Latest Updates
-
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா?
இதுல உங்க சுண்டு விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்களோட சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்...
Personality: நம் ஒவ்வொருவரின் குணாதிசயங்களுமே வேறுபடும். ஒருவரது குணாதிசயங்களை பலவாறு தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக ஒருவரது முக, கண், காது, மூக்கு, கை விரல் போன்றவை அந்நபரின் குணாதிசயங்கள், பழக்கவழக்கங்கள், உறவுகளை கையாளும் விதம் போன்ற பல விஷயங்களை தெரியப்படுத்தும். அதுவும் ஒருவரது சுண்டு விரல் அந்நபரின் சுவாரஸ்யமான குணாதிசயங்களை தெரியப்படுத்தும் என்பது தெரியுமா?
ஆம், எப்படி ஒருவரது கையில் உள்ள ரேகைகள் அந்நபரின் எதிர்காலத்தைப் பற்றி தெரியப்படுத்துகிறதோ, அதேப் போல் சுண்டு விரலின் அளவு அந்த நபரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும். மூன்று அளவுகளில் ஒருவரது சுண்டு விரல் இருக்கக்கூடும். இதில் உங்களின் சுண்டு விரல் எந்த மாதிரி என்று கூறி, உங்களின் குணாதிசயங்களை படித்து, சரியாக உள்ளதாக என்பதை கூறுங்கள்.

டைப்-A
உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோடு வரை இருந்தால், நீங்கள் அவ்வளவு எளிதில் மற்றவர்களுடன் பழகமாட்டீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கூட உங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லமாட்டீர்கள். நேர்மையின்மை உங்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தும். நீங்கள் எப்போதும் ஒருவருக்கு உண்மையாக, நேர்மையாக இருப்பீர்கள்.
நீங்கள் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து தள்ளி, தனிமையில் இருக்கவே விரும்புவீர்கள். இதனால் பலர் உங்களை ஆணவம் பிடித்தவர்களாக தவறாக நினைக்கலாம். ஆனால் உங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது நன்கு தெரியும். நீங்களும் அதுவே போதும் என்று இருப்பீர்கள். மற்றவர்களிடம் உங்களை நிரூபிக்க விரும்பமாட்டீர்கள்.
டைப் - B
உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோடுக்கு மேல் நீளமாக இருந்தால், நீங்கள் மிகவும் உண்மையாக இருப்பீர்கள் மற்றும் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். உங்களுக்கு காதலன்/காதலி இருந்தால், அவர்கள் தான் உலகம் என்று இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு தான் முன்னுரிமை அளிப்பீர்கள். அவர்களுடன் ஆழமாக இணைந்திருக்க முயற்சிப்பீர்கள்.
நீங்கள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியான நபராக வெளிக்காட்டிக் கொள்வீர்கள். வாழ்க்கையில், உங்களின் வேலை, கல்வி, குடும்பம் அல்லது நண்பர்கள் என நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ, அவற்றிற்கு உங்களை முழுமையாக அர்ப்பணிக்கிறீர்கள். இப்படியான எண்ணம் நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவுகிறது. மொத்தத்தில் நீங்கள் அமைதியானவர். எப்பேற்பட்ட அழுத்தமான சூழ்நிலையிலும் உங்களை கூலாக வைத்துக் கொள்வீர்கள்.
டைப் - C
உங்கள் சுண்டு விரல் மோதிர விரலின் மேல் கோடு வரை இல்லாமல் குட்டையாக இருந்தால், நீங்கள் கலகலப்பான நபர் மற்றும் உங்களிடம் எந்த ஒரு எதிர்மறையும் நெருங்க முடியாது. நீங்கள் தனக்கு ஒருவர் செய்த தவறை எளிதில் மன்னிப்பதோடு, மறக்கவும் செய்வீர்கள்.
மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றை பேசமாட்டீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். மேலும் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான நபர். உங்கள் துணையுடன் அல்லது அன்புக்குரியவருடன் வாக்குவாதம் அல்லது சண்டை ஏற்பட்டால், முதலில் நீங்கள் போய் மன்னிப்பு கேட்டு பேசுவீர்கள். பரிச்சயம் உங்களுக்கு ஆறுதல் அளிப்பதோடு, உங்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
