Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
கங்கை கொண்ட சோழபுர கோவிலை கட்டிய இராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகைப் புரிந்தார். சுற்றிப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பழங்கால சிவன் கோவிலில் வழிபாடு செய்தார். சோழர்கள் தங்களின் கட்டிடக்கலைக்கு உலகப்புகழ் பெற்றவர்கள். சோழர்களின் கட்டிடக்கலைத் திறமையின் உச்சம்தான் தஞ்சையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம்.
தஞ்சை பெரிய கோவிலின் கட்டிடக்கலை திறனுக்கு எந்த வகையிலும் குறைவிலாத அதிசயம்தான் பிரதமர் வழிபட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோவில். இந்த கோவிலை இராஜராஜ சோழனின் மகனான முதலாம் ராஜேந்திர சோழன் கட்டினார்.

கங்கை கொண்ட சோழபுரம்
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமான கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோவில், சோழ கட்டிடக்கலையின் உச்சமாகக் கருதப்படுகிறது, இது வட இந்தியாவில் கங்கை நதிக்கரைக்கு அருகில் இருந்து சுமத்ரா, மலேசியா மற்றும் மியான்மரின் சில பகுதிகள் வரை வெற்றிக் கொடி நாட்டிய சோழ பேரரசின் வலிமை மற்றும் மகத்துவத்தின் வெற்றிப் பிரகடனமாகும்.
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் ஆடி திருவாதிரை விழாவும் சோழப் பேரரசின் பெருமைமிக்க தருணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வருகையால் இந்த பிரமாண்டமான கோவில் தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகி வருகிறது.
ஆடி திருவாதிரை
ஆடி மாதம் முழுவதும் பல்வறு விழாக்களால் நிறைந்தது. அந்த வகையில் ஆடி மாத திருவாதிரை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஆடி திருவாதிரை விழா, தென்கிழக்கு ஆசியாவிற்கு முதலாம் ராஜேந்திர சோழனின் புகழ்பெற்ற கடல் பயணத்தின் 1,000 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் நடைபெறுகிறது என்று அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது வருகையின் போது, பேரரசர்களான ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழனின் பெயர்கள் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமை என்று பிரதமர் மோடி கூறினார், மேலும் அவர்களுக்காக தமிழ்நாட்டில் பிரமாண்டமான சிலைகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.
இராஜேந்திர சோழன்
இராஜராஜ சோழனுக்குப் பிறகு முதலாம் இராஜேந்திர சோழன் அரியணை ஏறினார். சோழ வம்சத்தின் தலைசிறந்த அரசர்களில் ஒருவரான முதலாம் ராஜேந்திர சோழன், தெற்காசிய வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு பெயராகும். ஆனால் முதலாம் இராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் வேறு, இராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் மதுராந்தக சோழன்.
கங்கை கொண்ட சோழன்
இந்தியாவின் தலைசிறந்த அரசர்களில் ஒருவரான முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி திரிபுவன மாதேவியாருக்குப் பிறந்த மதுராந்தகர் சோழ பேரரசின் வாரிசாக பிறந்தார். 1012 இல் அவரது தந்தையால் அவர் முடி இளவரசராக அறிவிக்கப்பட்டார், இருப்பினும் அவர் 1002 இல் அவரது போர்களில் வெற்றிப்பெற அவரது தந்தைக்கு உதவத் தொடங்கினார். 1014 இல் அரியணை ஏறியவுடன், மதுராந்தகர் முதலாம் ராஜேந்திர சோழன் என்ற அரச பெயரை ஏற்றுக்கொண்டார். அவரது ஆட்சியில் சோழ பேரரசு பல வெற்றிகளைக் குவித்தது
தனது படைகளை திரட்டி கங்கை நதி வரை அணிவகுத்துச் சென்று, வங்காளத்தின் பால இராஜ்ஜியத்தைத் தோற்கடித்து, வெற்றியுடன் திரும்பிய பிறகு, கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைநகராக உருவாக்கினார். அதனால்தான் அவர் 'கங்கை கொண்ட சோழன்' என்று பட்டத்தைப் பெற்றார். இந்த புதிய நகரத்தில், ஒரு பிரமாண்டமான கோவிலை கட்டினார். இந்த கோவிலுக்குத்தான் நரேந்திர மோடி அவர்கள் வருகைத் தந்தார்.
போர் வெற்றிகள்
பின்னர், அவர் விஜயாதித்தியப் படைகளுக்கு எதிராக வெற்றி பெற்றுத் திரும்பினார். அவர் மேற்கு மற்றும் கிழக்கு சாளுக்கியர்களை போர் தந்திரம் மூலம் வென்றார். இதனால் சோழ பேரரசு கங்கை நதி மற்றும் வங்காளத்தில் உள்ள பால ராஜ்ஜியம் வரை விரிவடையத் தொடங்கியது.
போர் வெற்றிகள் மட்டுமின்றி இராஜேந்திர சோழன் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். அவர் ஆட்சி செய்த பகுதிகளில் கல் கோயில்கள் மற்றும் செங்கல் கோயில்கள் அதிகமாக கட்டப்பட்டது. மேலும், கங்கைகொண்ட சோழபுரத்தில் 3.3 மைல் அகலமும் 16 மைல் நீளமும் கொண்ட ஒரு ஏரியை செயற்கையாக உருவாக்கினார். இது இந்தியாவின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரியாகும்.
நிர்வாக சீர்திருத்தங்கள்
சோழப் பேரரசின் நிர்வாகம் பாரம்பரிய உள்ளூர் சுயராஜ்ய அணுகுமுறையைப் பின்பற்றியது. முப்பது வார்டுகள் அல்லது குடும்பங்கள் ஒன்றாக ஒரு கிராமத்தை உருவாக்கின. ஒவ்வொரு வார்டும் கிராம சபைக்கான பிரதிநிதிகளை தானாக தேர்ந்தெடுத்தது. இராஜேந்திர சோழன் முன்பே நிறுவப்பட்ட அரசாங்க அமைப்புகளின் கீழ் செயல்பட்டார், எனவே அது ஒரு பரம்பரை முடியாட்சியாக இருந்தது. சோழ வம்சம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது: மண்டலம், வளநாடு மற்றும் நாடு. அதுமட்டுமின்றி புரவுவரித்தினைக்காலம் என்று அழைக்கப்படும் ஒரு மேம்பட்ட வருவாய் அமைப்பு அரசாங்கத்தின் இறுதி வருவாயை தீர்மானித்தது.
கங்கை கொண்ட சோழபுரம் கோவில்
இராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரிய கோவிலை விஞ்சும் வகையில் இருந்தது. தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பாணியில் கட்டப்பட்டது, அதன் பிரமாண்டமும், நேர்த்தியும் சோழப் பேரரசின் மிகவும் வளமான நிலையை நிரூபிக்கிறது. தஞ்சை பெரிய கோவில் நேரான, கம்பீரமான கோபுரத்துடன் நிற்கும் அதேவேளையில் மென்மையான கோடுகள் மற்றும் வளைவுகளைக் கொண்டுள்ளது,
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவாதிரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆடி என்பது மாதத்தின் பெயர், திருவாதிரை என்பது சிவபெருமானுடன் தொடர்புடைய ஒரு நட்சத்திரம், இது இராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமாகவும் நம்பப்படுகிறது. பாரம்பரியமாக, இந்தத் திருவிழாவில் முதலாம் ராஜேந்திரனின் சாதனைகளை விளக்கும் தெருக்கூத்து அல்லது சாலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. மன்னரின் சிலைக்கு புதிய பட்டுத் துணிகள் அணிவிக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications
