For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழங்குடியினரின் விநோதமான உணவுகள்!!!

By Boopathi Lakshmanan
|

மாறுபட்ட உணவு வகைகளை சுவைக்க விரும்பும் மனிதர்களின் உணவுப் பழக்கங்கள் விநோதமாயாக இருக்கும். புதிதாக கிடைக்கும் எந்த உணவு வகையாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்று கிளம்பும் மனிதர்களுக்கு வித்தியாசமான, விநோதமான உணவுகள் ஒரு பொருட்டே அல்ல. உணவு கொண்டு நிரப்பி தங்களுடைய வயிற்றுடன் சண்டையிட நினைக்கும் மனிதர்கள் உயிருடன் இருக்கும் பிராணிகளைக் கூட சாப்பிட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் விசித்திரமாக கருதும் உணவுகளை தாங்கள் சாப்பிட ரிஸ்க் எடுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை தான்.

எந்தவொரு பழங்குடியினராக இருந்தாலும் அவர்களுக்கு இயற்கையானதாக மற்றும் சிறப்பானதாக கருதப்படும் உணவு, அவர்களுடைய கலாச்சாரத்தைச் சேராத பிற மனிதர்களுக்கு விசித்திரமானதாக இருக்கும். பெரும்பாலான பழங்குடியினர் தங்களுடைய சிறப்பான உணவு மிகவும் ஆரோக்கியமானது என்று நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் சாப்பிடும் சில உணவுகள், நம்மால் மிகவும் விசித்திரமான உணவுகள் என முத்திரை குத்தப்படுகின்றன. இந்த விசித்திரமான உணவுகள் பழங்குடியினரின் பட்டியலில் நம்ப முடியாத உணவுகளாக அணிவகுத்து நிற்கின்றன.

பழங்குடியினரின் சில விசித்திரமான உணவுகளை சாப்பிட நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், சந்தைகளில் இது போன்ற சில விசித்திரமான உணவுகள் கிடைக்கின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். எதை வேண்டுமானாலும் உணவு என்று கருதுபவர்களுக்கு, இங்கே வரிசையாக தரப்பட்டுள்ள விசித்திரமான உணவுகள் ஆச்சரியத்தை தரப் போவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலூட் (Balut)

பலூட் (Balut)

உரமாக்கப்பட்ட வாத்து அல்லது கோழியின் முட்டையான இந்த உணவு தரையில் சில வாரங்களுக்கு புதைக்கப்பட்டிருக்கும். இது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த உணவாகும். இந்த உணவிற்கான தேவை அதிகரித்துள்ளதால் கையால் செய்வதிலிருந்து மாறி, பல கருவிகளைக் கொண்டு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இப்பொழுது, பிலிப்பைன்ஸின் தெருக்களில் சாதாரணமாக விற்கப்படும் உணவாக இது உள்ளது.

நாய்க்கறி (Dog Meat)

நாய்க்கறி (Dog Meat)

நாகாலாந்தின் பழங்குடியினருக்கு மிகவும் பிடித்தமானது நாய்க்கறியாகும். நாகாலந்து, மிஸோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் பழங்குடியினர் நாய்களை பலவீனத்தின் அடையாளமாக கருதுகிறார்கள். இதே உணவு தென் கொரியாவில் 'கெய்கோகி' என்ற பெயரில் விற்கப்படுகின்றன. 'நாய்களே ஜாக்கிரதை!!!'

தவளை கால்கள்

தவளை கால்கள்

சிக்கிமைச் சேர்ந்த லெப்சா (Lepchas) இனத்தவர் மிகவும் சுவையான உணவாக கருதுவது தவளைகளில் கால்களைத் தான். தவளைகளின் கால்களுக்கு மருத்துவ குணம் உள்ளது என அவர்கள் நம்புகிறார்கள். பழங்குடியினரின் இந்த விசித்திரமான உணவு இப்பொழுதும் அம்மாநிலத்தின் நகரங்களில் உள்ள உணவகங்களில் சிறப்பான உணவாக பரிமாறப்பட்டு வருகிறது.

ஏரி போலு (Eri Polu)

ஏரி போலு (Eri Polu)

பட்டுப் புழுக்கள் கக்கூனை உருவாக்கிய பின்னர் அவற்றின் கூட்டுப்புழுக்களை கொண்டு உருவாக்கப்படும் சுவைமிக்க உணவு ஏரி போலு ஆகும். இந்த உணவு அஸ்ஸாம் மாநிலத்தில் 'கோரிஸா' என்ற பெயரில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த விசித்திரமான உணவை பல்வேறு பழங்குடியின உணவகங்களிலும் உங்கள் நாக்கிற்கு வித்தியாசமான சுவைகளை வழங்கும் வகையில் பெற முடியும்.

காரமான சிவப்பு எறும்பு சட்னி

காரமான சிவப்பு எறும்பு சட்னி

இந்தியாவின் பழங்குடியின மாநிலமாக கருதப்படும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பழங்குடியின உணவாக சிவப்பு எறும்பு சட்னி உள்ளது. இம்மாநிலத்தில் எறும்புகள் அவற்றின் முட்டையுடன் சேர்த்து சட்னி செய்யப்படுவதால் 'சாப்ரா' என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது.

குடிகார இறால்

குடிகார இறால்

ஆல்கஹாலில் ஊற வைத்து பரிமாறப்படும் விசித்திரமான உணவு தான் குடிகார இறால் (Drunken Shrimp). இந்த உணவு சீனாவை பிறப்பிடமாக கொண்டிருந்தாலும், உலகின் பல்வேறு உணவகங்களிலும் பரிமாறப்பட்டு வரும் சிறந்த, சுவை மிக்க உணவாக இன்று விளங்குகிறது.

எலிக்கறி

எலிக்கறி

வடக்கு தாய்லாந்தில் உள்ள காரென் மலைப்பகுதியின் பழங்குடியிருக்கு மிகவும் பிடித்த உணவு எலிக்கறி ஆகும். மேலும், அவர்கள் எலிகளை பண்ணைகள் வைத்து வளர்க்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா! தங்களுடைய உணவில் சற்றே வித்தியாசமான ஐட்டங்களை சுவைக்க விரும்புபவர்களுக்கு இந்த உணவு ஏற்றதாக இருக்கும். தூய்லாந்தின் பல்வேறு உணவகங்களிலும் சாப்பிட ஏற்ற உணவாக எலிக்கறி உள்ளது.

பிள்ளைக் கறி (Foetus)

பிள்ளைக் கறி (Foetus)

ஆப்ரிக்காவிலுள்ள சில பழங்குடியின மக்கள் சாதாரணமாக சாப்பிடும் உணவாக பிள்ளைக் கறி உள்ளது. அமெரிக்காவிலும் மிகவும் புகழ் பெற்ற உணவாக பிள்ளைக் கறி உள்ளது. சீனாவின் கேன்டன் (குவாங்டாங்) மாகாணமும் பிள்ளைக் கறிக்கு மிகவும் புகழ் பெற்றிருக்கிறது.

பாம்பு ஒயின்

பாம்பு ஒயின்

'பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்' பழமொழி போன இடம் தெரியவில்லை இப்பொழுது. நீங்கள் வித்தியாசமாக எதையாவது சாப்பிட விரும்பினால் பாம்பை முயற்சி செய்யுங்கள் என்பது தான் இப்போதைய பரிந்துரையாக உள்ளது. அரிசி ஒயினில் பாம்பை நேராக ஊற வைத்து அல்லது பாம்பின் உடலில் இருந்து எடுக்கப்படும் இரத்தம் போன்ற திரவங்களை ஆல்கஹாலுடன் கலந்து பாம்பு ஒயின் உருவாக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Tribal Foods Sold In The Market

Do you love to have some weird tribal foods? Then, you will be happy to know that there are some weird tribal foods, which you can get in the markets. For those who love to try anything as food, here is a list of some common weird tribal foods that are available in the market.
Desktop Bottom Promotion