ஆண்களிடம் உள்ள கவர்ச்சிகரமான சில பண்புகள்!!!

By Boopathi Lakshmanan

பெண்களை ஈர்க்கும் பண்புகள் உங்களிடம் உள்ளதா? தவிர்க்க முடியாத வகையில் ஈர்க்கத்தக்க மற்றும் கவர்ச்சிகரமான பண்புகள் உடையவர்களாக ஆண்களை உருவாக்குபவை எவை? அது உடலா அல்லது குணமா - எது மிகவும் அவசியமானது? அது பளிச்சென்ற பார்வையா, புன்னகையா அல்லது தனித்தன்மையா? ஆணை கவர்ச்சியானவராக உண்டாக்கும பண்புகள் பெருமளவு உண்டு. பெண்களை மயக்கும் வித்தைகள் பெரும்பாலான ஆண்களுக்கு தெரிவதில்லை. பெண்கள் எந்த விஷயத்திற்காக வசீகரிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு தெரியாது.

பளபளப்பான கார்களையும், நல்ல தோற்றத்தையும் விட, ஆண்களை கவர்ச்சியானவராக காட்டவும், ஒரு பெண்னையும் கவிழ்த்து விடவும் கூடிய வேறு பல விஷயங்கள் நிறைய உள்ளன. விடுவர். ஒரு ஆணை விவரிக்க பல வழிகள் உண்டு மற்றும் ஒவ்வொருவரும் அதற்கு பல்வேறு விளக்கங்களை வைத்திருப்பார்கள். நல்ல தோற்றம் மட்டுமே ஒரு ஆணை கவர்ச்சியானவராக காட்டுவதில்லை மாறாக நகைச்சுவை உணர்வு,வீரம், நம்பிக்கை, ஸ்டைல், ஆண்மை மற்றும் புன்னகை போன்றவையே குணங்களே அவரை கவர்ச்சியானவராக காட்டுகிறது. இவற்றில் சில பண்புகள் தான் ஆணுக்கு கவர்ச்சிகரமானவை என கட்டாயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கவர்ச்சித் தன்மையை உயர்த்திக் கொள்ள விரும்பினால், உங்களிடம் உள்ள சிறந்த பண்புகளை கண்டறிந்து அதை வெளிப்படுத்தி முக்கியத்துவம் பெறலாம். ஆண்களை கவர்ச்சிகரமானவர்களாகவும் மற்றும் ஆண்மகன்களாகவும் காட்டக்கூடிய பண்களைப் பற்றி இங்கே விவரித்துள்ளோம்.

Classic Things About Men That Are Attractive

இன்பமும் நெகிழ்ச்சியும்

கவலைகள் இல்லாத மற்றும் நகைச்சுவை உணர்வுள்ள ஆண்களுக்காக பெண்கள் ஏங்குவார்கள். இத்தகைய ஆண்களை தான் பெண்கள் தங்கள் துணைவராக வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இத்தகைய நகைச்சுவை குணமுள்ள ஆண்கள் எவரையும் சிரிக்க வைத்து பிரிந்திருப்பவரை இணைக்கவும் மற்றும் எந்த உறவாயினும் அதன் வீரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளும் யுக்திகளும் அவர்களுக்குத் தெரியும். நகைச்சுவை உணர்வுடைய ஆண்கள் எதையும் கவலையில்லாமல் எடுத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்வதால், அவர்கள் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பார்கள்.

தன்னம்பிக்கை

நம்மில் பலரும் தன்னம்பிக்கை உடைய மற்றும தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் ஆண்களையும் நோக்கியே ஈர்க்கப்படுவோம். இந்த குணாதசியம் தான் அனைவரையும் பொறாமை கொள்ளச் செய்யும். உங்கள் தலையை நிமிர்த்திய படி சரியான நிலையில் நீங்கள் சென்றால், உலகமே உங்களுக்கு சொந்தமாக இருந்தாலும் அதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இப்படிப்பட்ட தன்னம்பிக்கை உடைய ஆண்களை தான் பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர் ஏனெனில் அது தான் ஆண்களின் பாசிட்டிவ் திறன்களை உணர்த்தும்.

வீரம்

வீரமான ஆண்கள் இன்னும் இருக்கிறார்களா? வீரம் போர் வீரர்களையே குறிக்கும். இந்த வகை ஆண்கள் பெண்களிடம் மிகவும் மரியாதையுடனும் அமைதியாகவும் இருப்பார்கள். இது சற்றே பழமையான குணமாக இருந்தாலும், அதிகமான பெண்கள் இத்தகைய ஆண்களை விரும்பி மதிக்கவும் செய்கின்றனர். வீரத்துடன் இருப்பதால் நீங்கள் பெண்களுக்கு மரியாதையை கொடுப்பதாக மட்டுமே இருக்கும். ஆண்களின் கோழைத்தனத்தை அல்ல.

கண்கள்

ஒரு ஆண்மகனுக்கு கவர்சியூட்டும் உடல் உறுப்பு அவரது கண்களும் இதழ்களின் சிரிப்பும் தான். ஆன்மாவின் கதவுகள் கண்கள் மற்றும் கண்களைக் கொண்டு தொடர்பு ஏற்படுத்த தெரிந்தவர் யாராக இருந்தாலும் அவர் மிகவும் நம்பிக்கையுடனும் மற்றும் எளிதில் தொடர்பு கொள்ளும் ஆணாகவும் இருப்பார். ஏனெனில், கண்களால் தொடர்பு கொள்ளத் தெரிந்த ஆண்கள் பெண்களுக்கு சிறப்பானவர்களாகவும், அன்பு பொழிபவர்களாகவும் காட்சியளிப்பார்கள்.

புன்னகை

இயற்கையாக புன்னகை பூக்கும் ஆண்கள் எவரையும் கரைய வைக்கும் திறமை கொண்டவர்கள். இனிமையான சிரிப்பு ஒன்றே ஆண்களின் மிகப்பெரிய கவர்ச்சியாக உள்ளது. இவர்கள் எதையும் கோபமாகவோ அல்லது தீவிரமாகவோ எடுத்துக்கொளள மாட்டார்கள் என்பதை இந்த புன்னகையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆண்மை

ஆணின் அழகிய வயிற்றுப் பகுதிக்கும், பின்புறத்திற்கும் வரவேற்பு அதிகம் என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால் நடைமுறையில் ஆண்மை என்பது பெரிய உடல்வாகு கொண்ட தோற்றத்தை பற்றியதாக இல்லாமல் ஆற்றலையும், அன்பையும் வெளிப்படுத்துவதாகவுமே இருக்கும். ஒரு மனிதன் பேசுவதையும் பழகுவதையுமே கொண்டுதான் எவரும் அவரிடம் ஈர்க்கப்படுகின்றனர்.

முதன்மையான ஆண்

ஒரு முதன்மையான ஆண் எபபோதும் தனக்கு சௌகரியமாகவும் மற்றும் பிறறை மகிழ்விக்க தெரிந்திருப்பார்கள். அவர் நம்பிக்கையை தூண்டுபவராக இருப்பார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் மற்றவரை கவனிக்க வைக்கும் கலையை அறிந்தவராக இருப்பார். ஒரு முதன்மையான ஆண் வாழ்க்கையை முழுமையாகவும் விருப்பத்துடனும் வாழ்பவராவார். மேலும், முதன்மையான ஆணாக இருப்பவர் எப்பொழுதும் தைரியமானவராகவும் மற்றும் சவால்களை எதிர்கொள்ள துணிந்தவராகவும் விளங்குவார்.

ஆண்களை கவாச்சியானவர்களாக காட்டும் சில பழமையான குணங்கள் தான் இவை. இவைகளை பயின்று பெண்களை மட்டுமல்லாமல் நீங்கள் சந்திக்கும் அனைவரையும் உங்களிடம் பலவினம் கொண்டவராக மாற்றுங்கள்!

Desktop Bottom Promotion