இதுல உங்க செல்போன் லாக் எப்படி-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...

Personality Test: ஒருவரது பழக்கவழக்கங்கள் அந்நபரைப் பற்றிய குணாதிசயங்களைப் பற்றி தெரியப்படுத்தும். ஒருவர் நடந்து கொள்ளும் விதமும், அவரது பழக்கவழக்கங்களும் அவரை அறியாமல் செய்யக்கூடியவைகளாகும். ஒருவரது ஆழ்மனமானது ஒருவரது மூளை மற்றும் பழக்கவழக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே தான் ஒருவரது பழக்கவழக்கங்களை வைத்து அவரது குணாதிசயங்களை கணித்து கூற முடிகிறது.

தற்போது அனைவரது கையிலும் ஆன்ட்ராய்டு போன்கள் உள்ளன. இந்த மாதிரியான போன்களில் நிச்சயம் லாக் செய்யும் முறை இருக்கும். ஃபோனை லாக் செய்வதில் பல விதங்கள் உள்ளன. அவற்றில் ஒருவர் எந்த விதத்தை தேர்ந்தெடுக்கிறாரோ, அது அந்நபரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா? கீழே ஃபோனை லாக் செய்யும் விதமும், அது எந்த மாதிரியான குணாதிசயங்களைக் குறிக்கிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

Personality Test: Phone Lock Style Reveals Your Hidden Personality In Tamil

பேட்டர்ன் லாக்

நீங்கள் உங்கள் போனில் பேட்டர்ன் லாக் வைத்துள்ளீர்களானால், நீங்கள் மிகவும் சென்டிசிவ்வான நபர். மற்றவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுவீர்கள். மற்றவர்களிடம் நன்கு பேசி பழகும் நபராக நீங்கள் காணப்பட்டாலும், உண்மையில் அப்படி அல்ல. தோல்வி மற்றும் தனிமையைக் கண்டு பயப்படுவீர்கள். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டீர்கள். எப்போதும் சுதந்திரமாகவும், தைரியமாகவும் இருப்பீர்கள்.

மற்றவர்களிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டீர்கள். அதிக சகிப்புத்தன்மை கொண்டவர். அதிக சென்சிவ்வானவர் என்பதால் சிறு விஷயங்களையும் மனதளவில் பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள். அதனால்தான் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பொதுவாக உங்களை காயப்படுத்தாதபடி கவனமாக இருக்கிறார்கள்.

நம்பர் லாக்

உங்கள் ஃபோனில் நம்பர் லாக் வைத்துள்ளீர்களானால், நீங்கள் மற்றவர்களால் எளிதில் கணிக்க முடியாத நபராக இருப்பீர்கள். நீங்கள் எந்த நேரத்தில் எப்படி யோசிப்பீர்கள் என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. மிகவும் ரொமான்டிக்கானவர். மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் வருத்தமாக இருக்கும்போது, ​​உங்களுக்குள் விஷயங்களை வைத்திருக்க விரும்புவீர்கள். மற்றவர்கள் உங்களையும் உங்கள் உணர்வையும் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பீர்கள். உங்கள் ரகசியங்களை உங்களுக்கு மிகவும் பிடித்தவரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வீர்கள்.

கைரேகை லாக்

உங்கள் ஃபோனில் நீங்கள் கைரேகை லாக்கை பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் நீங்கள் இலகுவான மனதைக் கொண்டவர்கள். வெளியில் இருந்து பார்த்தால், நீங்கள் வலுவாகவும் சுதந்திரமாகவும் காட்சியளிப்பீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் அவ்வளவு வலிமையானவர் அல்ல.

மற்றவர்களிடம் அவ்வளவு எளிதில் மனம் திறந்து பேசமாட்டீர்கள். உங்களின் சொந்த கருத்துக்களை மதிப்பீர்கள். மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படமாட்டீர்கள். நீங்கள் மிகவும் அமைதியானவர். மிகவும் பகுத்தறிவு உடையவர். ஆனால், நீங்கள் ஒரு முடிவை எடுக்க நிறைய நேரம் எடுப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, January 19, 2024, 21:05 [IST]
Desktop Bottom Promotion