Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்
வேகாஸ் நகரத்தில் நடக்கும் வியக்கத்தக்க விளங்காத விஷயங்கள்!!!
சூதாட்டம், காசினோ, ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் பார்ட்டி வாழ்க்கை என்றால் நம் மனதில் முதலில் வந்து நிற்கும் நகரம் லாஸ் வேகாஸாகாத் தான் இறுக்க முடியும். லாஸ் வேகாஸ் என்பது பல அதிசயங்களை கொண்ட நகரமாகும். அங்கே இருக்கும் பல ஈர்ப்புகள் அதனை பற்றி மேலும் அமேலும் அறிந்து கொள்ள உங்களை தூண்டும். வேகாஸ் நகரத்தில் நடக்கும் வினோதமான, விளக்க முடியாத விஷயங்கள் ஒரு உத்திரவாதத்துடன் உங்களை வரவேற்கும் - வேகாஸில் நடக்கும் வினோதங்கள் அங்கேயே நீடிக்கும்.
வேகாஸ் என்பது 100 வருட பழமையான நகரமாகும். அங்கே தனிப்பட்ட வருமான வரி மற்றும் நிறுவன வருமான வரி இல்லாததால் அது புகழ் பெற்று விளங்குகிறது. 1910 ஆம் ஆண்டு சூதாட்டம் லாஸ் வேகாஸ் நகர்த்தில் சட்டமயமாக்கப்பட்டது. அதனால் சூதாட்டை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இங்கே படையெடுக்க தொடங்கினார்கள். இங்குள்ள உணவுகளுக்காகவும் வேகாஸ் நகரம் அறியப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இங்கே 60,000 பவுண்ட் எடையுள்ள இறால்கள் உண்ணப்பட்டு வருகிறது.

பணத்தை வாரி இறைக்க எந்த ஒரு வருத்தமும் இல்லையென்றால், லாஸ் வேகாஸ் நகரம் ஒரு நொடி பொழுதில் உங்களை கவர்ந்து விடும். இங்கே நடக்கும் வினோதமான சில விஷயங்களை கேள்விப்பட்டீர்களானால் அப்படியே அதிசயித்து போவீர்கள்.
நிலத்தடி சுரங்கத்தில் மக்கள் வசிக்கின்றனர்
இங்குள்ள சில மக்கள் நகர மழை அமைப்புக்காக வடிவமைக்கப்பட்ட நிலத்தடி சுரங்கத்தில் வசிக்கின்றனர். 3 நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தால் இந்த சுரங்கத்திலுள்ள அனைத்தும் அடித்துக் கொண்டு போய் விடும் என்று அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். என்னங்க, கேட்கவே விசித்திரமான ஒன்றாக இருக்கிறதல்லவா?
வேடிக்கைக்காக புல்டோசெர் (நிலச் சமன் எந்திரம்) ஓட்டுதல்
லாஸ் வேகாஸ் விளையாட்டு மைதானத்தில் இந்த கன வகை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். 14 வயது முதல் 114 வயது வரை நிரம்பியுள்ளவர்கள் குறைந்தது 90 நிமிடங்களுக்காவது இங்கே வந்து புல்டோசெரை ஓட்டி அழுக்குகளை சுத்தம் செய்யலாம். அடுத்த முறை வேகாசிற்கு சுற்றுலா சென்றால் இவ்வகை வினோதமான செயல்களை முயற்சித்து பாருங்கள்.
லாஸ் வேகாஸ் விளையாட்டு காசினோவில் கடிகாரங்கள் கிடையாது
கடிகாரங்கள் இல்லையென்றால் இந்த உலகத்தையே மறந்து வெளி உலகத்தில் நடப்பது தெரியாமல் இருப்பீர்கள். இதனால் சூதாத வந்தவர்கள் தங்களேயே மறந்து விளையாட்டில் மூழ்கி போவார்கள். அதை தவிர அவர்களுக்கு எதன் மீதும் மனது செல்லாது. வேகாசில் உள்ள வினோதமான விஷயங்களில் முதன்மையானதாக விளங்குகிறது இது.
உலகத்திலுள்ள பிரகாசமான ஒளி
அண்ட வெளியில் இருந்து காணும் போது உலகத்தில் உள்ள பிரகாசமான ஒளியை வேகாஸ் நகரத்தில் காண முடியும். அது வேறு எதுவும் இல்லை - இங்குள்ள சொகுசு ஹோட்டலான லக்ஸர் லாஸ் வேகாஸ். லாஸ் வேகாஸிலுள்ள நெவாடா என்ற இடத்திலுள்ள லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப் இன் பாரடைஸில் உள்ளது இந்த புகழ் பெற்ற காசினோ. இந்த ஹோட்டல் 30 மாடியை கொண்ட பிரமிட் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்த ஹோட்டலின் சிறப்பம்சமாகும். வேகாஸில் உள்ள வினோதமான விஷயங்களில் கண்ணை கவரும் விதமாக இது அமைந்துள்ளது.
புறாக்களுக்கு உணவளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது
புறாக்களுக்கு உணவளிப்பதை கிளார்க் கௌண்டி அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்து சமீபத்தில் தான் தடை செய்யப்பட்டுள்ளது. புறாக்கள் கூரைகளை பாழாக்கி சுற்றுலாப் பயணிகளை தாக்குகிறது என்று அவர்கள் தடைக்கான காரணங்களாக முன்னிருத்தியிருக்கிறார்கள். வேகாஸில் உள்ள விநோதாமான விஷயங்களில் இதை முக்கியமானதாக கூட சொல்லலாம்.
காசினோ கலாச்சாரம்
லாஸ் வேகாஸில் விநோதமாக நடக்கும் விஷயங்களில் மிகவும் சுவாரசியமானவை என்றால் அது அங்குள்ள காசினோவிற்கு வருகை தரும் சூதாட்ட பிரியர்கள். அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் விளையாட்டில் தங்களை மறக்கும் வண்ணம் அவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தே கடிகாரங்களோ அல்லது ஜன்னல்களோ கிடையாது. மேலும் இலவசமாக மதுபானங்களும் வழங்கப்படுகிறது. அப்போது தானே அங்கே வருபவர்கள் நீண்ட நேரம் அங்கே இருப்பார்கள்.
உலகத்தில் திருமணத்திற்கென விளங்கும் தலைநகரம்
உலகத்தில் திருமணத்திற்கென தலைநகரமாக வேகாஸ் விளங்குகிறது. அதனால் இதனை சேர்க்கவில்லை என்றால் வினோத விஷயங்களின் பட்டியல் முழுமை பெறாது. இங்கே திருமண உரிமம் மிகவும் சுலபமாக, அதுவும் குறைந்த செலவில் கிடைக்கும். அதனால் தான் லாஸ் வேகாஸ் இப்பெயரை பெற்றது.
உலகத்தில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்கள்
இங்குள்ள மிகப்பெரிய ஹோட்டல்களின் பட்டியலை எடுத்தால், உங்களுக்கு மேலும் ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருக்கும். உலகத்தில் உள்ள முதல் 25 பெரிய ஹோட்டல்களில் 18 ஹோட்டல்கள் இங்கே தான் உள்ளது. அதே போல் அமெரிக்காவில் உள்ள 5 பெரிய ஹோட்டல்களில் 4 ஹோட்டல்கள் இங்கு தான் உள்ளது.



Click it and Unblock the Notifications