Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
பூனம் பாண்டே இறக்கவில்லையாம்.. இப்படியொரு புரளியை கிளப்ப காரணம் இதானாம்...!
Poonam Pandey Is Alive: நேற்று இந்த நேரத்தில் இந்தியாவில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்ற ஒரு செய்தி தான் பூனம் பாண்டேவின் மரணம். அதுவும் இவர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்ததாக அவரது இன்ஸ்டாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளிவந்த தகவலால், அவரது ரசிகர்கள் முதற்கொண்டு அனைவருமே அதிர்ச்சியடைந்தோம்.
இந்நிலையில் இன்று திடீரென்று நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு பேரதிர்ச்சியை அளித்துள்ளார். இப்படி தனது மரணச் செய்தியை வெளிட்டதற்கு காரணம், பல உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே செய்ததாக தெரிவித்துள்ளார்.

இவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவுடன், குறிப்பையும் பகிர்ந்துள்ளார். அதில் "நான் முக்கியமான ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் . அது நான் இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்னை கொல்லவில்லை, ஆனால் இந்த நோயை எவ்வளவு சமாளிப்பது என்பது பற்றி விழிப்புணர்வு இல்லாததால் ஆயிரக்கணக்கான பெண்கள் இறந்துள்ளனர். மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய் புற்றுநோயையும் முழுமையாக குணப்படுத்த முடியும். அதற்கு HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகளை மேற்கொள்வது தான். இதை தவறாமல் மேற்கொள்வதன் மூலம், இந்நோயால் எந்த உயிரையும் இழக்க வேண்டி வராது. விமர்சன விழிப்புணர்வுடன் ஒருவரையொருவர் வலுப்படுத்துவோம், மேலும் ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம். என்ன செய்ய முடியும் என்பதை ஆழமாக ஆராய பயோவில் உள்ள இணைப்பைப் பார்வையிடவும். நோயின் அழிவுகரமான தாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றாக முயற்சிப்போம்." என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தவிர, மற்றொரு வீடியோவில் தனது இந்த நாடகத்தினால் மற்றவர்களின் மனதைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் என்று கூறி மன்னிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
