Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
A, B, O, AB - இதுல உங்க இரத்த பிரிவு என்னன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின சில ரகசியங்களை சொல்றோம்...
Blood Type And Personality In Tamil: எப்படி ஒருவரது பிறந்த தேதி, ராசி, உடலமைப்பு மற்றும் பழக்கங்களைக் கொண்டு, அந்நபரின் குணாதிசயங்களை கூற முடிகிறதோ, அதேப் போன்று ஒருவரது இரத்த பிரிவைக் கொண்டும் அவரது குணங்கள் எப்படி இருக்கும் என்பதை அறியலாம் என்பது தெரியுமா?
பொதுவாக ஒருவரை திருமணம் செய்வதற்கு முன் இந்தியா போன்ற பல நாடுகளில், ஒருவரது ராசியைக் கொண்டு பொருத்தத்தை பார்ப்பார்கள். ஆனால் ஜப்பானில் சற்று வித்தியாசமான வழியில் பொருத்தத்தை பார்ப்பார்கள். அதுவும் அவர்கள் ஒருவரு ராசியைக் கொண்டு பார்க்காமல், இரத்த பிரிவைக் கொண்டு பொருத்தம் பார்ப்பார்கள் என்பது தெரியுமா?

ஆம், ஒருவரது இரத்தப் பிரிவு அவரது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தும். இரத்தப் பிரிவுகளில் மொத்தம் 4 வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆன்டிஜென்களின் அடிப்படையில் வேறுபடும். ஆன்டிஜென்கள் என்பவை இரத்த சிவப்பணுக்களின் மேலே காணப்படும் ஒரு பொருள். இது ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை அறிய உதவுகிறது.
இப்படி இரத்த பிரிவைக் கொண்டு ஒருவரது குணங்களை அறிவது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லாவிட்டால், பலர் இரத்தப் பிரிவைக் கொண்டு கணித்து கூறப்படும் குணங்கள் அனைத்தும் உண்மை என்று கூறுகின்றனர். இப்போது ஒவ்வொரு இரத்த பிரிவினரின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதைக் காணலாம்.
இரத்த பிரிவு ஏ
ஏ வகை இரத்த பிரிவினர் மிகவும் சென்சிடிவ்வானவர்கள், அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் மிகவும் புத்திசாலி. மேலும் இவர்கள் மிகவும் பொறுமையானவர்கள், விசுவாசமானவர்கள், அமைதி விரும்பிகள் மற்றும் யாருடனும் சண்டை போட விரும்பமாட்டார்கள். இவர்கள் விதிகளை தவறாமல் பின்பற்றுவார்கள்.
முக்கியமாக இவர்கள் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், அதை நன்கு யோசித்து தான் எடுப்பார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒழுங்காக செய்யக்கூடியவர்கள். ஆனால் இவர்களால் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியாது. இவர்கள் எப்போதும் சுத்தமாக இருக்க விரும்புவார்கள். அதனால் தான் OCD பிரச்சனை உள்ள பெரும்பாலானோர் இந்த இரத்த பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
முக்கியமாக இந்த இரத்த பிரிவினர் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஏனெனில் இவர்களின் உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன் அதிகளவில் உள்ளன.
இரத்த பிரிவு பி
பி வகை இரத்த பிரிவினர் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள் மற்றும் விரைவில் முடிவெடுக்கக்கூடியவர்கள். இவர்கள் தாங்கள் செய்யும் எந்த ஒரு காரியத்திலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டுமென்ற ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த வகை இரத்த பிரிவினர் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதில் சிறந்தவர்கள் அல்ல.
மேலும் இவர்கள் நம்பகமான நல்ல நண்பர்களை உருவாக்குவதில் சிறந்தவர்கள். சற்று சுயநலத்துடனும், சில காரியங்களில் மற்றவர்களுடன் ஒத்துழைத்து போகாமல் இருப்பதாலும், மற்றவர்களிடம் இருந்து சற்று ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.
முக்கியமாக இவர்கள் என்ன தான் நல்ல உள்ளத்தைக் கொண்டிருந்தாலும், சமூகத்தில் இவர்களது மோசமான குணங்கள் தான் அதிகம் வெளிப்படுத்தப்படும். இதன் காரணமாக இவர்கள் எப்போதும் தனிமையிலேயே இருப்பார்கள்.
இரத்த பிரிவு ஏபி
ஏபி வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்கள், ஏ மற்றும் பி வகை இரத்த பிரிவினர்களின் கலவையாகும். இந்த இரத்த வகையைச் சேர்ந்தவர்கள் சற்று சிக்கலானவர்கள். இவர்கள் ஏ வகையினர் போன்று வெட்கப்படக்கூடியவர்களாகவும், பி வகையைப் போன்று வெளியே நன்கு சுற்றக்கூடியவர்களாகவும் இருப்பர்.
இவர்கள் எப்போதும் மூன்றாம் நபர்களிடம் தங்களின் உண்மையான குணாதிசயத்தை வெளிப்படுத்தமாட்டார்கள். இதனால் இவர்களை முழுமையாக அறிந்து நடந்து கொள்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதோடு, இந்த பிரிவினர் அரிதான இரத்த வகையைச் சேர்ந்தவர்கள்.
முக்கியமாக இந்த இரத்த வகையினர் மிகவும் அழகானவர்கள் மற்றும் எளிதில் நண்பர்களை உருவாக்குவார்கள். இந்த இரத்த வகையினர் உள்ள இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். இவர்களால் மன அழுத்தத்தைக் கையாள முடியாது.
இரத்த பிரிவு ஓ
ஓ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் தைரியமானவர்கள், வெளியே நன்கு சுற்ற விரும்புவார்கள். இவர்கள் எப்போதும் தங்கள் நிலையை உயர் நிலையில் வைத்திரக்க விரும்புவார்கள் மற்றும் அதற்கான அனைத்துவிதமான முயற்சிகளையும் எடுப்பார்கள்.
இவர்களிடம் சிறந்த தலைமைத்துவ பண்புகள் இருக்கும். சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் இவர்கள் மனம் தளரமாட்டார்கள். இவர்களை பலர் சுயநலவாதியாக நினைக்கலாம். இவர்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் அன்பானவர்கள். இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். கடினமான சூழ்நிலைகளில் மற்ற இரத்த வகையினரை விட இவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள்.
எந்த இரத்த வகையினருக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள்?
* ஓ இரத்த வகையினருக்கு ஏபி மற்றும் ஓ இரத்த வகையினர் பொருத்தமாக இருப்பார்கள்.
* ஏ இரத்த வகையினருக்கு ஏபி மற்றும் ஏ வகை இரத்த வகையினர் பொருத்தமாக இருப்பார்கள்.
* பி இரத்த வகையினருக்கு ஏபி மற்றும் பி இரத்த வகையினர் பொருத்தமாக இருப்பார்கள்.
* ஏபி இரத்த வகையினருக்கு அனைத்து இரத்த பிரிவினரும் பொருத்தமாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications