Latest Updates
-
5500 பணக்காரர்கள் அவர்களின் உடலை சேமிக்க பல கோடிகளை முதலீடு செஞ்சுருக்காங்க...காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இந்தியாவில் இந்த 7 அரசியல்வாதிகளுக்கு கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன தெரியுமா?
Temples Dedicated To Politicians: இந்தியா என்றாலே கோயில்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு பல கோயில்கள் அரசியல் வாதிகளுக்காகவும் கட்டப்பட்டு உள்ளன. ஏன் சினிமா நடிகர்கள், நடிகைகள் மீது ஆர்வம் கொண்ட ரசிகர்கள் கூட அவர்களுக்காக கோயில்களைக் கட்டியுள்ளனர். இந்திய மக்களைப் பொறுத்தவரை ஒருத்தரை பிடித்து விட்டால் போதும் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
நடிகை குஷ்புக்காக அவர்களது ரசிகர்கள் ஒரு கோயிலை கட்டியுள்ளனர். இப்படி சினிமா பிரபலங்களுக்கு மட்டுமல்ல பல அரசியல் பிரபலங்களுக்காகவும் கோயில் கட்டப்பட்டு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அரசியல்வாதிகளுக்கு அவர்களின் ஆதரவாளர்களால் கோயில்கள் கட்டுப்பட்டு உள்ளன. அப்படி இந்தியாவில் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

அரசியல்வாதிகளுக்காக கட்டப்பட்ட கோயில்கள்:
இந்தியாவில் மட்டும் தான் மக்கள் ஒருத்தரை பிடித்து விட்டால் போதும் அவர்களை கடவுளாக கும்பிட ஆரம்பித்து விடுவார்கள். இந்தியாவில் சினிமா பிரபலங்களுக்கு, கிரிக்கெட் பிரபலங்களுக்கு மற்றும் அரசியல் தலைவர்களை கடவுள்களாக பார்த்து கோயில்களை கட்டி கும்பிடுகின்றனர். மக்களுக்காக வாழும் தலைவர்களை அவர்கள் ஒருபோதும் மறந்ததில்லை. மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களுக்காக அவர்கள் கோயில்களைக் கட்ட யோசித்ததில்லை.
சோனியா காந்திக்காக கட்டப்பட்ட கோயில்
பிரபலமான காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சோனியா காந்தி அவர்கள் ஆவார். இந்திரா காந்தி, ராஜிவ் காந்திக்கு அடுத்தபடியாக மக்களுக்கு பிடித்த தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். வெளிநாட்டில் பிறந்தால் கூட இந்திய மண்ணின் மருமகளாக வந்து இன்று வரை தன்னுடைய அரசியல் பயணத்தை திறம்பட செய்து வருகிறார். காங்கிரஸ் தொண்டர்களின் மிகுந்த மரியாதைக்குரியவர். எனவே அவரது ஆதரவாளர்கள் அவருக்கென்று ஒரு கோயிலை கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள இக்கோவிலில் அவருக்காக அவரது சிலையும் நிறுவப்பட்டு உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் சோனியா காந்தி அவர்களுக்கு பிரார்த்தனையும் பூஜையும் செய்யப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தலைவராக இருந்து வருகிறார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஆட்சியை பிடித்த பெருமை இவரை சேரும். இவர் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்த இவரது பங்கும் முக்கியமானது. எனவே இவரது ஆதரவாளர்கள் இவரை வெறும் அரசியல் தலைவராக மட்டும் பார்க்கவில்லை. அவரின் தெய்வீக குணங்களை போற்றும் வகையில் அவருக்காக அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் கோயில்களைக் கட்டியுள்ளனர். இதைத் தவிர உத்தரப்பிரதேசத்திலும் அவருக்காக ஒரு கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எம். ஜி ராமச்சந்திரன் என்ற எம் ஜி ஆர்
தமிழ்நாட்டில் சிறந்த நடிகராகவும் சிறந்த அரசியல் தலைவராகவும் இருந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் எம். ஜி.ஆர் அவர்கள். தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்து மக்களுக்காக சிறப்பாக தொண்டாற்றியுள்ளார். அவர் இருந்த போதும் சரி இறந்த பின்பும் சரி மக்கள் அவரை கொண்டாட நாளே இல்லை எனலாம். காமராஜர் மாதிரி குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைத்தவரில் இவரும் ஒருவர். அதற்காக நிறைய முயற்சிகளையும் அவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது ஆதரவாளர்களால் அவருக்காக ஒரு கோயிலை கட்டியுள்ளனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் குமாரி மாயாவதி
குமாரி மாயாவதி அவர்கள் இந்திய அரசியல்வாதியாகவும், உத்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்து வந்துள்ளார். இவர் நான்கு முறை உத்திரப்பிரதேச முதல்வராக இருந்துள்ளார். உலகில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் மாயாவதி பெயரும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் மாயாவதிக்கு 2010ஆம் ஆண்டு பண்டேல்கண்டில் கோயில் கட்ட முன்வந்தனர். நாட்புரா கிராமத்தில் அவருக்காக ஒரு சிலையும் நிறுவப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசத் தந்தை மகாத்மா காந்தி
மகாத்மா காந்தியை " மனித குலத்தின் மீட்பர்" என்று மக்கள் அழைக்கின்றனர். அவர் நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு உள்ளார். இந்திய மக்களை சுதந்திரத்திற்காக வழிநடத்தியதில் இவரது பங்கு மிக முக்கியமானது. ஒடிசாவில் மகாத்மா காந்திக்காக ஒரு கோயிலை கட்டியுள்ளனர். "தேசத்தின் தந்தை" என்பதன் மூலம், ஒடிசாவின் சம்பல்பூர் நகரின் புறநகரில் 1970 களிலேயே அவருக்காக கோயில் கட்டப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.வான அபிமன்யு குமாரின் சிந்தனையில் உருவானதுதான் இந்தக் கோயில். 1974 ஆம் ஆண்டு அப்போதைய ஒடிசா முதலமைச்சராக இருந்த நந்தினி சத்பதியால், 3.5 அடி உயரமுள்ள மகாத்மாவின் வெண்கலச் சிலை உட்கார்ந்து இருக்கும் நிலையில் நிறுவப்பட்டு உள்ளது. அவருக்காக இங்கு வழிபாடும் நடைபெறுகிறது.
பிரதமர் ராஜீவ் காந்தி
பீகாரின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கோவில் கட்டப்பட உள்ளது. ஒரு காங்கிரஸ் தலைவர் இதற்காக ஏற்கனவே 'பூமி பூஜை' செய்துள்ளார். மேலும் கட்டுமானப் பணிகள் இதற்காக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்பு
குஷ்பு அவர்கள் ஒரு சிறந்த நடிகையாகவும் ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இதனால் அவரது ரசிகர்கள் 2001 இல் திருச்சிராப்பள்ளியில் அவருக்கு கோயில் கட்டி அவருக்கு 'தாய் தெய்வம்' அந்தஸ்தை வழங்கினார்கள். முதன் முதலாக ஒரு நடிகைக்காக கட்டப்பட்ட கோயில் என்ற சிறப்பை பெற்றது.



Click it and Unblock the Notifications











