Latest Updates
-
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
பித்ரு பட்ச காலத்தில் இந்த பொருட்களை தானம் செய்யுங்க.. முன்னோர்களின் ஆசியால் செல்வம் பெருகும்..
Pitru Paksha 2023 In Tamil: பித்ரு பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி 14 நாட்கள் வரையான காலமாகும். இந்த காலத்தில் இறந்த முன்னோர்களின் ஆன்மா எமனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு வந்து தங்கள் குடும்பத்தினரை ஆசீர்வதிப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு பித்ரு பட்சமானது செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 14 வரையிலான காலமாகும். இந்த காலகட்டத்தில் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக திதி கொடுத்து, தர்ப்பணம் செய்வார்கள். அதோடு பித்ரு பட்ச காலத்தில் தானம் வழங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இப்படி தானங்களை செய்யும் போது, முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவதோடு, அவர்களின் ஆசியால் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும். இப்போது பித்ரு பட்ச காலத்தில் என்னென்ன பொருட்களை தானம் செய்யலாம் என்பதைக் காண்போம்.
1. கருப்பு எள்ளு
பித்ரு பட்சத்தின் போது முன்னோர்களை வழிபடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் கருப்பு எள்ளு. இந்த கருப்பு எள்ளு விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிடிக்கும். பித்ரு பட்சத்தின் போது ஒருவருக்கு தானம் செய்யும் போது, கையில் கருப்பு எள்ளு இருக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில் இப்படி செய்யும் போது, இந்த தானத்தின் பலன் முன்னோர்களுக்கு சேரும் என்பது நம்பிக்கை.
ஒருவேளை நீங்கள் வேறு எந்த பொருட்களையும் தானம் செய்யாவிட்டாலும், கருப்பு எள்ளு விதைகளை தானம் செய்யலாம். இப்படி கருப்பு எள்ளு விதைகளை தானம் செய்யும் போது, அது இறந்த முன்னோர்களை துன்பங்களில் இருந்து காக்கும் என்பது நம்பிக்கை. நம் முன்னோர்கள் துன்பங்களின்றி சந்தோஷமாக இருந்தால், அவர்களின் ஆசியால் நம் வாழ்க்கை செல்வ செழிப்போடு மகிழ்ச்சியாக இருக்கும்.
2. நில தானம்
பித்ரு பட்ச காலத்தில் செய்யப்படும் தானத்தில் நில தானம் இருப்பதிலேயே மிகப்பெரிய தானம் என்று கூறப்படுகிறது. இப்படி நிலத்தை ஒருவருக்கு தானம் செய்யும் போது, நம்மை அறியாமல் நாம் செய்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைப்பதோடு, நம் முன்னோர்களுக்கு புண்ணியமும் சேரும்.
3. தங்கம், வெள்ளி தானம்
சாஸ்திரங்களில், நம் முன்னோர்களின் இருப்பிடம் சந்திரனின் மேல் பகுதியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே இறந்த முன்னோர்களின் ஆசியைப் பெற விரும்பினால், வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களை தானம் செய்யுங்கள். இது தவிர அரிசி, பால் போன்றவற்றையும் தானம் செய்யலாம். இதன் மூலம் புண்ணியம் சேர்ந்து, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும்.
4. ஆடை தானம்
பித்ரு பட்ச காலத்தில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு, ஆடைகளை தானம் செய்வத புணியத்தை சேர்க்கை. மேலும் காலனிகள், குடை போன்வற்றை தானம் செய்வது ராகு-கேது தோஷத்தைப் போக்கும். அதுவும் கருப்பு நிற குடைகளை தானம் செய்தால், முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இவற்றை எல்லாம் தானம் செய்வது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.
5. வெல்லம் மற்றும் உப்பு
பித்ரு பட்ச காலத்தில் வெல்லம் மற்றும் உப்பை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீட்டில் சிறு விஷயங்களுக்கு எல்லாம் பெரிய சண்டை ஏற்படுகிறதா? அப்படியானால் வெல்லம் மற்றும் உப்பை பித்ரு பட்ச காலத்தில் முன்னோர்களுக்கு படைத்து வணங்கி தானம் செய்யுங்கள். இதனால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications