளவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

சில சர்வாதிகாரிகளிடம் கணிசமான அளவில் கருணையும், பச்சாத்தாபமும் இருந்து வந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. வரலாறு மூலமாக நாம் பார்க்கும் ஒவ்வொரு சர்வாதிகாரமும், கற்பனை செய்ய முடியாத அளவிலான அநீதிகளையும், கொடுமைகளையும் இழைத்துள்ளது. இப்போது நாம் உலகத்தில் வாழ்ந்த கொடூரமான சர்வாதிகாரிகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ள சக்தி வாய்ந்த 6 நில நடுக்கங்கள்!

இவர்களை உலகத்தின் மோசமான சர்வாதிகாரிகள் என்று கூட அழைக்கலாம். இவர்கள் செய்ததெல்லாம் ஒன்றுமில்லை; மாறாக மனித இனத்திற்கு கணக்கிட முடியாத அளவிலான பாதிப்பையும், அழிவையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உலகத்தில் வாழ்ந்த சக்தி வாய்ந்த சர்வாதிகாரிகள் மத்தியில் இவர்களும் இருந்துள்ளார்கள் என்பதை நினைக்கையில், நீதிக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமையும்.

இரக்கம் இல்லாத இடத்தில் அநீதி தலை தூக்கி நிற்கும். இத்தனை துன்பங்களும் பொறுப்பாகும் வகையில் இந்த சர்வாதிகாரிகளிடம் ஒன்று இல்லையென்றால், அது தான் இரக்கம்.

இந்திய மக்கள் மட்டுமே செய்யக்கூடிய சில முரணான வேலைகள்!!!

உலகத்தில் உள்ள கொடூரமான 10 சர்வாதிகாரிகள், இதோ. (சக்தி மற்றும் செல்வாக்கு அடிப்படையில் ஏறுவரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளது).

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
10. கிம் ஜாங் II

10. கிம் ஜாங் II

இரக்கமற்ற இந்த வட கொரிய சர்வாதிகாரி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு தான் இறந்தார். அவருடைய ஆட்சி காலமான அந்த 7 வருடங்களில், கிட்டத்தட்ட 2,50,000 பேர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். லட்சக்கணக்கான வட கொரிய மக்களின் பஞ்சத்திற்கு இவரே நேரடியாக பொறுப்பாளியாக விளங்கினார்.

9. இடி அமின் டாடா

9. இடி அமின் டாடா

உகாண்டாவை சேர்ந்த இந்த கருணையற்ற சர்வாதிகாரி 1971 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் எண்ணிலடங்கா அரசியல் தாக்குதல்களும், எதிர் தாக்குதல்களும் நடைபெற்றுள்ளது. கூடுதல் நீதிமன்றம் சார்ந்த கொலைகள் மூலமாக, நம்ப முடியாத அளவாக கிட்டத்தட்ட 5,00,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்ப்பாளர்கள் மற்றும் ஏற்காதவர்களை அச்சுறுத்த கற்பழிப்பை ஒரு பொது ஆயுதமாக பயன்படுத்தினர். 8 ஆண்டு காலத்திற்கு அவர் ஆட்சி புரிந்தார்.

8. சதாம் ஹூசைன்

8. சதாம் ஹூசைன்

ஈராக் நாட்டை சேர்ந்த இவரை மிக சுலபமாக உலகத்தில் உள்ள ஒரு மோசமான சர்வாதிகாரியாக சொல்லி விடலாம். இரக்கமற்ற செயல்கள் மற்றும் எண்ணிலடங்கா மோதல்களை தூண்டிவிட்டவர் அவர். கார்ட், அஸிரியன் மற்றும் ஷபாக் ஆகியோர்களை கும்பல் கும்பலாக கொன்று குவித்தார். மற்ற இனத்தினரையும் கூட விட்டு வைக்கவில்லை. அவருடைய ஆட்சி காலத்தில் கொலைகளும், கற்பழிப்புகளும் பரவலாக நடந்தது. குவைத் மற்றும் ஈரானிற்கு எதிராக நடந்த போரில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர்கள் உயிரை இழந்தனர்.

7. ஹிதேகி டோஜோ

7. ஹிதேகி டோஜோ

இரண்டாம் உலக போரின் போது ஜப்பானிய ராணுவத்தின் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் தான் ஹிதேகி டோஜோ. வெறும் ஜெனரலாக மட்டுமே இருப்பதால் ஏற்பட்ட அதிருப்தியில், பிரதம மந்திரி, கல்வி மந்திரி, ராணுவ மந்திரி மற்றும் வர்த்தக மந்திரி போன்ற சில இலாக்காக்களில் தன் மூக்கை நுழைத்தார். அண்டை நாட்டின் மீது இடைவிடாமல் நடத்திய தாக்குதல்களால் கிட்டத்தட்ட 50 லட்சம் மக்கள் இறந்தனர்.

6. மென்கிஸ்டு ஹைலே மரியம்

6. மென்கிஸ்டு ஹைலே மரியம்

மன்னிக்க முடியாத எதியோப்பிய சர்வாதிகாரியான இவர் வாழ்ந்த காலத்தில், மிகவும் பயன்கரமானவராக பார்க்கப்பட்டவர் இவர். தனக்கு எந்த மாதிரியான எதிர்ப்புகள் ஏற்பட்டாலும், உடனே போர் தொடுப்பார். அதிகாரத்திற்கு வந்த அடுத்த நொடியே கிட்டத்தட்ட 15 லட்சம் பேர்களை கொன்று குவித்துள்ளார். இவர் ஆட்சி காலத்தில் கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் பரவலாக நடந்தது. கெபெல் மக்களை நடுத்தெருவில் கொல்ல உத்தரவிட்டார். தங்கள் பிரியமானவர்களின் உடலை பெறும் குடும்பத்தார்களிடம் வரி வசூலித்தார்.

5. ட்ஸர் நிக்கோலாஸ் லின்ட்

5. ட்ஸர் நிக்கோலாஸ் லின்ட்

இரக்கமற்ற இந்த ரஷிய மன்னர் நாயை போலான சாவை சந்தித்தாலும், கிட்டத்தட்ட 30 லட்ச ரஷியர்களை கொன்று குவித்துள்ளார். வரலாற்றில் அவர் அப்போதும் சரி இப்போதும் சரி மிக மோசமான சர்வாதாரியாகவே இருந்துள்ளார். அவரை ப்ளடி நிக்கோலாஸ் என்று தான் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

4. ஜோசப் ஸ்டாலின்

4. ஜோசப் ஸ்டாலின்

புத்திசாலித்தனமான அரசியல் தந்திரசாலியான ஸ்டாலின், ரஷிய சாம்ராஜ்யத்தின் உச்ச தலைவரானார். ராணுவ ஜெனரலாக இருந்த அவர், தன்னுடைய கடும் கோபத்திற்காக அறியப்பட்டவர். கிட்டத்தட்ட 1 கோடி மக்களின் பசி பட்டினிக்கு காரணமாக விளங்கியவர் ஸ்டாலின். கிரேட் பர்ஜ் என்ற இயக்கத்திற்காக அவர் புகழ் பெற்றவர். அதிருப்தியாளர்கள் ஒருவரை கூட இந்த இயக்கம் விட்டு வைக்கவில்லை.

3. பஷர் அல் அசாத்

3. பஷர் அல் அசாத்

சிரியாவின் பரிதாபகரமான மற்றும் போர் குணத்துடன் திகழ்ந்த தலைவரான இவர் 2,00,000 மக்களின் சாவுக்கும், 50,000 பெண்களின் கற்பழிப்புகளுக்கும் பொறுப்பாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 2011-ஆம் ஆண்டு தொடக்கத்தில் எழுந்த எழுச்சியை அடக்க இப்போதும் முற்படுகிறார். உலகத்தில் உள்ள இரக்கமற்ற சர்வாதிகாரிகளில் இவரும் ஒருவர்.

2. அடால்ஃப் ஹிட்லர்

2. அடால்ஃப் ஹிட்லர்

அதிகமாக சொல்ல தேவையில்லை. ஜெர்மன் சர்வாதிகாரியான இவர் 1.2 கோடி மக்களின் சாவுக்கு காரணமாக விளங்கியவர். யூதர்களிடம் அவரின் இரக்கமற்ற அணுகுமுறையால் கிட்டத்தட்ட 60 லட்ச யூதர்கள் கொல்லப்பட்டனர். சொல்லப்போனால் மொத்த உலகத்தையே போரில் ஈடுபட வைத்தவர்.

1. மோ ஜேடோங்

1. மோ ஜேடோங்

மோவின் அதிகார தாகத்திற்கு ஈடு இணையே இல்லை. அதிருப்தியாளர்களை மூச்சு விட கூட அவர் அனுமதிக்கவில்லை. கண்மூடித்தனமாக லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார். பசி பட்டினியால் மட்டும் 10 லட்ச மக்களுக்கு மேலாக உயிரிழந்தனர். உலகத்தில் வாழ்ந்த மிகவும் இரக்கமற்ற சர்வாதிகாரி இவராகத் தான் இருக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion