Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Pitru Paksha 2023: பித்ரு பட்ச காலத்தில் முன்னோர்கள் வீட்டிற்கு வருகை தந்திருப்பதைக் குறிக்கும் அறிகுறிகள்!
Pitru Paksha 2023 In Tamil: பித்ரு பட்சம் அல்லது மகாளய பட்சம் என்பது இறந்த முன்னோர்களை வழிபட ஏற்ற காலமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாளில் தொடங்கி, புரட்டாசி அமாவாசை நாளில் முடிவடையும். இந்த காலகட்டத்தில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது, திதி கொடுப்பது போன்ற சடங்குகளை செய்து, முன்னோர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசியை பெறுவோம்.
இந்த ஆண்டு பித்ரு பட்சம்/மகாளய பட்சமானது செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 14 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் முன்னோர்கள் பூமிக்கு வந்து, தங்களின் குடும்பத்தை சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது. பித்ரு பட்ச காலத்தில் உங்கள் முன்னோர்கள் உங்களை காண வந்துள்ளார்கள் என்றால் அது குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

அந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால், உங்கள் முன்னோர்கள் உங்களைச் சுற்றியிருப்பதாக அர்த்தம். இது தவிர அந்த அறிகுறிகள் நமக்கு வரவிருக்கும் நல்லது, கெட்டதையும் குறிக்கும். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. சுயமாக அரச மரம் வளர்வது
உங்கள் வீட்டிற்கு வெளியே திடீரென்று சுயமாக அரச மரம் வளரத் தொடங்குகிறது என்றால், உங்கள் முன்னோர்கள் உங்கள் வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். கூடுதலாக, இம்மாதிரி அரச மரம் வளர்வது உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது வருத்தத்தில் இருப்பதையும் குறிக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் அரச மரத்தை அகற்றுவதற்கு பதிலாக, பித்ரு தோஷத்தைப் போக்கி பித்ருக்களை மகிழ்விக்க நடவடிக்கை எடுங்கள்.
2. சிவப்பு எறும்புகள் அதிகம் சுற்றுவது
பித்ரு பட்ச காலத்தில் உங்கள் வீட்டில் திடீரென்று சிவப்பு எறும்புகள் அதிகமாக சுற்றிக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்களா? அதற்கு காரணம் உங்கள் முன்னோர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தந்திருக்கலாம். மறைந்த முன்னோர்கள் எறும்புகளின் வடிவில் உங்கள் வீட்டில் வந்து, உங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்வதாகவும் கூறப்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் எறும்புகளை அழிக்க முற்படாமல், அதற்கு மாவை வழங்குங்கள். இது முன்னோர்களுக்கு மன அமைதியைத் தரும்.
3. துளசி செடி வாடிப் போவது
இந்து மதத்தில் துளசி செடி புனிதமான ஒரு செடியாக கருதப்படுகிறது. முக்கியமாக துளசி செடியானது லட்சுமி தேவி வாசம் செய்யும் செடியாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட துளசி செடி வீட்டில் காய்ந்து போவதைக் கண்டால், வீட்டிற்கு மறைந்த முன்னோர்கள் வருகை தந்திருப்பதைக் குறிக்கலாம். கூடுதலாக, இப்படி துளசி காய்ந்து போவது முன்னோர்கள் உங்கள் மீது அதிருப்தியாக இருப்பதையும் குறிக்கிறது. இந்நிலையில் முன்னோர்களை மகிழ்விக்க, பித்ரு பட்ச நாட்களில், தினமும் உங்கள் முன்னோர்களுக்கு நீரை வழங்குங்கள்.
4. கருப்பு நாயின் வருகை
மகாளய பட்ச நாட்களில் உங்கள் வீட்டை கருப்பு நாய் சுற்றிக் கொண்டே இருந்தால், அது உங்கள் வீட்டில் முன்னோர்கள் வந்திருப்பதைக் குறிக்கலாம். கருப்பு நாயானது முன்னோர்களின் தூதராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படி கருப்பு நாய் வருவது மங்களகரமானதாக கூறப்படுகிறது.
5. வீட்டில் காகத்தின் தோற்றம்
பித்ரு பட்ச நாட்களில் காகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த காலகட்டத்தில் காகம் உங்கள் வீட்டிற்கு வந்து உணவுகளை உட்கொண்டால, உங்கள் முன்னோர்கள் உங்கள் அருகில் இருப்பதோடு, அவர்கள் உங்களுக்கு ஆசியை வழங்குவதையும் குறிக்கிறது. ஆகவே பித்ரு பட்ச காலத்தில் தினமும் காகங்களுக்கு உணவுகளை வையுங்கள். இப்படி செய்வதன் மூலம், மறைந்த முன்னோர்களின் ஆசி எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications