Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பித்ரு பட்ச காலத்தில் உங்க கனவுல இதெல்லாம் வருதா? அப்ப உங்க அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது-ன்னு அர்த்தம்..
Pitru Paksha 2025: பழங்காலம் முதலாக கனவுகளில் நமக்கு தெரியும் குறிப்பிட்ட சில விஷயங்கள் நமக்கு ஏதோ நடக்கப் போவதை வெளிப்படுத்துவதன் ஒரு குறிப்பாக மக்களால் நம்பப்பட்டு வருகிறது. உதாரணமாக, கனவில் வாழை இலை போட்டு சாப்பிடுவது போன்று வந்தால், மரண செய்தியைப் பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது பித்ரு பட்சம் என்னும் மகாளய பட்ச காலம். இந்த காலமானது மகாளய அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் ஆகும். வேதங்களின் படி, இந்த பித்ரு பட்ச காலத்தில் ஒருவர் தங்களின் முன்னோர்களை கனவில் கண்டால், அது சற்று சிறப்பானதாக கருதப்படுகிறது.

அதுவும் இறந்த முன்னோர்கள் கனவில் வந்தால், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது பற்றி நமக்கு தெரிவிக்கின்றன. இப்போது பித்ரு பட்ச காலத்தில் ஒருவர் எப்படிப்பட்ட விஷயங்களை கனவில் கண்டால், அது மங்களகரமானதாக அல்லது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக கருதப்படுகின்றன என்பதைக் காண்போம்.
கனவில் பூக்கள்
பித்ரு பட்ச காலத்தில் ஒருவரது கனவில் முன்னோர்கள் தங்கள் கையில் பூக்களை வைத்துக் கொண்டு இருந்தால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் வெள்ளை நிற பூக்களை உங்கள் மூதாதையர் வைத்திருந்தால், உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கப் போகிறது என்று அர்த்ம். மேலும் பூங்கொத்தை கனவில் கண்டாலும், அது அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.
சிரிக்கும் மூதாதையர்
பித்ரு பட்ச காலத்தில் உங்கள் முன்னோர்கள் உங்களின் கனவில் சிரித்துக் கொண்டிருந்தால், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். மேலும் இப்படியான கனவு திடீர் பண வரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் புதிய உயரங்களை அடையப் போவதைக் குறிக்கிறது. அதோடு இந்த கனவு நல்ல செய்திகளைப் பெறப் போவதையும் குறிக்கிறது.
வீட்டு வாசலுக்கு வரும் மூதாதையர்
உங்கள் கனவில் முன்னோர்கள் உங்கள் வீட்டு வாசலுக்கு வருவதைக் கண்டால், அது சந்தோஷத்தின் அறிகுறியாகும். இப்படியான கனவை பித்ரு பட்ச காலத்தில் கண்டால், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஆசைகள் நிறைவேறப் போவதையும், சிக்கிய பணம் கைக்கு கிடைக்கப் போவதையும் குறிக்கிறது.
முன்னோர்கள் இனிப்பை ஊட்டுவது
பித்ரு பட்ச காலத்தில் கனவில் முன்னோர்கள் இனிப்புக்களை ஊட்டுவது போன்று கண்டால், கடன் தொல்லையில் இருந்து விடுபடப் போவதைக் குறிக்கிறது. அதோடு இந்த கனவு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் போவதையும் குறிக்கிறது. மேலும் நீண்ட கால ஆசை ஒன்று நிறைவேறப் போவதையும் குறிக்கிறது.
இறந்த தந்தை அல்லது தாத்தாவை காண்பது
பித்ரு பட்ச காலத்தில் இறந்த தந்தை அல்லது தாத்தாவை கனவில் காண்பது சிறப்பு வாய்ந்ததாகும். அதுவும் அவர்கள் சிரிக்கும் படியான கனவு கண்டால், உங்களின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரப்போகிறது என்று அர்த்தம். குறிப்பாக பண பிரச்சனைகள் தீரும், அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது என்றும் அர்த்தம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications